
இந்தக் காலத்துப் பொண்ணுங்க அழகில் ஒரு உயரத்தில் இருந்தாலும், அந்தக் காலத்து பொண்ணுங்க அளவுக்கு இயற்கையான அழகில் கொஞ்சம் பின்தங்கி தான் இருக்கிறார்கள் என்பது என் எண்ணம் ! (அழகுப் பெண்கள் அடிக்க வராதீர்கள் :))
அதே போல இப்ப வருகிற தீபாவளி மலர், பொங்கல் மலர் புத்தகங்களில் விளம்பரங்கள் தவிர்த்து, வேறு எதுவும் சிறப்பு கவனம் பெறுவது போல இல்லை. அப்ப வந்த மலர்கள் அப்படி இல்லை. ஒரு collectible என்று சொல்லலாம். அத்தனையும் பொக்கிஷம்.
அப்படி எங்கள் தாத்தா காலத்தில் வாங்கிய கல்கி தீபாவளி மலர், இன்றும் வீட்டில் உள்ளது. அந்தப் புத்தகத்தில் வந்த இந்தப் படம், பார்க்கும் போதே ஓவியரின் ரசனை என்னையும் ஈர்த்தது. என்ன ஒரு நளினம். பதின்மூன்று ஆண்டுகள் முன்னர், அப்படியே அதைப் பார்த்து வரைந்த ஓவியம். அரை மணி நேரத்தில் பேனா கொண்டு வரைந்தது. படத்தை க்ளிக்கி பெரிதாகப் பாருங்கள், உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்
1 comment:
அழகான படம். உண்மையிலையே அழகான ஓவியம். என்னதான் விஞ்ஞானம் வளர்ந்திருந்தாலும், அந்த காலத்தின் கட்டிடக்கலைக்கும், ஓவியக்கலைக்கும் இந்தக்காலம் நிகராகாது.
Post a Comment