Sunday, January 18, 2009

போகீமான் - Clay



நாம சாக்பீஸ்ல கொட கொடனு கொடயறத பார்த்துட்டு, எங்க வீட்டு குட்டீஸுக்கும் பயங்கர ஆசை. சரி பண்ணுங்கடா பசங்களானு விட்டால், லேசா மூனு மூலையில் கீறிவிட்டு, நட்டக்குத்தா நிக்க வச்சிட்டான் பையன். என்னாடா அதுனு கேட்டால், "ராக்கெட்" என்று பதில் வருகிறது :)))

போன வாரம் ஒரு நாள் "ஹாபி லாபி" போய் நமக்கு ஷாப்பிங் செய்தால், பசங்க அதுங்க பங்குக்கு ஒரு மினி ஷாப்பிங். அவங்க வாங்கியது கலர் கலரா களிமண் !!!

வெள்ளிக் கிழமை ஆரம்பிச்சாங்க. யானை, குதிரை, பூக்கள், பட்டாம்பூச்சி என போய், கடைசியில் அவங்க ஆஸ்தான போக்கீமானில் வந்து நிக்கறாங்க. சிவா தான் எல்லாம், தீக்ஷா அப்பப்ப அண்ணனைப் பார்த்து அதே போல செய்ய முயற்சி செய்வாள்.

வரிசையா செஞ்சு டி.வி. ரேக் மேல அடுக்கிட்டாங்க. அதிலிருந்து மூன்று சிற்பங்கள் உங்கள் பார்வைக்கு. பேர் எல்லாம் நமக்கு வாய்க்குள்ளயே வரமாட்டேன்கிறது. படத்தில இருக்கவங்க டியால்கா, மெகினீயம், க்ரோவைல்.

4 comments:

ராமலக்ஷ்மி said...

புலிக்குப் பிறந்தது பூனையாகுமா?
தந்தை எட்டடி பாய்ந்தால் மகன் பாய்ந்திருப்பது எண்ணூறு அடி!

சிவா,
டியால்கா, மெகினீயம், க்ரோவைல்
மூன்றுமே ரொம்ப அருமை. என் மனமார்ந்த பாராட்டுக்கள்!
இப்படிக்கு
ராமலக்ஷ்மி அத்தை

enRenRum-anbudan.BALA said...

சிவாவின் "கை வண்ணம்" பளிச்சிடுகிறது :) திறமை இருக்கிறது, ஊக்குவிக்க வேண்டும்.'

குழந்தைக்கு வாழ்த்துகளும் ஆசிர்வாதங்களும்.

நன்றி.

சதங்கா (Sathanga) said...

ராமலக்ஷ்மி said...

//மகன் பாய்ந்திருப்பது எண்ணூறு அடி!//

சிவாவுக்கு இதைப் படித்துக் காண்பித்தபோது, உற்சாகம் தாங்கவில்லை.

சிவாவை வாழ்த்தியதற்கு எங்கள் சார்பாக நன்றி !!!

சதங்கா (Sathanga) said...

enRenRum-anbudan.BALA said...

// சிவாவின் "கை வண்ணம்" பளிச்சிடுகிறது :) திறமை இருக்கிறது, ஊக்குவிக்க வேண்டும்.'//

நாம் சொல்வதைவிட அவங்களே அதீத ஆர்வம் காட்டுகின்றனர். படிப்பை இரண்டாம் நிலைக்குத் தள்ளாத வரை இன்பமே :)))

// குழந்தைக்கு வாழ்த்துகளும் ஆசிர்வாதங்களும்.//

அவங்க சார்பாக உங்களுக்கு எங்கள் நன்றிகள்.