Sunday, December 14, 2008

ஜோக்'கடி'க்க வாரீகளா ? (நள பாகம் !)

குமுதம், விகடன் படிக்கும்போது, நாமெல்லாம் ஜோக் படித்து, சிரித்து மகிழ்ந்து செல்வோம். ஆனா அந்த ஓவியங்களுக்கு ரொம்ப முக்கியத்துவம் தருவதில்லை. அவற்றை பார்க்கும்போது, ரொம்ப எளிதா இருந்தாலும், வரையும் போது தான் அதன் சூட்சுமம் புரியும்.

ஓவியர் சித்தார்த் அவர்களின் பரம ரசிகன் நான். தொன்னூறுகளில், அவரின் படங்களைப் பார்த்து வரைந்த ஏராளமானவற்றுள், ஓரளவுக்கு ஒற்றுமையுள்ள இரண்டு படங்களுக்கு ஜோக்'கடி'க்கலாம் வாங்க :)))



என்னத்த படிச்சாலும் ஒரு சாம்பார் ஒழுங்கா வைக்கத் தெரியுதா ? இந்த ஷோவுக்கு ஒன்னும் கொறச்சல் இல்ல !!!!

உங்கள் க்ரியேட்டிவிட்டியையும் பின்னூட்டுங்கள்.

9 comments:

பழமைபேசி said...

கொடியில துவச்சிக் காயப்போட்ட என்னோட சேலைய, காய்ஞ்சதுக்கப்புறம் எடுத்து மடிச்சு வைக்கணும்ங்றது தெரியாதா உமக்கு?

cheena (சீனா) said...

எவ்வளவு நேரம் காத்திருப்பது - எப்ப சமையல் முடியும் - பசிக்குதுல்ல

ராமலக்ஷ்மி said...

படங்கள் இரண்டும் அருமை.

[இது ஜோக் இல்லை. நிஜம். ஹி ஹி]

ராமலக்ஷ்மி said...

ஜோக் அடிக்க எனக்கு வராது. ஆனா நீங்களே ஜோக் “கடி” க்கத்தான் கூப்பிட்டிருக்கிறீர்கள். பிறகென்ன, கடிக்கிறேன்:))!

படம்:1
“நாளா பொழுதா எப்பப் பாரு பேப்பரு. படிச்சு படிச்சு தலயில் மிச்சம் நிக்கிற மூணு முடியும் கொட்டிக்கப் போகுது. என் தலைக்கு எண்ணெய் வாங்கி வாங்கி வரச் சொன்னனே, கெளம்புங்க.”

படம்:2
“யோவ், அங்க பாதி சமயல்தான் முடிஞ்சிருக்கு. சிலிண்டரை இங்க உருட்டிட்டு வந்துட்டியா? மன்மோகன்சிங் எங்களுக்காகத்தான் சிலிண்டர் வெலய ஏத்தாத இருக்கார்.உம்ம வெத்து ஆராய்ச்சிக்காக இல்ல”

சதங்கா (Sathanga) said...

பழமைபேசி said...

// கொடியில துவச்சிக் காயப்போட்ட என்னோட சேலைய, காய்ஞ்சதுக்கப்புறம் எடுத்து மடிச்சு வைக்கணும்ங்றது தெரியாதா உமக்கு?//

முதல் படத்து ஆளின் பயத்தை தெளிவாய் 'கடி'த்துவிடீர்கள் :))

சதங்கா (Sathanga) said...

cheena (சீனா) said...

// எவ்வளவு நேரம் காத்திருப்பது - எப்ப சமையல் முடியும் - பசிக்குதுல்ல//

இது தான் அனுபவம் என்பதோ :))) ரசித்தோம் இக்'கடி'யினை.

சதங்கா (Sathanga) said...

ராமலக்ஷ்மி said...

// படங்கள் இரண்டும் அருமை.

[இது ஜோக் இல்லை. நிஜம். ஹி ஹி]//

ஆஹா..இது கூட நல்லாயிருக்கே :))

//ஜோக் அடிக்க - ஜோக் “கடி” க்கத்//

மொழியோடு விளையாட்டு அற்புதம்.

//“யோவ், அங்க பாதி சமயல்தான் முடிஞ்சிருக்கு. சிலிண்டரை இங்க உருட்டிட்டு வந்துட்டியா?//

ஹா ஹா ... எதிர்பார்க்காத கற்பனை.

ராஜ நடராஜன் said...

படம் 1: எந்திருச்ச உடனேயே பேப்பர வச்சுகிட்டு உட்கார்ந்துகிட்டா எனக்கு காபி யாரு போடறது?

படம் 2: பில்டர் காபி போடச் சொன்னா என்னய்யா என்னமோ காய்ச்சுகிட்டு இருக்கிறே?

சதங்கா (Sathanga) said...

ராஜ நடராஜன் said...

// படம் 1: எந்திருச்ச உடனேயே பேப்பர வச்சுகிட்டு உட்கார்ந்துகிட்டா எனக்கு காபி யாரு போடறது?

படம் 2: பில்டர் காபி போடச் சொன்னா என்னய்யா என்னமோ காய்ச்சுகிட்டு இருக்கிறே?//

காஃபிய 'கடி'க்க முடியாது. கலக்கலாம், குடிக்கலாம்.

அருமையா கலக்கி 'கடி'ச்சிட்டீங்க :)))