Saturday, December 15, 2007

ஸ்பன்ஞ்பாப் ஸ்கொயர் பேண்ட்ஸ் - Water color

குட்டிப் பசங்களுக்கு இந்த ஸ்பன்ஞ்பாப் என்றால் கொள்ளைப் பிரியம். எங்க வீட்டில இருக்க குட்டீஸும் சேர்த்துத் தான். பெரியவனுக்காக வரைந்து (22" x 28") அவன் ரூமில் மாட்டியிருக்கும் படம். இப்படத்தை இப்போ உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். நல்லாயிருந்தா ஒரு வார்த்தை பின்னூட்டிட்டுப் போங்க :)

Thursday, November 29, 2007

Grey Wolf - Pen and Ink



பொதுவா, இந்த மாதிரி மிருகங்களை வரையும் போது, நம்மைப் பார்ப்பது போல வரைவது சற்றுக் கடினம். அதனால இந்தப் படத்தைப் பார்க்கும்போது அது பிடித்திருந்ததால் வரைய ஆரம்பித்தேன். பின்னர் தான் தெரிந்தது, தோலின் மடிப்பு / சுருக்கத்துக்கேற்ப சிறு வரிகள் கடுமையாக இருந்ததையும். அப்படியே வரைந்திருக்கிறேன். நீங்கள் தான் சொல்ல வேண்டும் படம் எப்படி இருக்கிறது என்று.

Friday, November 23, 2007

அணில் - Pen and Ink



அணில் தாவும் போதோ அல்லது அமைதியாய் ஏதாவது தேடிக் கொண்டிருக்கும் போதோ - ஏதேனும் சத்தம் கேட்டால், வாலை புஸ்ஸென்று வைத்துக் கொண்டு, கண்களையும் உருட்டி அங்குமிங்கும் பார்த்து கொள்ளும். அந்தக் காட்சி பார்ப்பதற்கு ரொம்ப அழகாய் இருக்கும். ஒரு புத்தகத்தில் அப்படி இருந்த காட்சியைப் பார்த்து வரைந்தது.

Monday, November 19, 2007

மர வீடு - Pen and Ink

இங்கு Richmond, Virginia வந்த புதிதில், இரண்டு ஆண்டுகள் முன்னர் வரைந்த படம். வழக்கம் போல நூலகத்தில் இருந்து எடுத்து வந்த புத்தகத்தில், பார்த்தவுடனேயே வரையத் தூண்டிய படம். கோட்டோவியம் தான், இருந்தாலும் அந்த shades தான் வரைவதற்கு inspiration-ஆக இருந்தது.

Tuesday, November 13, 2007

சித்திரம் பேசுதடி - துவக்கம்

வலையுலக அன்பர்கள் அனைவருக்கும் வணக்கம் !

சித்திரக்கலை மீது எனக்கு பால்ய பருவத்தில் இருந்தே ஆர்வம் உண்டு. எனது அப்பா நன்றாக வரையக்கூடியவர். அதனாலேயே ஆர்வம் எனக்கும் வந்திருக்கலாம் ;-)

என் அப்பா, அவ்வப்போது வரையற எல்லாத்தையும் ஒரு இடமா சேர்த்துவை, பின்னாளில் உதவும் என்பார். அது இந்த வலையுலகமா அமைந்ததில் பெருமை கொள்கிறேன். முக்கியமா உங்களுடன் பகிர்ந்து, உங்கள் கருத்துக்களை அறியவும் ஆவலாய் உள்ளேன்.

நிறைய வரைந்திருந்தாலும், என்னிடம் இருக்கும் flashback படங்கள் சிலவே. அவற்றை scan செய்து அவ்வப்போது பதிவிடுகிறேன். சிலவற்றின் தரம் சிறிது குறைவாய் இருக்கும். பொருத்துக் கொள்ள வேண்டுகிறேன்.

மற்றும் எனது நண்பர்கள் வரைந்த படங்கள், என்னைக் கவர்ந்த ஓவியர்களின் படங்கள், எல்லாம் இங்கு பதியலாம் என்றிருக்கிறேன்.

சில படங்கள் :

கவியரசர் கண்ணதாசன் - Pencil Sketch
Charlie Chaplin - Water Color
Violin - Water Color
Expression - Pencil

வழக்கம்போல வந்து உங்கள் ஆதரவைத் தொடர்ந்து தருமாறு கேட்டுக் கொள்கிறேன் !!!

சார்லி சாப்ளின் - Water Color

இளங்கலைக் கல்லூரி முடித்து சென்னையில் சில மாதங்கள் இருந்தபோது ஒரு poster கடையில் இந்தப் படத்தைப் பார்த்தேன். பார்த்தவுடன் மனதை கொள்ளை கொண்ட படம். சார்லியின் expression வெகு அற்புதமாக உள்ள படம். அப்படியே வரைய முயற்சி செய்து வரைந்த படம்.

Violin - Water Color

இந்தியாவில் பள்ளிப் பருவத்தில் Dyanora TV விளம்பரத்தில் வந்த படம். படத்தைப் பார்க்கும்போதே சட்டென ஒரு ஈர்ப்பு ஆட்கொண்டது. அந்த உந்துதலில் வரைந்த படம். முக்கியமா இந்தப் படம் பிடிக்கக் காரணம் இந்த lighting effect தான்

Expression - Pencil Sketch

சிங்கையில் வசித்தபோது, சுமார் பத்து ஆண்டுகளுக்கு முன்னர் நான் வரைந்த பென்சில் ஓவியம். நூலகத்தில் இருந்து எடுத்து வந்த ஒரு புத்தகத்தில் இருந்தது இப்படம். பார்த்த அடுத்த நிமிடம் மனம் வரையத் தூண்டியது.

கவியரசர் கண்ணதாசன் - Pencil Sketch

நண்பர் சுப்ராவின் மனைவி கீதா அவர்கள் எடுத்த black and white புகைப்படம். மன்னிக்கவும், பென்சிலில் வரைந்த படம்.

உற்று நோக்கின் வித்தியாசம் தெரியும். அல்லது புகைப்படம் என்றே எண்ணத் தோன்றும். அந்த அளவிற்கு மிகத் துல்லியமாக வரைந்திருக்கிறார்.

கைவிரல்கள், தலைமுடி, கைக்கடிகாரம் ... இப்படி எல்லாமே very detailed.



மேற்சொன்ன நண்பர் சுப்ரா, கீதா கண்ணதாசன் அவர்களின் நெருங்கிய உறவினர்கள் ஆவர்.