Wednesday, July 2, 2008

குசேலா ..... இக்கடச் சூசூசூடு !



வழக்கம் போல ரஜினியின் இந்தப் படத்திற்கும் ஏகப்பட்ட விளம்பரங்கள் வந்து கொண்டிருக்க ... சில வாரங்கள் முன்னர், என் நண்பன் ஒருவன் குசேலன் ஸ்டில்ஸ் அனுப்பியிருந்தான். படங்களைப் பார்க்கும்போதே தெரிந்தது இந்தப்படமும் சூப்பர் ஹிட் தான் என்று. அந்த அளவிற்கு அசத்தல். (ச‌மீபத்தில் பாடல்கள் கேட்டதில் இருந்து இந்த நம்பிக்கையில் சற்று சருக்கல் !)

அண்ணாமலை, எஜமான் டைப்ல ஸ்டில்ஸ் வருதேனு பார்த்துக்கிட்டே வந்தா, சட்டென நம்மை ஈர்த்தது இந்த 'ராஜாதி ராஜா' ஸ்டைல் ஸ்டில்.

கொசுவத்தி : எண்ணிக்கையில்லாமல் அந்த ஸ்டில்ல எத்தன முறை நண்பர்களுக்கு வரைந்து தந்திருப்பேன். அப்போது கல்லூரி பருவம். தேவகோட்டையிலிருந்து, காரைக்குடி சென்றோம் நண்பர்கள் சிலர். பாண்டியன் தியேட்டர் என நினைக்கிறேன். என்னா கூட்டம். அழகப்பா என்ஜினியரிங் மாணவிகள் அத்தனை பேரும் அங்கு தான். அட போங்கப்பா, சென்னையாவது, மும்பையாவது. நுனி நாக்கு ஆங்கிலம், வெள்ளைத் தோல், அட்டகாச ட்ரெஸ்ஸிங். என்ன ஒரு அலப்பரைங்கறீங்க !!!! கொடுமை என்னான்னா அதுங்க கூட ஏகப்பட்ட வில்லன்கள், சாரி ஹீரோக்கள் :))) நல்ல பிள்ளையாய் படத்த பார்த்துட்டு வந்தோம்.

இந்த நினைவுகளுக்கு இட்டுச் சென்ற ஸ்டில்லை வெகு சீக்கிரம் விட மனம் வரவில்லை. அதனால் வரையலாம் என இரண்டு நாட்களுக்கு முன்னர் அமர்ந்தேன். சார்க்கோல் பயன்படுத்தியதில்லை இதுவரை. அதுவும் வாங்கி ரொம்ப நாளா சும்மா கிடக்குது. சரினு அதை மீடியமாக பயன்படுத்தலாம் என்று நினைத்துக் கொண்டேன்.

படம் 10"x8" அளவு. முதல் நாள் பென்சிலில் கட்டம் கட்டி, அவுட்லைன் போடறதுக்கே மூன்று மணி நேரங்கள் பிடித்தது. பின் சார்க்கோல் கொண்டு தலைமுடிக்கு டை அடித்தேன் :) ஓரளவு நன்றாக வந்திருந்தது. அத்தோடு நிறுத்திக் கொண்டேன்.

நேற்று, நெற்றியில் சார்க்கோல் வைக்க, கரி அப்பியது போல் ஆகிவிட்டது. கையும் ஓடவில்லை, காலும் ஓடவில்லை. போச்சு, அவ்வளவு தான் என்று நினைக்க, சரி ஒரு ட்ரை விடலாம் என அழிப்பான் கொண்டு முயற்சித்தேன். கரி கரைந்து மிருதுவானது. அப்பாடா, பிழைத்தது படம் :)

கண்ணாடி மட்டும் சார்க்கோலிட்டு, அப்படியே பென்சிலுக்கு தாவினேன். ஷேட்ஸ் முழுதும் 2B to 6B பென்சில்கள். பின் டச்சப், பள்ளிகளில் செய்வோமே, அதே தான். பேப்பர் கிழித்து, சிறு துண்டுகளாய் மடக்கி, அப்படியே அழுத்தி அழுத்தி இழுக்கறது :)

முகம், கழுத்து, மாலைகள், பனியன், கை விரல்கள், வாட்ச் என எல்லா ஷேட்ஸ் முடிக்க ஒரு ஐந்து மணி நேரம் ஆனது.

இன்று, சுற்றிலும் உள்ள‌ கோடுக‌ளை அழித்து, லேசான‌ ட‌ச்ச‌ப் செய்து முடிக்க‌ ஒரு அரை ம‌ணித்துளிக‌ள். அப்புற‌ம் ஸ்கேன் ப‌ண்ணி, இப்ப‌ உங்க‌ள் பார்வைக்கு ந‌ம்ம 'சூப்ப‌ர் ஸ்டார் குசேல‌ன்'.

ம‌ற‌க்காம‌ ப‌ட‌த்த‌ பெரிது ப‌ண்ணி பாருங்க‌.

57 comments:

Anonymous said...

niceeeeee

பிரேம்ஜி said...

நல்லா வரைஞ்சிருக்கீங்க.

யாத்ரீகன் said...

கண்ணாடியில் தெரியும் பிரதிபலிப்பும், சட்டையின் பின்புறம் கழுத்தோரம் மறைந்திருக்கும் உருத்திராட்ச்சம் வரை நுணுக்கமா வரைஞ்சி இருக்கீங்க .. சூப்பர்.. ஒவ்வொரு படைப்புக்கும் பின்னாடி இவ்வளவு கடின உழைப்பு இருக்குல, வாழ்த்துக்கள் ..

சின்னப் பையன் said...

சூப்பரா இருக்கு... அருமையா வரையறீங்க...

thamizhparavai said...

நன்று..ஓவியர்களுக்கு இணக்கமான முகம் ரஜினி என்பது என் கருத்து..

thamizhparavai said...

தற்பொழுதுதான் தங்களின் எல்லா ஓவியங்களையும் பார்த்தேன்.. ஒவ்வொன்றிற்கும் தனித்தனியாக பின்னூட்டம் இட சோம்பல்.. அதனால்தான் இந்தப் பின்னூட்டம்..
வேலைக் காலங்களிலும் கூட ஓவியம் தொடர்தல் ஒரு குறிப்பிடத்தகுந்த அம்சமாகும்.அதற்கே உங்களுக்கு ஒரு கை குலுக்கல்.
பென்,பென்சில்,வாட்டர் கலர்,ஆயில் பெயிண்டிங் அனைத்திலும் கைவண்ணம். அருமை..
சிம்பிளாக இருந்தாலும் லில்லி சூப்பர்..

rapp said...

நிஜமாகவே டாப் டக்கரா இருக்குங்க. உங்க மலரும் நினைவுகளும் சூப்பர்.

NewBee said...

vowwwwwwww! amazing! simply superb sathanga!

வரைந்து முடித்ததும் ஒரு திருப்தி வந்திருக்குமே மனதில்.ஒரு புன்னகை பூத்திருக்குமே உதட்டில்.

வெகு நாள் கழித்து வரைந்தது என்று சொன்னதால் கேட்டேன்.நமக்கே நமக்காக, நமக்குப் பிடித்த பழைய விஷயங்கள் செய்யும் போது மகிழ்ச்சியாய்த் தானே இருக்கும்.:))

ஓவியம் அருமை. :)))

சதங்கா (Sathanga) said...

இது வரை பார்த்து, ரசித்து, பாராட்டிய நண்பர்கள் அனைவருக்கும் நன்றிகள் பல. பொறுமையா உங்க எல்லாருக்கும் பதிலளிக்கிறேன்.

கிரி said...

//ச‌மீபத்தில் பாடல்கள் கேட்டதில் இருந்து இந்த நம்பிக்கையில் சற்று சருக்கல் !//

லேட் ஆகா பிக்கப் ஆனாலும் லேட்டஸ்ட் ஆக கலக்கும்

//ம‌ற‌க்காம‌ ப‌ட‌த்த‌ பெரிது ப‌ண்ணி பாருங்க‌//

சாதரணமாவே சூப்பர்

//அப்ப‌டியே ஒரு வார்த்தை எப்படி இருக்குனு சொல்லிட்டுப் போங்க‌//

டாப்பு டக்கர்

நாகு (Nagu) said...

தூள்!

குசேலன் 'பில்ட் அப்' ஆரம்பிச்சிருச்சா...

நடத்துங்க..

ராமலக்ஷ்மி said...

அற்புதம். கிளிக்கிட்டுப் பார்த்தேன். ஓவியம் முழுமை பெற நீங்கள் எடுத்துக் கொண்ட விடாமுயற்சியும் பாராட்டுக்குரியது.

//படங்களைப் பார்க்கும்போதே தெரிந்தது இந்தப்படமும் சூப்பர் ஹிட் தான் என்று.//

அந்த குசேலன் சூப்பர் ஹிட்டோ இல்லையோ, இந்தக் குசேலன் சூப்பரோ சூப்பர் ஹிட்!

//
newbee said..வரைந்து முடித்ததும் ஒரு திருப்தி வந்திருக்குமே மனதில்.ஒரு புன்னகை பூத்திருக்குமே உதட்டில்.//
புது வண்டு உதிர்த்திருக்கிறார் நல்ல பொன்மொழி! இதையேதான் தங்கள் வால்டன் படத்துக்கு (புதுவண்டு, அதை கட்டாயம் பாருங்கள்) இட்ட பின்னூட்டத்தில் கூறியிருந்தேன் இவ்வாறாக,
//தங்கள் பொறுமைக்கு தாங்களே அளித்த பரிசு இந்த அருமையான ஓவியத்தைப் படைத்த ஆத்ம திருப்தி.// அது இப்படத்துக்கும் பொருந்தும் சதங்கா.

சித்திரம் பேசுதடி இனி நிறைய பேச வேண்டும் என வேண்டியிருந்தேன், போன முறை. அழகாய் பேச ஆரம்பித்து விட்டது. வாழ்த்துக்கள் சதங்கா.

Sen22 said...

படம் சூப்பரா வந்திருக்கு...
உங்கள் கைவண்ணத்திற்கு ஒரு ஹாட்ஸ்ஆப்...

Ramc said...

Nice ! Shades are came very well !
I liked the hands very much !

But still the mouth part and chin could have been done better...the missed out part is Hands impression on chin...

But overall good ! :)

Anonymous said...

கலக்கலா வரஞ்சிருக்கீங்க!

சதங்கா (Sathanga) said...

வரைந்து கிடைத்த திருப்தியைக் காட்டிலும் உங்களின் ஊக்கம் இரட்டிப்பு மகிழ்ச்சி அளிக்கிறது நண்பர்களே.

சதங்கா (Sathanga) said...

//niceeeeee//

நன்றி அனானி.

சதங்கா (Sathanga) said...

//நல்லா வரைஞ்சிருக்கீங்க.//

நன்றி பிரேம்ஜி

சதங்கா (Sathanga) said...

யாத்ரீகன்,

//கண்ணாடியில் தெரியும் பிரதிபலிப்பும், சட்டையின் பின்புறம் கழுத்தோரம் மறைந்திருக்கும் உருத்திராட்ச்சம் வரை நுணுக்கமா வரைஞ்சி இருக்கீங்க ..//

இவ்வ‌ள‌வு நுணுக்க‌மா க‌வ‌ணிச்சு சொல்லியிருக்கீங்க‌. மிக்க‌ ம‌கிழ்ச்சி. தாங்க‌ள் ஒரு சிற‌ந்த‌ ர‌சிக‌ர் நிரூப்பிக்க‌றீங்க‌.

//ஒவ்வொரு படைப்புக்கும் பின்னாடி இவ்வளவு கடின உழைப்பு இருக்குல, வாழ்த்துக்கள் ..//

ஆமா. அத‌ன் பின்னே வ‌ரும் வ‌ரும் வெற்றிக‌ளை (உங்களைப் போன்றவர்களின் மறுமொழிகள்) நினைத்து அதை உழைப்பில் இட்டால் க‌டின‌ம் ஓடி ஒளிந்து கொள்ளுமே !!!

சதங்கா (Sathanga) said...

ச்சின்னப் பைய‌ன்,

//சூப்பரா இருக்கு... அருமையா வரையறீங்க...//

ர‌சித்துப் பாராட்டிய‌த‌ற்கு மிக்க‌ ந‌ன்றி.

சதங்கா (Sathanga) said...

தமிழ்ப்பறவை,

//நன்று..ஓவியர்களுக்கு இணக்கமான முகம் ரஜினி என்பது என் கருத்து..//

நிச்சயமாக. அதே சமயம் ரஜினி போல் இன்னும் சிலரது திரைப்பிரபலங்களின் முகங்கள் ... எனக்குப் பிடித்து பள்ளி, கல்லூரி நாட்களில் நான் வரைந்த மிகச் சிலருள் முதலிடம் ரஜினி, அப்புறம் விஜயகாந்த் (இவருக்கும் ரஜினி போன்று நல்ல முக வெட்டு), அமலா, பாக்யராஜ் (அந்தக் கண்ணாடிக்காவே !). அவ்வப்போது கமல் (ஏன்னா கொஞ்சம் கஷ்டமா இருக்கும் வரைய‌). இந்தியன் தாத்தா, தேவர் மகன் இந்த இரண்டும் அந்த அந்தப் படங்கள் வந்த காலத்தில் வரைந்தவை.

//ஒவ்வொன்றிற்கும் தனித்தனியாக பின்னூட்டம் இட சோம்பல்.. அதனால்தான் இந்தப் பின்னூட்டம்..//

மிக்க நன்றிங்க. ஒரு பின்னூட்டம் போட்ட, அத நூறா ஆக்கிக்கறேன் :)) மற்றும் உங்கள் அனைத்துப் பாராட்டுக்கும் நன்றிகள் பல நூறு.

இவன் said...

//ச‌மீபத்தில் பாடல்கள் கேட்டதில் இருந்து இந்த நம்பிக்கையில் சற்று சருக்கல் !//

சந்திரமுகி பாட்டும் ஆரம்பத்தில பிடிக்கல பிறகு ஹிட் ஆச்சுது அப்படியே இதுவும் நடக்கும் என்று நினைக்கிறேன்

படம் சூப்பருங்க....
சித்திரம் பேசுதய்யா...

சதங்கா (Sathanga) said...

//நிஜமாகவே டாப் டக்கரா இருக்குங்க. உங்க மலரும் நினைவுகளும் சூப்பர்.//

மிக்க நன்றி rapp.

சதங்கா (Sathanga) said...

newbee,

//வரைந்து முடித்ததும் ஒரு திருப்தி வந்திருக்குமே மனதில்.ஒரு புன்னகை பூத்திருக்குமே உதட்டில்.//

பின்னே. திருப்தியோடு த‌மிழ்ம‌ண‌ வாச‌க‌ர்க‌ள் த‌ங்க‌ளைப் போன்றோரின் க‌ருத்துக்க‌ள் அறியும் ஆவ‌லும் ஏற்ப‌டுகிறதே ம‌ன‌தில். வ‌ரும் பாராட்டுக்க‌ள் பார்த்து ம‌ன‌ம் பூத்துக் குலுங்குகிற‌து.

//வெகு நாள் கழித்து வரைந்தது என்று சொன்னதால் கேட்டேன்.நமக்கே நமக்காக, நமக்குப் பிடித்த பழைய விஷயங்கள் செய்யும் போது மகிழ்ச்சியாய்த் தானே இருக்கும்.:))

ஓவியம் அருமை. :)))//

நிச்சயமாக. பாராட்டுக்களுக்கு மிக்க நன்றி.

சதங்கா (Sathanga) said...

கிரி,

//லேட் ஆகா பிக்கப் ஆனாலும் லேட்டஸ்ட் ஆக கலக்கும் //

என்று நம்புவோம் !

//சாதரணமாவே சூப்பர்

டாப்பு டக்கர்//

நன்றிகள் பலப் பல‌

சதங்கா (Sathanga) said...

நாகு,

//தூள்!// நன்றி

//குசேலன் 'பில்ட் அப்' ஆரம்பிச்சிருச்சா...//

ஆரம்பிச்சிருச்சாவா, எப்பவோ ஆரம்பிச்சிருச்சு, நானே கொஞ்சம் லேட்டுனு நெனைக்கறேன் :))

சதங்கா (Sathanga) said...

ராமலஷ்மி மேடம்,

//அற்புதம். கிளிக்கிட்டுப் பார்த்தேன். ஓவியம் முழுமை பெற நீங்கள் எடுத்துக் கொண்ட விடாமுயற்சியும் பாராட்டுக்குரியது.//

எங்கே இந்தப் படத்தைப் பார்க்காமல் விட்டுவிடுவீர்களோனு நினைத்தேன். வழக்கம் போல வந்து வாழ்த்துவதற்கு மிக்க‌ ந‌ன்றி.

//அந்த குசேலன் சூப்பர் ஹிட்டோ இல்லையோ, இந்தக் குசேலன் சூப்பரோ சூப்பர் ஹிட்!//

ஆஹா. நான் சொல்லப்போறது கொஞ்சம் ஓவரா கூட இருக்கலாம். பட் இருந்தாலும் மனசுல‌ தோணுது, 'சூப்பர் ஸ்டார்' வந்து இந்த வரிகளைப் படிக்கணும். :))))

//சித்திரம் பேசுதடி இனி நிறைய பேச வேண்டும் என வேண்டியிருந்தேன், போன முறை. அழகாய் பேச ஆரம்பித்து விட்டது. வாழ்த்துக்கள் சதங்கா.//

என்னை எங்கேயோ கொண்டும் செல்லும் வரிகள். முகம் தெரியவில்லை என்றாலும் இவ்வரிகளில் உங்களைக் காணுகிறேன். மிக்க மகிழ்ச்சி.

சதங்கா (Sathanga) said...

Sen22,

//படம் சூப்பரா வந்திருக்கு...
உங்கள் கைவண்ணத்திற்கு ஒரு ஹாட்ஸ்ஆப்...//

ஆஹா ! மிக்க‌ ந‌ன்றி.

சதங்கா (Sathanga) said...

ராம்'சி',

//Nice ! Shades are came very well !
I liked the hands very much !//

Thanks. You mean 'fingures' ?!

//But still the mouth part and chin could have been done better...the missed out part is Hands impression on chin... //

நுண்ணிய பார்வைக்கும், தயங்காத கருத்துக்களுக்கும் மிக்க நன்றி. நீங்க சொன்னவுடன், ஒரிஜினல் படத்தைப் பார்த்தேன். அட ஆமா. கரெக்டா பிடிச்சிட்டீங்க. ஆட்காட்டி விரலின் ஷேட், முகவாயில் மிஸ்ஸிங்க். க்ரேட். சரி செய்து விடுகிறேன்.

//But overall good ! :)//

நன்றிகள் பல.

சதங்கா (Sathanga) said...

//கலக்கலா வரஞ்சிருக்கீங்க!//

மிக்க‌ ந‌ன்றிங்க சேவிய‌ர்.

சதங்கா (Sathanga) said...

வாங்க‌ இவன்,

பேரே வித்தியாசமா இருக்கே. ஈஸியாவும் இருக்கு :))

//சந்திரமுகி பாட்டும் ஆரம்பத்தில பிடிக்கல பிறகு ஹிட் ஆச்சுது அப்படியே இதுவும் நடக்கும் என்று நினைக்கிறேன்//

அதான். அதே தான். கேட்க கேட்க‌ ஹிட் ஆகிரும் நிச்ச‌ய‌மா. என்ன‌ ஒரு குறை எஸ்.பி.பி. இல்லை :((( 'தேவுடா' பாட்டெல்லாம் இன்னும் காதில் ஒலிக்கிற‌து. என்னா ஒரு குரல் வளம். அந்த‌ அள‌விற்கு ஒரு பாட‌லும் இந்தப் படத்தில் இல்லை. 'சினிமா சினிமா' ஒன்று தான் முத‌ல் த‌ட‌வை கேட்கும்போது ஓகே. ம‌ற்றவை ப‌ற்றி நோ காமென்ட்ஸ் :))

//படம் சூப்பருங்க....
சித்திரம் பேசுதய்யா...//

ரொம்ப‌ ந‌ன்றிங்க‌. பேசுது தான். இதோ இங்க‌ வ‌ரும் ந‌ண்ப‌ர்க‌ளின் ஊக்க‌ம் தான் பேச‌ வைக்கிற‌து !

SP.VR. SUBBIAH said...

நன்றாக உள்ளது சதங்கா!
அடுத்த முறை ஒரு தேசியத்தலைவர் படம் ஒன்றை முயற்சி செய்யுங்கள்
செய்தகையோடு ராஷ்ட்டிரபதி பவனுக்கு மின்னஞ்சல் செய்யுங்கள்.
யார் கண்டது அழைத்துப் பரிசு கொடுத்தாலும் கொடுப்பார்கள்!

சதங்கா (Sathanga) said...

வாத்தியார் ஐயா,

// நன்றாக உள்ளது சதங்கா! //

மிக்க நன்றி.

// அடுத்த முறை ஒரு தேசியத்தலைவர் படம் ஒன்றை முயற்சி செய்யுங்கள்
செய்தகையோடு ராஷ்ட்டிரபதி பவனுக்கு மின்னஞ்சல் செய்யுங்கள்.
யார் கண்டது அழைத்துப் பரிசு கொடுத்தாலும் கொடுப்பார்கள்!//

வரைந்து அனுப்புகிறேன். பரிசு கொடுத்தால் சரி. வேறு ஏதாவது கொடுத்தால் ?!!! :)) (Just fun).

ஒரு காசு said...

Very nice picture.

The outcome appreciates your hard work!

SP.VR. SUBBIAH said...

///வரைந்து அனுப்புகிறேன். பரிசு கொடுத்தால் சரி. வேறு ஏதாவது கொடுத்தால் ?!!! :)) (Just fun).///

என்னிடம் வாரும்.நான் பார்த்துக் கொள்கிறேன் (படத்தை!):-))))

சதங்கா (Sathanga) said...

ஒரு காசு ?! ம்ம்ம். பேரு வித்தியாசமா நல்லாவே இருக்கே :)

//Very nice picture.

The outcome appreciates your hard work!//

நன்றிகள் கோடி நண்பரே !

சதங்கா (Sathanga) said...

//என்னிடம் வாரும்.நான் பார்த்துக் கொள்கிறேன் (படத்தை!):-))))//

இது போதும் ஐயா எனக்கு. பரிசெல்லாம் வேண்டாம் :) படம் வரைந்து செய்தி அனுப்புகிறேன் உங்களுக்கு.

cheena (சீனா) said...

அன்பின் சதங்கா

அருமையாக வந்திருக்கிறது அழகான படம். கையில் உள்ள திறமையை அவ்வப்போது வெளிப்படுத்துங்கள். மெருகேறும். கடின உழைப்பும், அதிக நேரமும் தேவைப்படுவதால், ஓவியத்தை விட பதிவுகளில் அதிக ஈடுபாடு வருகிறதா ? பரவாய் இல்லை. நடுநடுவில் சிறிது நேரம் செலவழிக்கல்லாமே !!

காரைக்குடி - பாண்டியன் தியேட்டர் - அழகப்பா கல்லூரி மாணவிகள் - ஓவியம் வரைவதின் மூலம் மலரும் நினைவுகளில் மூழ்கி இன்பம் கண்டது மகிழ்ச்சி தானே !

ராமலக்ஷ்மியின் ஊக்குதலும், புதுவண்டின் பாராட்டுகளும் புது வேகத்தைத் தருமே !

தொடர்க இவ்வலைப்பூவினையும்

நல்வாழ்த்துகள்

Anonymous said...

படம் சூப்பருங்கன்னோவ்..

நானானி said...

சித்திரமும் கைப்பழக்கம் என்பதை அழகாக நிரூபித்திருக்கிறீர்கள்! சதங்கா!
கொசுவத்திதை பற்ற வைத்து, பென்சில்,
சார்கோல் எடுத்து வெள்ளைத்தாளில் கை
வைத்தவுடன் மடமடவென்று ஓடியிருக்குமே? பெட்டியில் இருக்கும் வீணையை எடுத்து தூசிதட்டி நன்றாக துடைத்து கம்பிகளில் தேங்காயெண்ணை
தேய்த்து வலதுகைவிரல்களில் நகம்மாட்டி இடதுகைவிரல்களில் எண்ணை தொட்டு குழந்தையைப்போல்
மடியில் இருத்தி அம்மிக நல்ல வீணையை தடவினால்...கைப்பழக்கத்தில்,'கஜவதனா...'என்று கைகள் ஓடும் போது நான் அடைந்த மகிழ்ச்சியைத்தானே நீங்களும் உங்கள் விரல்கள் காகிதத்தில்
காவியம் படைக்கும் போதும் உணர்ந்திருப்பீர்கள்?

Jayakanthan - ஜெயகாந்தன் said...

Superb picture. I did not see the original picture yet. Especially the reflection in the spectacle! Good work!

சதங்கா (Sathanga) said...

சீனா ஐயா,

விரிவாக எழுதி, வாழ்த்தியமைக்கு மிக்க நன்றி.

//அதிக நேரமும் தேவைப்படுவதால், ஓவியத்தை விட பதிவுகளில் அதிக ஈடுபாடு வருகிறதா ? பரவாய் இல்லை. நடுநடுவில் சிறிது நேரம் செலவழிக்கல்லாமே !!//

ஆமா. ஆமா. அதுமில்லாம பதிவு போடறதுக்கு, எங்க வேணா யோசிச்சு, பின் தட்டச்சிடலாம். ஆனா இக்கலை அப்படி இல்லையே ! அதிக நேரம், நிறைய பொருட்கள், அமைதியான சூழல் எல்லாம் வேண்டுமே. உங்களின் ஊக்கமும் அடுத்த படத்தைப் பற்றி யோசிக்க வைக்கிறது. நன்றிகள் பல.

சதங்கா (Sathanga) said...

வீரசுந்தர்,

//படம் சூப்பருங்கன்னோவ்..//

ரொம்ப நன்றிங்க.

சதங்கா (Sathanga) said...

நானானி மேடம்,

வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி.

//கொசுவத்திதை பற்ற வைத்து, பென்சில்,
சார்கோல் எடுத்து வெள்ளைத்தாளில் கை
வைத்தவுடன் மடமடவென்று ஓடியிருக்குமே? //

பின்னே ! படம் நல்லா வந்ததற்கு இது முதல் காரணமன்றோ. ரெண்டாவது என்னனு கேப்பீங்க, உங்க எல்லார் பாராட்டும் தான்.

//பெட்டியில் இருக்கும் வீணையை எடுத்து தூசிதட்டி நன்றாக துடைத்து கம்பிகளில் தேங்காயெண்ணை
தேய்த்து வலதுகைவிரல்களில் நகம்மாட்டி இடதுகைவிரல்களில் எண்ணை தொட்டு குழந்தையைப்போல்
மடியில் இருத்தி அம்மிக நல்ல வீணையை தடவினால்...கைப்பழக்கத்தில்,'கஜவதனா...'என்று கைகள் ஓடும் போது நான் அடைந்த மகிழ்ச்சியைத்தானே நீங்களும் உங்கள் விரல்கள் காகிதத்தில்
காவியம் படைக்கும் போதும் உணர்ந்திருப்பீர்கள்?//

ஆஹா அற்புதம். நீங்களும் கொசுவத்தி சுத்தி எழுதிய விதம் அருமை. ராகம் பத்தி எதும் தெரியாது, ஆனால் உங்கள் பின்னூட்டம் படிக்கும்போது அப்படியே வீணையின் நாதம் ஒலிக்கிறது.

சதங்கா (Sathanga) said...

ஜெய்,

//Superb picture. I did not see the original picture yet. Especially the reflection in the spectacle! Good work!//

ரொம்ப தாங்கஸ். ஒரிஜினல் படம் பார்த்துட்டு சொல்லுங்க. ரிஃப்லெக்ஸன் பற்றி குறிப்பிட்டது குறித்து ரொம்ப சந்தோசம். :))

Thamizh_Thendral said...

சதங்கா,

என்ன இப்படி அசத்திட்டீங்க. ஒரு பக்கம் கவிதை, ஒரு பக்கம் படம் வரைவதுன்னு பின்னிட்டீங்க. படத்துக்குள்ள ஒரு ஜீவன் இருக்கு. அதுவும் ரஜனியின் சிரிப்பு, அவருடைய ஃபேமஸ் முகவாயைத் தாங்கும் ஸ்டைல் எல்லாமே க்ளாஸ்.

முரளி.

சதங்கா (Sathanga) said...

முரளி,

//
என்ன இப்படி அசத்திட்டீங்க. ஒரு பக்கம் கவிதை, ஒரு பக்கம் படம் வரைவதுன்னு பின்னிட்டீங்க. //

எல்லாம் உங்களைப் போன்றோரின் நல்லாதரவு தான் முக்கிய காரணம்.

//படத்துக்குள்ள ஒரு ஜீவன் இருக்கு. அதுவும் ரஜனியின் சிரிப்பு, அவருடைய ஃபேமஸ் முகவாயைத் தாங்கும் ஸ்டைல் எல்லாமே க்ளாஸ்.//

மிக்க மகிழ்ச்சி உங்கள் பாராட்டுக்களுக்கு :))

துளசி கோபால் said...

படம் உயிரோட்டமா இருக்குங்க.

வயசானாலும் உடம்பு சதை போடாம இருப்பதால் இளமையான மேக்கப் நல்லாவே பொருந்துது ரஜினிக்கு.

ஆனா....சிவாஜி படத்துலே சில குளோஸ் அப்கள் நல்லாத்தான் இல்லை(-:

நல்லா வரைஞ்சு இருக்கீங்க. சித்திரமும் கைப்பழக்கம் என்றது இதுதான்!

சதங்கா (Sathanga) said...

டீச்சர்,

பிஜி தீவுகளில் பொழுதை நன்றாகக் கழித்து, ஞாபகமாய் வைத்திருந்து பாராட்டியதற்கு நன்றிகள் பல.

//படம் உயிரோட்டமா இருக்குங்க.//

இந்த வரிகளிலும் உயிரோட்டம் இருக்குதுங்க. :))

goma said...

நீங்கள் வரைந்த குசேலன், திரைக் குசேலனை விட ,இளமையாக இருக்கிறார்.
சார்க்கோல் ஸ்கெட்ச் அருமை.
ரொம்ப நாள் இடைவெளி விட்டு வருகிறேன் ...கைவண்ணம் வெகுவாக மெருகேறியிருக்கிறது.வாழ்த்துக்கள்

Ramya Ramani said...

ஆஹா சதங்கா நான் இவ்வள்வு நாள் பாக்கவேயில்லயே...சூப்பருங்க.ரொம்பரொம்ப அழகா இருக்கு.தலைவர் படத்த இவ்வளவு நேர்த்தியா வரைஞ்சிருக்கீங்க...

உங்க படத்தில் என்னை கவர்ந்தவை

1.படத்தில் அளவு + நுணுக்கம்

2.ஒவ்வொறு பாகமும் செதுக்கினார்போல் இருக்கு.

3.இயல்பா ஒரு மனிதர் சிரிப்பது போலவே வரையப்பட்டிருக்கும் பாங்கு,திறமையின் வெளிப்பாடு !

இந்த படத்தை பாக்கும்போது உங்களோட திறமை+உழைப்பு+நேர்த்தி வெளிச்சம் போட்டா மாதிரி இருக்குங்க.. வாழ்த்துக்கள்..

இதுக்கும்மேல வாழ்த்த எனக்கு தெரியாது ஞானமும் பத்தாது...

சதங்கா (Sathanga) said...

goma,

//ரொம்ப நாள் இடைவெளி விட்டு வருகிறேன் ...கைவண்ணம் வெகுவாக மெருகேறியிருக்கிறது.வாழ்த்துக்கள்//

எல்லாம் உங்களைப் போன்றவர்களின் ஊக்கம் தான். வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றிங்க.

சதங்கா (Sathanga) said...

ரம்யா,

வாங்க வாங்க. அடேங்கப்பா, வாழ்த்து சொல்லி அசத்திப்புட்டீங்க போங்க.

//இதுக்கும்மேல வாழ்த்த எனக்கு தெரியாது ஞானமும் பத்தாது...//

இதுக்கு மேலயும் ஒருத்தர் வாழ்த்த முடியுமானு எனக்கு தெரியலைங்க. வாழ்த்துக்கள் பலவற்றிற்கும் நன்றிகள் பல.

ஜியா said...

தல.... சான்ஸே இல்ல... கலக்கிருக்கீங்க...

சதங்கா (Sathanga) said...

ஜி,

//தல.... சான்ஸே இல்ல... கலக்கிருக்கீங்க...//

பாராட்டுக்கு மிக்க நன்றி. சூப்பர் ஸ்டாருனா ஒருத்தர் தான். தல என்றாலும் ஒருத்தர் தான் :)) அதனால நாமெல்லாம் குட்டிப் பசங்க :))

அன்புடன் அருணா said...

Again just superb!!!!
anbudan aruNaa

சதங்கா (Sathanga) said...

//அன்புடன் அருணா said...

Again just superb!!!!//

பாராட்டுக்கு நன்றி அருணா.