Sunday, January 6, 2008

தத்தித் தாவுது முயல் - Pen and Ink



குட்டீஸ்க்கு பிடித்தமான வீட்டு விலங்குகளில் முயல் குட்டிகளுக்கு முக்கிய இடம் உண்டு. அவற்றைப் பார்க்கும்போது, தொட்டுப் பார்க்கத் தோன்றும். தூக்கிப் பார்க்கத் தோன்றும். சிறு வயதில் எங்கள் வீட்டில் முயல்கள் நிறைய வளர்த்தோம்.

சிறு குட்டிகளை எடுத்து தோள் பட்டைகளில் வைத்துக் கொள்வதில் ஒரு ஆனந்தம். துரு துருவென்று துள்ளிக் குதிக்கும் அவை, நம் மனதில் ஒரு ரம்மியத்தை ஏற்படுத்துவது நிச்சயம்.

இதுவும் ஒரு புத்தகத்தில் பார்த்து வரைந்தது. படம் பிடித்திருந்தால் பின்னூட்டத்தில் சொல்லுங்கள்.

2 comments:

goma said...

உங்கள் ஆர்ட் கேலரிக்குள் இன்றுதான் நுழைந்தேன்....சித்திரமும் கை பழக்கம்....என்பதை அழகாகக் காட்டியிருக்கிறீர்கள் .படம் பார்த்து வரைவதை விட பொருளைப் பார்த்து வரைதல் ஒரு நல்ல பயிற்சி இதை நான் சொல்ல வில்லை .ஒரு ஆர்டிஸ்ட் சொன்னது.
முயன்று பாருங்கள்.ஒரு flower vase ஒரு க்யூரியோ ,என்று எதிரே நிறுத்தி வரைந்து வலையில் பதியுங்கள்.காத்திருக்கிறேன்

goma said...

உங்கள் பதிவுக்கு ஒரு வரி
எழுதணுமா ,????!!!!
இருக்குற வரிகள் பத்தாது.....நம்ம வரி மந்திரி பார்த்தால் இது கூட நல்ல ஐடியாவா இருக்கேன்னு நம்ம மேலே, வரிசையா, வரி வரியா போட்டு ,நம்மை வரிக்குதிரையா ஆக்கப் போறார்.