
வழக்கம் போல கைநிறைய புத்தகங்கள் எடுத்து வந்தேன் நூலகத்தில் இருந்து. நல்ல படமா இருக்கணும், வரையறதுக்கும் எளிதா இருக்கணும் என்ற கோணத்திலேயே, எதை வரையலாம் என அத்தனை புத்தகங்களையும் (படம்) பார்த்தேன். இந்த காளான்கள் சட்டென மனதை எட்டிப் பிடித்தன. நினைத்த மாதிரி எளிமையாவும் இருக்க, வரைய அமர்ந்தேன்.
6"x2" கட்டம் கட்டி ஒரு பென்சில் ஸ்கெட்ச். கட்டங்கள் அகற்றி முதலில் ஒரு மெல்லிய செபியா வாஷ் (Brown கலர்). அது காய்ந்தவுடன், அதை விட கொஞ்சம் அடர்த்தியான வாஷ். மூன்றாவது ஆங்காங்கே இருக்கும் மிக அடர்த்தியான Brown மற்றும் Black கலவை. நினைத்த அளவு ஈஸியா இல்லை. இரண்டு மணி நேரங்கள் ஒரே சிந்தனை என கட்டிப் போட்டது காளான்கள் :))
12 comments:
நல்ல இருக்கிற்து
அருமை சதங்கா.
//இரண்டு மணி நேரங்கள் ஒரே சிந்தனை என கட்டிப் போட்டது காளான்கள்//
ஒவ்வொரு சித்திரத்தையும் ஒரு தவம் போல் செய்து முடிக்கிறீர்கள். இது மனதை ஒருமுகப் படுத்தும் தியானமும் கூட. வாழ்த்துக்கள் சதங்கா.
இரண்டு மணி நேரம் ஒரே சிந்தனையில் ஆக்க பூர்வமான வேலையைச் செய்தமை பாராட்டுக்குரியது. நல்லாருக்கு - நல்வாழ்த்துகள்
நல்லா இருக்குங்க சதங்கா. அருமை
திகழ்மிளிர் said...
//நல்ல இருக்கிற்து//
மிக்க நன்றி நண்பரே.
ராமலக்ஷ்மி said...
//இது மனதை ஒருமுகப் படுத்தும் தியானமும் கூட. வாழ்த்துக்கள் சதங்கா.//
நிச்சயம். ஆனா நீங்க சொல்ற அளவிற்கு இன்னும் ஞானியாகி விடவில்லை :)))
ம்ம்ம் ரெண்டு மணி நேரம்...தியானம்தான் வரைதலும்...வாழ்த்துக்கள்..
அன்புடன் அருணா
cheena (சீனா) said...
//இரண்டு மணி நேரம் ஒரே சிந்தனையில் ஆக்க பூர்வமான வேலையைச் செய்தமை பாராட்டுக்குரியது. நல்லாருக்கு - நல்வாழ்த்துகள்//
வாழ்த்திற்கும், பாராட்டுக்கும் நன்றிகள்.
மின்னல் said...
//நல்லா இருக்குங்க சதங்கா. அருமை//
மிக்க நன்றிங்க.
அன்புடன் அருணா said...
//ம்ம்ம் ரெண்டு மணி நேரம்...தியானம்தான் வரைதலும்...வாழ்த்துக்கள்..
அன்புடன் அருணா//
ஆமாங்க, ஒரு வித மோன நிலை தான். வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி.
சதங்கா உங்கள் ஓவியங்கள் மிகவும் அருமை.. உங்களிடமிருந்து நிறைய கற்றுக்கொள்ளனும்.
Mrs.Faizakader said...
//சதங்கா உங்கள் ஓவியங்கள் மிகவும் அருமை.. உங்களிடமிருந்து நிறைய கற்றுக்கொள்ளனும்.//
நன்றி ! நன்றி !! கற்று தரும் அளவிற்கு இன்னும் ஞானம் போதாது என்று சொல்லிக்கறேன்.
நேரம் கிடைக்கையில், அதற்கான பயிற்சியும் சொந்தமாக எடுத்துக் கொள்கிறேன். நேரம் வரும்போது களத்தில் இறங்குவோம் என்ற நம்பிக்கையுடன்.
Post a Comment