Monday, January 26, 2009

அரசியல் தலைவர்கள் - Caricature

தொன்னூற்றி ஐந்தில், ஆ.வி.யில் உதயன் அவர்களின் கைவண்ணத்தில் வந்த கேரிகேச்சர் ஓவியங்கள். பார்க்கறதுக்கு எளிதாக இருந்தாலும், ஒரு சில வரிகளிலேயே, இன்னார் என்று சொல்லும் அளவிற்கு வரைவது, கேரிகேச்சர் ஓவியங்களின் சிறப்பு எனச் சொல்லலாம்.

உதயன் அவர்களின் ஓவியங்களைப் பார்த்து, பிரமித்து, நான் வரைந்திருக்கிறேன் !!! அப்படியே, எப்படி இருக்குனு 'ஒரு வரி' சொல்லிட்டுப் போங்க ;))









Sunday, January 18, 2009

போகீமான் - Clay



நாம சாக்பீஸ்ல கொட கொடனு கொடயறத பார்த்துட்டு, எங்க வீட்டு குட்டீஸுக்கும் பயங்கர ஆசை. சரி பண்ணுங்கடா பசங்களானு விட்டால், லேசா மூனு மூலையில் கீறிவிட்டு, நட்டக்குத்தா நிக்க வச்சிட்டான் பையன். என்னாடா அதுனு கேட்டால், "ராக்கெட்" என்று பதில் வருகிறது :)))

போன வாரம் ஒரு நாள் "ஹாபி லாபி" போய் நமக்கு ஷாப்பிங் செய்தால், பசங்க அதுங்க பங்குக்கு ஒரு மினி ஷாப்பிங். அவங்க வாங்கியது கலர் கலரா களிமண் !!!

வெள்ளிக் கிழமை ஆரம்பிச்சாங்க. யானை, குதிரை, பூக்கள், பட்டாம்பூச்சி என போய், கடைசியில் அவங்க ஆஸ்தான போக்கீமானில் வந்து நிக்கறாங்க. சிவா தான் எல்லாம், தீக்ஷா அப்பப்ப அண்ணனைப் பார்த்து அதே போல செய்ய முயற்சி செய்வாள்.

வரிசையா செஞ்சு டி.வி. ரேக் மேல அடுக்கிட்டாங்க. அதிலிருந்து மூன்று சிற்பங்கள் உங்கள் பார்வைக்கு. பேர் எல்லாம் நமக்கு வாய்க்குள்ளயே வரமாட்டேன்கிறது. படத்தில இருக்கவங்க டியால்கா, மெகினீயம், க்ரோவைல்.

The Thinker - Water color



அகெஸ்டே ராடின் அவர்களின் உலகப் புகழ்பெற்ற இந்தச் சிலையைப் பார்க்கும் போதெல்லாம், நாமும் என்னத்த சாத்தித்துவிட்டோம் என்று சிந்தனை ஊற்றெடுக்கும். கற்றது கைமண்ணளவே, இன்னும் மேலே போ என்பது போல நம்மையும் சிந்திக்க வைக்கும் இச் சிலையை வரைந்தது 92ல்.

One Color, different tones முயற்சி செய்ததும் சற்று வித்தியாசமாக இருந்தது. நீரின் அளவை வர்ணத்தில் எவ்வளவு சேர்த்தால், லைட் கலரில் இருந்து டார்க் கலர் கிடைக்கிறது என கற்றுக் கொள்ளவும் முடிந்தது.

Free hand drawing மாதிரி, Free brush drawing என்று சொல்லலாம் இப்படத்தை :))

Monday, January 12, 2009

வெண் இதய அன்னங்கள் - Chalkpiece carving



வித்தியாசமா ஏதாவது செய்யனும் என்று யோசித்ததில், எப்போதோ எங்கோ பார்த்த இரு பளிங்கு அன்னங்கள் நினைவிற்கு வந்தன. இரண்டும் ஒன்றை ஒன்று பார்த்துக் கொண்டிருப்பது போல இருக்கும். அதன் நீண்டு வளைந்த கழுத்துக்கள் அப்படியே இதய வடிவில் ... இது தான் நம்ம சப்ஜெக்ட் இந்த சாக்பீஸ் கார்விங்கிற்கு.

எளிதாக எண்ணத்தில் தோன்றினாலும், செதுக்கிட்டே வரும்போது கழுத்து உடைந்துவிடும். இரண்டு மூன்று முறை தோற்று, பின்னர் பிறந்தன அன்னங்கள். இன்னும் டீடெய்ல் சேர்க்கலாம், உடைந்துவிடுமோ என பயம் :((

சென்ற பதிவில், செய்முறை விளக்கம் தந்தால் நன்றாக இருக்குமே என்றார் நானானிம்மா. இந்தப் பீஸும் முன்னரே செய்து விட்டதால், ஸ்டேஜ் பை ஸ்டேஜ் படம் எடுக்க முடியவில்லை.

இப்ப சிறு விளக்கம் பார்க்கலாம்: முதலில் சாக்பீஸை செவ்வகமாக செதுக்கிக் கொள்ளனும்.
இருபுறமும் சரி பாதி அளவிற்கு செதுக்கி .... செதுக்கி .... ம்.ஹிம். எழுத்தில் கொண்டு வரமுடியல ... அடுத்த கார்விங்கிற்கு படங்கள் நிச்சயம் :)))

Tuesday, January 6, 2009

சாக்பீஸ் ச்செய்ன் - Chalkpiece carving



எல்லோரும் பத்தாவது படிக்கும்போது கொஞ்சம் சீரியஸா ஆகிடுவாங்க. கல்வியின் அடுத்த கட்டத்தை நிர்ணயிக்கும் வகுப்பு அல்லவா ?!!! ஆனால், நானும் என் நண்பன் ஒருவனும் (வழக்கம் போல கடைசி பெஞ்ச் :)) ரொம்ப தீவிரமா சாக்பீஸ் கார்விங்கில் இறங்கி விடுவோம். கார்கள் தான் எங்க ஃபேவரிட். குட்டிக் குட்டியா அழகா வெண் கார்கள், ரெடி ஆக ஆக, மற்ற நண்பர்களுக்கு சப்ளை ஆகும். நம்ம கையில் எதுவும் நிற்காது.

வந்த உடனேயே, "யாராவது போய் ஆபீஸ் ரூமில் இருந்து சாக்பீஸ் வாங்கிட்டு வாங்க" என்பது சில ஆசிரியர்களின் வழக்கம் எங்கள் பள்ளியில். உங்கள் பள்ளியிலும் இருக்கலாம் !!! யாராவது முன் பெஞ்சில் இருந்து எழுந்தா கூட, "நீங்க உட்காருங்க, இந்தாப்பா கடைசி பெஞ்சு, யாராவது போங்க" என்று சொல்லுவார்கள்.

ஒரு சாக்பீஸ் வைத்துக் கொண்டு மற்றவற்றை ஆசிரியரிடம் நீட்டுவோம். முதலில் டெஸ்கில் வரைய பயன்படுத்திய சாக்பீஸ், திடீரென்று ஒருநாள் காராக மாறியது. ஜாமெட்ரி பாக்ஸ் தான் ஆஸ்தான டூல் பாக்ஸ். முதலில் ஷேப் மட்டுமே செய்த கார்கள், நாளடைவில் ஜன்னல் எல்லாம் குடைந்து நன்றாக வர ஆரம்பித்தது. வேறு எதுவும் உருவ‌ங்க‌ள் செய்த‌மாதிரி ஞாப‌க‌ம் இல்லை.

அந்த‌ விடுமுறை நாளில், ஊருக்குச் செல்கையில் ஒரு பாக்ஸ் சாக்பீஸ் வாங்கி சென்றேன். பிள்ளையார், க‌ணிணி, ம‌ண்ட‌ப‌ம், ஷோஃபா, டேபில், ஸ்டூல், செயின் இப்ப‌டி நிறைய‌ தோன்றிய‌தை எல்லாம் செய்ய‌ முடிந்த‌து.

இந்த முறை இந்தியா சென்ற போது, அவற்றை எல்லாம் எடுத்து வரலாம் எனப் பார்த்தால், அவ்வளவு டெலிகேட்டா இருந்தது. அதனால் ஊரில் பத்திரமாக வைத்து விட்டு, இங்கு வந்து புதிதாய் செய்யலாம் என எண்ணினேன்.

இங்க 'சைட்வாக் சாக்' என்று கொஞ்ச பெரிய சைஸில் சாக்பீஸ் கிடைத்தது. சில சிற்பங்கள் செதுக்க, எதிர்பார்த்த அளவிற்கு, சுமாராகவே வந்தன அவை.

அவற்றிலிருந்து "சாக்பீஸ் ச்செய்ன்" உங்கள் பார்வைக்கு. முன்னெல்லாம் ஒரே நாளில் செய்ய முடிந்தது. இப்பொழுது சம்சாரி ஆகி, குடும்பமும் பெரிதாக :))) நேரம் அதிகம் கிடைப்பதில்லை. அதனால் இதை சுமார் இரண்டு மணி நேரங்கள் ஒரு நாளைக்கு எடுத்து, மூன்று நாட்கள் ஆனது நிறைவு செய்ய.

Sunday, January 4, 2009

கவாஸ்கர், ரவி சாஸ்த்ரி, கபில் தேவ் இவர்களுடன் K.J.யேசுதாஸ்

இந்த முறை இந்தியா சென்று திரும்புகையில் நிறைய புத்தகங்கள் எடுத்து வரணும் என்று நினைத்தேன். அது முடியவில்லை. புகைப்படங்கள் கூட எடுத்துவரமுடியவில்லை.

அப்பொழுது எனது ஷெல்ஃப் தோண்டுகையில், அதில் அந்த காலகட்டத்தில் வரைந்த படங்கள் சில ஒட்டி வைத்திருந்தேன். செல் அரித்து, அது கூட ஒரு கலை நயம் போல் காட்சி தந்தது. அப்படியே டிஜிட்டலில் க்ளிக்கிக் கொண்டேன்.

என்பது, தொன்னூறுகளின் கிரிக்கெட் நாயகர்கள் கவாஸ்கர், ரவி சாஸ்த்ரி, கபில் தேவ் மற்றும் பின்னணிப் பாடகர் கே.ஜே.யேசுதாஸ் அவர்கள். அந்தப் படம் இங்கே உங்கள் பார்வைக்கு. படத்தைக் க்ளிக்கி பெரிதாக்கி பாருங்கள்.

Saturday, January 3, 2009

வீடு - Pencil Sketch




தொன்னூற்றி நாலில், தமிழக வீடுகள் என்று குமுதத்தில் வந்த படம் என்று நினைக்கிறேன். முழுக்க பென்சில் தான். 2b பெசில் கொண்டு, அதைப் பார்த்து வரைந்த படம். ஷேட் வேண்டும் என்கிற இடத்தில், திக்கா போட்டு, பிறகு பேப்பர் வைத்து ஸ்மட்ஜ் செய்தேன். இப்பத் தானே பல எண்களில் பென்சிலும் கிடைக்கிறது :))

கிராமத்தில் எங்க வீடும் இதே போன்று தான் இருக்கும். நீண்டு அகன்ற தூண்கள் (எல்லாம் பர்மா தேக்கு), இறங்கிய தாழ்வாரம். முற்றத்தில் விழும் சூரிய வெளிச்சம் ... இப்படி எல்லாம் இப்படத்தில் இருக்க, அதுவே வரையவும் தூண்டியது.

அப்படியே எப்படி இருக்குனு ஒருவரி சொல்லிட்டுப் போங்க :))