Thursday, March 20, 2008

கழுகு - நிழலோவியம் - Water Color


ஏதாவது ஒரு படம், பார்க்கறதுக்கு அழகா இருக்கணும், வரையறதுக்கும் எளிதா இருக்கணும் என்று யோசித்து இந்தப் படத்தை வரைய அமர்ந்தேன்.

மூன்றே வண்ணங்களில், அரை மணி நேரத்தில் வரைந்த படம்.

மாலைச் சூரியனின் ஆரஞ்சு வானத்தில் கூட்டை நோக்கி விரையும் கழுகு, நம்ம வீட்டுச் சுவற்றை இப்போது அலங்கரிக்கிறது :)

Monday, March 10, 2008

திரு. சாம் வால்டன் - Pen and Inkஇந்த U.S. மண்ண மிதிச்சு, கடந்த மூன்று வருடங்களில், சிறு பெறு நகரங்கள் சிலவற்றில் வசித்து இப்ப ஒரு சிற்றூரில் வசித்து வருகிறேன். அனைத்து இடங்களிலும் முதலில் shopping செய்யணும் என்றால், அங்கிருக்கும் நண்பர்களிடம், "இங்க பக்கத்துல எங்க வால்-மார்ட் இருக்கு ?" என்று தான் ஆரம்பிக்கும்.

வால்-மார்ட்டின் தந்தை திரு. சாம் வால்டன் அவர்களின் படம் ஒரு புக்மார்க்கில் கிடைத்தது. மிக அற்புதமாக அந்த ஓவியர் வரைந்திருந்தார். நாமும் இதனை வரைய வேண்டும் என்று பார்த்த மாத்திரத்திலேயே முடிவு செய்தேன்.

இந்த மாதிரி கோட்டு ஓவியங்கள் பார்க்கறதுக்கு எளிதாய் இருந்தாலும், வரையும் போது விரல் ஒடியும் அளவுக்கு கடினமான ஒன்று. தேவையானது "பொறுமையோ பொறுமை" மட்டுமே !!! கொஞ்சம் அப்படி, இப்படி விலகினாலும் படம் அதோ கதி தான். மற்ற வர்ண ஓவியங்களில் தவறுகளைச் சரி செய்ய ஏகப்பட்ட வாய்ப்புக்கள் அதிகம், ஆனால் கோட்டோவியங்களில் அப்படி இல்லை. இந்த‌ மாதிரி ப‌ட‌ங்க‌ளை எடுத்து வ‌ரைவ‌து ஒரு Challenging-ஆ, அதே நேரம் Intersting-ஆகவும் இருக்கும்.

இந்தப் பதிவையும் பாருங்க :

http://sithiram-pesuthadi.blogspot.com/2008/03/donald-daisy-ducks-water-color-work.html

Sunday, March 9, 2008

Donald & Daisy ducks - Water Color - Work shop

ஃப்ளாஷ்பேக் சிந்தனைகள் எப்படி கவிதைகளாய், கட்டுரைகளாய் வெளிப்படுகிறதோ, அதே போல் வரைதலிலும் சில ப்ளாஷ்பேக் படங்கள் இருப்பதை, இந்த முறை நூலகத்திற்குச் சென்றபோது உணர முடிந்தது.

குட்டீஸ்க்கு புத்தகங்கள் எடுக்கும்போது இவையும் கண்ணில் பட்டன. பள்ளி பருவத்தில் நிறைய வரைந்த படங்களுள் Micky Mouse, Donal Duck வகையும் ஒன்று. ஆனால் காலப்போக்கில், அவை நினைவில் இருந்து அகன்று விட்டன. அப்போது Daisy Duck இருந்ததில்லை.

பழைய ஆர்வம் திரும்பப் பெற்று, டோனல்டும், டெய்ஸியும் சந்தோசமாய் நடைபோடுவதை வரைந்திருக்கிறேன்.

முந்தைய பதிவுகளில் இருந்து சற்று மாறுபட்டு, இந்தப் பதிவில், படம் ஆரம்பம் முதல் முடிவு வரை ஏனைய படங்களுடன் விளக்கியிருக்கிறேன். உங்களுக்குப் பயனுடையதாய் இருக்கலாம் என்ற நினைப்பில் =;) வரைய ஆர்வம் உள்ளவர்கள் மேலும் வாசியுங்கள். இதுவரை வரைந்ததே இல்லை என்றாலும், முயற்சி செய்து பார்க்க அழைக்கிறேன்.

ஒரு ரூலர், பென்சில், ரப்பர் (Eraser), நீர் வர்ணப் பெட்டி, மிகச் சிறிய பெட்டி போதும் (சுமார் 12 வண்ணங்கள்). Round ப்ரஷ்கள் 0, 1 & 4. பேலட் (குழிகள் பல கொண்டு, வெவ்வேறு வர்ணங்கள் கலக்க ஏதுவான ஒன்று). சிறு குடுவையில் நீர். Tissue paper அல்லது பழைய துணி. இவையெல்லாம் பக்கத்தில் எடுத்துக் கொண்டு, ஒரு ஆறு மணி நேரத்தையும் ஒதுக்கிக் கொண்டு ஆரம்பியுங்கள். Wish you all the best !

இந்தப் படம் 7-1/2 க்கு 10 inches. முதலில், அசல் படத்தில் அளவுகள் இட்டுக் கொண்டு, பின் வரைய வேண்டிய தாளிலும். குறுக்கு நெடுக்காக ஒரு inch இடைவெளி விட்டு, குறித்து, கோடு போட்டுக் கொள்ள வேண்டும். மேலேயும், இடப்புறத்திலும் எண்கள் போட்டுக் கொள்ளவும். படத்தைப் பெரிது பண்ணி பார்த்தால் கட்டங்களும், எண்களும் நன்றாகத் தெரியும்.இன்ச் அளவுகளில் கோடுகள், எண்கள் போட்டு பாதி நிலையில் வரைந்த படம்.

அசலில் எந்தக் கட்டத்தில் என்னென்ன இருக்கிறதோ, அப்படியே நகலில் மென்மையாக வரையுங்கள். தவறு நேர்ந்தால், திருத்தி வரையும் போது கை கொடுக்கும். இங்கே இருந்து ஆரம்பிக்கணும் என்று இல்லை. எந்தக் கட்டதிலும் ஆரம்பித்து, பொறுமையாக கட்டங்களை நிரப்பினால், படம் நன்றாக வரும்.உருவங்கள் முற்றிலும் வரைந்த நிலையில் படம்.


வரைதல் நிறைவுற்ற பின், அதை ஒரு முறை சரி பார்த்துக் கொள்ளுங்கள். எல்லாம் நிறைவாய் இருக்க, தேவையில்லாத கோடுகளை அழித்து விடுங்கள். அப்படிச் செய்யும் போது, படமும் சில இடங்களில் அழிபடும். அதன் மேல் மீண்டும் வரைந்து கொள்ளுங்கள்.தேவயற்ற கோடுகள் நீக்கி, வர்ணத்திற்குத் தயாராய் இருக்கும் படம்.

வர்ணத்தில் எப்போதுமே மெல்லிய (Light colors first) வண்ணத்தில் இருந்து ஆரம்பியுங்கள். இந்தப் படத்தில் மஞ்சள். மஞ்சளை பேலட்டில் பிதுக்கிக் கொண்டு, சிறிது நீர் விட்டு நன்றாக கலக்கி, ப்ரஷ்ஷில் வர்ணம் ஒரு stiff-ஆக இருக்கும் வரை பேலட்டில் வழித்து, வர்ணம் பூசவும்.

பின் அடுத்த மெல்லிய வர்ணம் என்று தொடருங்கள். வர்ணம் பூச நிறைய இடமிருப்பின் பெரிய எண் கொண்ட ப்ரஷ் பயண்படுத்துங்கள். இடம் குறையக் குறைய ப்ரஷ்களின் எண்ணையும் குறைத்துக் கொள்ளுங்கள்.கறுப்பு வர்ணத்திற்கு (Finishing Touch) தயாராய் இருக்கும் படம்.


அவுட்லைனிற்கு Round ப்ரஷ் 0 எடுத்து, எந்த அளவு பொறுமை கையாள முடியுமோ அந்த அளவிற்கு நேரம் எடுத்து அவுட்லைன் போடுங்கள். ஏனெனில் Finish touch அல்லவா ! இந்தப் படத்தையும், இதற்கு முந்தைய படத்தையும் ஒப்பிட்டுப் பாருங்கள்.வர்ணம் நிறைவு பெற்ற படம்

சில மணி நேரங்கள் விடுங்கள், படம் நன்றாகக் காயட்டும். பிறகு மேலும் தெரியும் பென்சில் கோடுகளை அழியுங்கள். படத்தைக் கணிணியில் ஏற்றி, சிற்சிறிய பிழை திருத்தி, Contrasting-ஆ ஒரு background-ம் போட்டால் அவ்வளவு தான்.

Sunday, March 2, 2008

கலைவாணி - Pen and Ink1953ம் ஆண்டு ஆனந்த விகடன் "தீபாவளி மலர்" புத்தகத்தில் வெளிவந்த படம். பதின்மூன்று ஆண்டுகள் முன்னர் இப்புத்தகத்தை பார்க்க நேர்ந்தது. இந்தப் படம் பார்த்தவுடன், வரைய வேண்டும் என்று மனம் ஆசை கொண்டது.

இரண்டு அல்லது மூன்று மணி நேரம் ஆகி இருக்கும் படம் வரைந்து முடிப்பதற்கு. படத்தை க்ளிக்கி பெரிதாகப் பார்க்கவும்.

Saturday, March 1, 2008

நளினம் - Pen and Inkஇந்தக் காலத்துப் பொண்ணுங்க அழகில் ஒரு உயரத்தில் இருந்தாலும், அந்தக் காலத்து பொண்ணுங்க அளவுக்கு இயற்கையான அழகில் கொஞ்சம் பின்தங்கி தான் இருக்கிறார்கள் என்பது என் எண்ணம் ! (அழகுப் பெண்கள் அடிக்க வராதீர்கள் :))

அதே போல இப்ப வருகிற தீபாவளி மலர், பொங்கல் மலர் புத்தகங்களில் விளம்பரங்கள் தவிர்த்து, வேறு எதுவும் சிறப்பு கவனம் பெறுவது போல இல்லை. அப்ப வந்த மலர்கள் அப்படி இல்லை. ஒரு collectible என்று சொல்லலாம். அத்தனையும் பொக்கிஷம்.

அப்படி எங்கள் தாத்தா காலத்தில் வாங்கிய கல்கி தீபாவளி மலர், இன்றும் வீட்டில் உள்ளது. அந்தப் புத்தகத்தில் வந்த இந்தப் படம், பார்க்கும் போதே ஓவியரின் ரசனை என்னையும் ஈர்த்தது. என்ன ஒரு நளினம். பதின்மூன்று ஆண்டுகள் முன்னர், அப்படியே அதைப் பார்த்து வரைந்த ஓவியம். அரை மணி நேரத்தில் பேனா கொண்டு வரைந்தது. படத்தை க்ளிக்கி பெரிதாகப் பாருங்கள், உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்