Sunday, February 8, 2009

எங்க வீட்டு குட்டி தேவதை - Charcoal & Pencil



பொதுவா புகைப்படங்கள் பார்த்து வரைந்து பழக்கம் இல்லை. ரொம்ப நாள் முயற்சி செய்யணும் என்ற எண்ணம் காற்றில் கரைந்த வண்ணம் இருந்தது. கரைய விட்டிருவோமா என்ன ?! குசேலனுக்கு அப்புறம், எங்க வீட்டு குட்டி தேவதையின் படம். சக்கி‍சீஸஸில் எடுத்தது. வரைபடம் போலவே இருந்த (இப்ப புரிஞ்சிருக்குமே சூட்சுமம் :))) அந்தப் படம் என்னை வெகுவாக ஈர்த்தது.

வழக்கம் போல கட்டம் கட்டி (5" x 4") 2b பென்சில் அவுட்லைன். பிறகு கட்டமெல்லாம் அகற்றி, சார்கோலில் தலைமுடி. அப்புறம் 2b பென்சிலில் ஷேட்ஸ். பேப்பர் கொண்டு ஷேட்ஸ் நல்லா ப்லென்ட் பண்ண, ஓரளவுக்கு எங்க வீட்டு குட்டி தேவதை போல (90% என்று சொல்லலாம்) வ‌ந்தது படம். எல்லாம் ஒரு மூன்று மணிநேரங்கள் ஆனது.

படத்தை முடித்து, அவங்க கிட்ட ஆவலா காட்டினா, அவங்களுக்கு அந்த அளவிற்கு நிறைவு இல்லை :((

26 comments:

துளசி கோபால் said...

நல்லா இருக்குங்க.

புகைப்படத்திலிருந்து வரைவது கொஞ்சம் கஷ்டம்தான்,இல்லே?

வடுவூர் குமார் said...

நன்றாகத்தான் இருக்கு.
ஒருவேளை கலரில் இல்லை என்பதால் உங்க தேவதைக்கு பிடிக்கவில்லையோ என்னவோ!

நந்து f/o நிலா said...

சூப்பரா இருக்குங்க சதங்கா.

//படத்தை முடித்து, அவங்க கிட்ட ஆவலா காட்டினா, அவங்களுக்கு அந்த அளவிற்கு நிறைவு இல்லை :((//

பொதுவா நம்ம மக்கள்கிட்ட போட்டோவா இருந்தா கூட பேண்டசியா இருந்தாத்தான் நல்லா இருக்குன்னு சொல்வாங்க. சோ ட்ராயிங்கள்ளாம் ரொம்ப லைட்டா எடுத்துக்குவாங்க. என்ன பண்றது :(

ஆனா உயிரோட்டம்ன்னா போட்டோவில் இல்லாதது ஓவியத்துல வந்துடும். அது இதுலயும் இருக்குங்க.

எனக்கு ஓவியம் வரையறதுக்கு அவ்ளோ இஷ்டம். ஆனா பாருங்க ஒரு கோடு கூட நேரா போட வராது :(.

உங்க படத்தை பாத்தா ஏக்கமா இருக்கு.

ராமலக்ஷ்மி said...

குட்டி தேவதை மாதிரியேதான் இருக்கிறது ரொம்ப அழகாய் என நான் சொன்னேன்னு சொல்லுங்க. சரி, இப்போ தெரியாது, பின்னாளில் விவரம் புரியும் போது ‘என் அப்பா வரைந்ததாக்கும்’ எனப் பொக்கிஷமாய் பாதுகாப்பாள் பாருங்க! அதுவரை இந்தப் போக்கிஷத்தை நீங்க பத்திரமா ஃப்ரேம் செய்து போட்டு வைங்க.

அன்புடன் அருணா said...

ஐயோ அழகு கவிதையாட்டம் இருக்கு...கண்திருஷ்டி ப்அடப் போவுது...சுற்றிப் போடுங்க....
அன்புடன் அருணா

thamizhparavai said...

super

KABEER ANBAN said...

நல்லா வந்திருக்கு சதங்கா :)

//அவங்களுக்கு அந்த அளவிற்கு நிறைவு இல்லை //

என் அனுபவத்தில அவர்கள் சொல்வது நிஜமும் கூட. படத்தை வரையும் நேரத்தில என்னதான் செய்தாலும் வித்தியாசங்கள் (அல்லது வேறுபாடுகள்) வரைபவர்க்கு சட்டென்று பிடிபடுவதில்லை. ஆறுமாசம் கழிச்சு பார்த்தா அப்புறம் அது புரியும் :))

அதுக்காக முயற்சிகளை விட்டுவிட முடியுமா ? தொடருங்கள்

நானானி said...

//‘என் அப்பா வரைந்ததாக்கும்’ எனப் பொக்கிஷமாய் பாதுகாப்பாள் பாருங்க!//
இதே...இதே...!!

Anonymous said...

சூப்பரா இருக்குங்க.....

Anonymous said...

:)

சதங்கா (Sathanga) said...

துளசி கோபால் said...

//நல்லா இருக்குங்க.//

மிக்க நன்றி டீச்சர்.

//புகைப்படத்திலிருந்து வரைவது கொஞ்சம் கஷ்டம்தான்,இல்லே?//

எங்க ஆரம்பிக்கறது, எப்படி முடிக்கிறது என்ற குழப்பத்தை விட, எதை எடுப்பது, எதை விடுப்பது என்று தான் தோணும். ஒரு சில டீடெய்ல் போட்டாலே போதும், படம் அருமையா வரும். அது தான் இன்னும் பிடிபடலை.

சதங்கா (Sathanga) said...

வடுவூர் குமார் said...

//நன்றாகத்தான் இருக்கு.
ஒருவேளை கலரில் இல்லை என்பதால் உங்க தேவதைக்கு பிடிக்கவில்லையோ என்னவோ!//

நானும் இதையே தான் நினைத்தேன். ஆனா அவங்களைப் போல படம் இல்லை என்கிற மாதிரி தான் பதில் வருகிறது.

சதங்கா (Sathanga) said...

நந்து f/o நிலா said...

//சூப்பரா இருக்குங்க சதங்கா.//

//ஆனா உயிரோட்டம்ன்னா போட்டோவில் இல்லாதது ஓவியத்துல வந்துடும். அது இதுலயும் இருக்குங்க.//

மிக்க‌ ந‌ன்றிங்க.

//எனக்கு ஓவியம் வரையறதுக்கு அவ்ளோ இஷ்டம். ஆனா பாருங்க ஒரு கோடு கூட நேரா போட வராது :(.

உங்க படத்தை பாத்தா ஏக்கமா இருக்கு.//

இந்த‌ த‌ள‌த்தை ஆர‌ம்பித்த‌ போது வலையுல‌க‌ பிர‌ப‌ல‌ங்க‌ள், துள‌சி டீச்ச‌ரும், சீனா ஐயாவும் இன்னும் சிலரும் (சான்ஸ் கெடச்சா விட்ரமாட்டோம்ல :))) ... உங்க‌ளுக்குத் தெரிந்த‌தை ம‌ற்ற‌வ‌ங்க‌ளுக்கும் க‌ற்றுத் த‌ர‌லாமே என்றார்க‌ள். நான் முறையாக ஓவியம் பயின்றதில்லை, அதனால் வலையில் மேய்ந்து, நூலகத்தில் புத்தகங்கள் புரட்டி, ஓரளவுக்கு என்னை த‌யாராக்கிக் கொண்டும் இருக்கிறேன். குட்டீஸுக்கு தான் க்ளாஸ் எடுக்க‌லாம் என‌ நினைத்தேன், இப்ப‌ அப்பா அம்மாக்க‌ளுக்கும் எடுக்கலாம் போல‌ :))

சதங்கா (Sathanga) said...

ராமலக்ஷ்மி said...

//குட்டி தேவதை மாதிரியேதான் இருக்கிறது ரொம்ப அழகாய் என நான் சொன்னேன்னு சொல்லுங்க.//

க‌ண்டிப்பா சொல்றேன்.

// சரி, இப்போ தெரியாது, பின்னாளில் விவரம் புரியும் போது ‘என் அப்பா வரைந்ததாக்கும்’ எனப் பொக்கிஷமாய் பாதுகாப்பாள் பாருங்க! அதுவரை இந்தப் போக்கிஷத்தை நீங்க பத்திரமா ஃப்ரேம் செய்து போட்டு வைங்க.//

நாங்களும் (தங்க்ஸும்) நினைத்தோம். நீங்கள் சொல்லிவிட்டீர்கள்.

சதங்கா (Sathanga) said...

அன்புடன் அருணா said...

//ஐயோ அழகு கவிதையாட்டம் இருக்கு...

மிக்க‌ ந‌ன்றிங்க‌.

//கண்திருஷ்டி ப்அடப் போவுது...சுற்றிப் போடுங்க....
அன்புடன் அருணா//

சுற்றி தான் போடணும் போல. பிறந்தநாள் அழைப்பிற்கு சென்று வந்ததிலிருந்து கொஞ்சம் டல்லா தான் இருக்காங்க :(((

சதங்கா (Sathanga) said...

தமிழ்ப்பறவை said...

//super//

thanks for the compliment

சதங்கா (Sathanga) said...

KABEER ANBAN said...

//நல்லா வந்திருக்கு சதங்கா :)//

மிக்க நன்றிங்க.

//வரைபவர்க்கு சட்டென்று பிடிபடுவதில்லை. ஆறுமாசம் கழிச்சு பார்த்தா அப்புறம் அது புரியும் :))//

மிகச் சரி. என் அனுபவமும் இதுவே. நாலைந்து நாள் கழித்துப் பார்க்கும் போதே சில தவறுகள் புலப்படும்.

//அதுக்காக முயற்சிகளை விட்டுவிட முடியுமா ? தொடருங்கள்//

நிச்சயமா !! ஒரு சிறந்த ஓவியர் சொல்லும்போது கேட்காமல் இருக்கமுடியுமா ? :)))

சதங்கா (Sathanga) said...

நானானி said...

//
//‘என் அப்பா வரைந்ததாக்கும்’ எனப் பொக்கிஷமாய் பாதுகாப்பாள் பாருங்க!//
இதே...இதே...!!
//

வாழ்த்துக்கள் கண்டு மனம் மகிழுதே !

சதங்கா (Sathanga) said...

கவின் said...

//சூப்பரா இருக்குங்க.....//

பாராட்டுக்கும், ஸ்மைலிக்கும் மிக்க நன்றிங்க.

நாகு (Nagu) said...

படம் நல்லாயிருக்கு. ஆனா உங்க குட்டி மாதிரி இல்லை :-)

அவளோட துறுதுறு கண்ணு படத்துல கொண்டுவர அந்த ரவிவர்மாதான் வரனும்....

Jayakanthan - ஜெயகாந்தன் said...

S, I share D's opinion.. (70%) But kudos for the effort.

சதங்கா (Sathanga) said...

நாகு (Nagu) said...

//அவளோட துறுதுறு கண்ணு படத்துல கொண்டுவர அந்த ரவிவர்மாதான் வரனும்....//

கஷ்டம் தான் அது !!!

படத்தில் கொண்டு வருவதும், ரவிவர்மாவை கொண்டு வருவதும் :))

சதங்கா (Sathanga) said...

Jayakanthan - ஜெயகாந்தன் said...

//S, I share D's opinion.. (70%) But kudos for the effort.//

I agree ... பாராட்டுக்கு நன்றிகள்.

cheena (சீனா) said...

சதங்கா - ரொம்ப நல்லா இருக்கு - அவங்களுக்குத் திருப்தி இல்லன்னா பரவால்ல - இன்னொரு நாள் பாத்தாங்கண்ணா அப்பா நல்லாருக்குன்னு சொல்லிடுவாங்க - அது மழலையரின் குணம்

அப்புறம் ராமலக்ஷ்மி சொல்லி நானானி வழை மொழிஞ்சட்த நானும் அப்படியே ரிப்பீட்டுக்கறேன்

சதங்கா (Sathanga) said...

cheena (சீனா) said...

//சதங்கா - ரொம்ப நல்லா இருக்கு -//

மிக்க நன்றி.

//அவங்களுக்குத் திருப்தி இல்லன்னா பரவால்ல - இன்னொரு நாள் பாத்தாங்கண்ணா அப்பா நல்லாருக்குன்னு சொல்லிடுவாங்க - அது மழலையரின் குணம்//

ஆமா ஆமா. ரசிப்பிற்கும் கருத்திற்கும் நன்றிகள் பல.

சமுத்ரா said...

nice