
எல்லோரும் பத்தாவது படிக்கும்போது கொஞ்சம் சீரியஸா ஆகிடுவாங்க. கல்வியின் அடுத்த கட்டத்தை நிர்ணயிக்கும் வகுப்பு அல்லவா ?!!! ஆனால், நானும் என் நண்பன் ஒருவனும் (வழக்கம் போல கடைசி பெஞ்ச் :)) ரொம்ப தீவிரமா சாக்பீஸ் கார்விங்கில் இறங்கி விடுவோம். கார்கள் தான் எங்க ஃபேவரிட். குட்டிக் குட்டியா அழகா வெண் கார்கள், ரெடி ஆக ஆக, மற்ற நண்பர்களுக்கு சப்ளை ஆகும். நம்ம கையில் எதுவும் நிற்காது.
வந்த உடனேயே, "யாராவது போய் ஆபீஸ் ரூமில் இருந்து சாக்பீஸ் வாங்கிட்டு வாங்க" என்பது சில ஆசிரியர்களின் வழக்கம் எங்கள் பள்ளியில். உங்கள் பள்ளியிலும் இருக்கலாம் !!! யாராவது முன் பெஞ்சில் இருந்து எழுந்தா கூட, "நீங்க உட்காருங்க, இந்தாப்பா கடைசி பெஞ்சு, யாராவது போங்க" என்று சொல்லுவார்கள்.
ஒரு சாக்பீஸ் வைத்துக் கொண்டு மற்றவற்றை ஆசிரியரிடம் நீட்டுவோம். முதலில் டெஸ்கில் வரைய பயன்படுத்திய சாக்பீஸ், திடீரென்று ஒருநாள் காராக மாறியது. ஜாமெட்ரி பாக்ஸ் தான் ஆஸ்தான டூல் பாக்ஸ். முதலில் ஷேப் மட்டுமே செய்த கார்கள், நாளடைவில் ஜன்னல் எல்லாம் குடைந்து நன்றாக வர ஆரம்பித்தது. வேறு எதுவும் உருவங்கள் செய்தமாதிரி ஞாபகம் இல்லை.
அந்த விடுமுறை நாளில், ஊருக்குச் செல்கையில் ஒரு பாக்ஸ் சாக்பீஸ் வாங்கி சென்றேன். பிள்ளையார், கணிணி, மண்டபம், ஷோஃபா, டேபில், ஸ்டூல், செயின் இப்படி நிறைய தோன்றியதை எல்லாம் செய்ய முடிந்தது.
இந்த முறை இந்தியா சென்ற போது, அவற்றை எல்லாம் எடுத்து வரலாம் எனப் பார்த்தால், அவ்வளவு டெலிகேட்டா இருந்தது. அதனால் ஊரில் பத்திரமாக வைத்து விட்டு, இங்கு வந்து புதிதாய் செய்யலாம் என எண்ணினேன்.
இங்க 'சைட்வாக் சாக்' என்று கொஞ்ச பெரிய சைஸில் சாக்பீஸ் கிடைத்தது. சில சிற்பங்கள் செதுக்க, எதிர்பார்த்த அளவிற்கு, சுமாராகவே வந்தன அவை.
அவற்றிலிருந்து "சாக்பீஸ் ச்செய்ன்" உங்கள் பார்வைக்கு. முன்னெல்லாம் ஒரே நாளில் செய்ய முடிந்தது. இப்பொழுது சம்சாரி ஆகி, குடும்பமும் பெரிதாக :))) நேரம் அதிகம் கிடைப்பதில்லை. அதனால் இதை சுமார் இரண்டு மணி நேரங்கள் ஒரு நாளைக்கு எடுத்து, மூன்று நாட்கள் ஆனது நிறைவு செய்ய.