Friday, May 2, 2008

1. ஜோக்(கடி)க்க வாரீயளா

வரையறதுல இருக்கற நுட்பம், வண்ணம் தீட்டுவதில் இல்லை என்பது எனது தாழ்மையான எண்ணம். ஏனெனில் கோடுகள் மட்டுமே பிரதானமாய் இருக்கும் பட்சத்தில் பொருமையாய் வரைவது சற்று சிரத்தையான காரியம் !

நாம் பத்திரிகைகளில் படிக்கும் (பார்க்கும்) கார்ட்டூன் ஜோக்குகள் அதே ரகம் தான். பார்க்க எளிதாய் தோன்றினாலும் வரைந்து பார்க்கும்போது தான் அதன் சூட்சுமம் புரியும். நிறைய ஜோக்குகளில் வந்த படங்கள் வரைந்திருக்கிறேன். அவற்றை ஒவ்வொன்றாய் பதிகிறேன். இது முதல் படம். பத்திரிகையில் என்ன ஜோக் என்று நினைவில் இல்லை. எனது எண்ணத்தில்:



"கஸ்டமர் புடி கஸ்டமர் புடினு கஷ்டப்படுத்தினீங்களே, நீங்களே வந்து பாருங்க, கலெக்ஷன் ஆனா தான் க்ரெடிட் கார்ட் ட்யூ கட்ட முடியும்னு சொல்றாங்க !"

உங்கள் மனதில் தோன்றுவதையும் பகிர்ந்து கொள்ளுங்களேன்.

17 comments:

வால்பையன் said...

கிரிடிட் கார்ட் வாங்கறவன் பிட்சைகாரனா
வாங்குனவன் பிட்சைகாரனா

வால்பையன்

ஜாம்பஜார் ஜக்கு said...

இன்னாது? பாக்கி ரெண்டு பேர் எங்கவா? டமிள்மணத்துல அவுங்க போட்ட பதிவுக்கு பின்னூட்டம் வந்துகிதான்னு செக் பண்ண போய்கிறாங்க. வந்துருவாங்க!

இப்படிக்கு
ஜாம்பஜார் ஜக்கு

ஜாம்பஜார் ஜக்கு said...

அதெல்லாம் கவலப் படாத சார். சப்‍-ப்ரைம் அல்லாம் இவுங்கள ஒண்ணியும் பண்ணாது. கடன கட்டிடுவாங்க. டென்ஷன் ஆவாத!

இப்படிக்கு
ஜாம்பஜார் ஜக்கு

சதங்கா (Sathanga) said...

வால்பையன்,

வருகைக்கு நன்றி. இரண்டு வரிகள் கலக்கலா சொல்லிட்டீங்க :)

சதங்கா (Sathanga) said...

ஜாம்பஜார் ஜக்கு,

பேரே வித்தியாசமாக, catchyஆக இருக்கிறது :)

இரண்டு ஜோக் சொல்லி அசத்திட்டீங்க. வருகைக்கும், ஜோக்குகளுக்கும் மிக்க நன்றி.

வால்பையன் said...

//வால்பையன்,
வருகைக்கு நன்றி. இரண்டு வரிகள் கலக்கலா சொல்லிட்டீங்க :)//

வேறன்ன அனுபவம் பேசுது

வால்பையன்

கோகுலன் said...

சதங்கா..
இது நீங்க வரைந்த ஓவியமா?

சதங்கா (Sathanga) said...

கோகுலன்,

வருகைக்கு நன்றி.

மண்டபத்தில் யாராவது கொடுத்தது இல்லங்க :)) ஆ.வி.யில் வந்த ஜோக் பார்த்து வரைந்தது.

goma said...

எங்க எம் எல் எம் .ஸ்கீம்லே சேர்ந்தீங்கன்னா உக்காந்த இடத்திலே பணம் கொட்டும்னு சொன்னது இப்படித்தானா?
------------
எங்க ஸ்கீம்ல சேர்ந்தாங்க...இப்போ பாருங்க தெருத்தெருவா வீடு வீடா போய்ப் பிச்சை கேட்டுட்டு இருந்தவங்களை இப்படி வசதியா உக்கார வச்சு எடுக்க வச்சிருக்கோம்

ராமலக்ஷ்மி said...

படம் நல்லாருக்கு. ஏதாவது பொருத்தமா ஜோக் தோணும் போது வந்து போடுகிறேன். ஹி..ஹி..

சதங்கா (Sathanga) said...

goma,

வருகைக்கும், ஜோக்குகளுக்கும் மிக்க நன்றி. இரண்டு ஜோக்குகளும் அருமை !

சதங்கா (Sathanga) said...

ராம‌ல‌ஷ்மி மேட‌ம்,

//படம் நல்லாருக்கு. ஏதாவது பொருத்தமா ஜோக் தோணும் போது வந்து போடுகிறேன். ஹி..ஹி.. //

ஆஹா இந்த‌ ஜோக் கூட‌ ந‌ல்லாத் தான் இருக்கு :)))

வல்லிசிம்ஹன் said...

வேறன்ன அனுபவம் பேசுது //
க்ரெடிட் கார்ட் அனுபவம் யாரையும் விடவில்லை போல.
சூப்பர் படம் சதங்கா.

சதங்கா (Sathanga) said...

//சூப்பர் படம் சதங்கா.//

நன்றி வல்லிம்மா.

யாத்ரீகன் said...

very good.. neenga sona mathiri yosichaathaan theriyudhu sinna oviyam-naalum adhula yevlo velai iruku-nu...

சதங்கா (Sathanga) said...

யாத்ரீகன்,

//very good.. neenga sona mathiri yosichaathaan theriyudhu sinna oviyam-naalum adhula yevlo velai iruku-nu...//

ஆமாங்க. நானும் ரொம்ப நாள் இப்படித் தான் நினைத்தேன், வரைந்து பார்க்கும் வரை.

வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி.

கோவி.கண்ணன் said...

வாவ்....சூப்பர், ஒவ்வொரு உருவமும் ஒவ்வொரு முகபாவம். கலக்கலாக இருக்கு ! பாராட்டுக்கள் !