சமீபத்தில் (அலுவலக நிமித்தம்) ஒரு வகுப்பில், "நீங்கள் உங்கள் ஊக்கத்தை பன்மடங்கு பெருக்கி, தள்ளிப் போட்டு வந்த ஒரு காரியத்தை முடிப்பதாய் உறுதி எடுத்துக் கொள்ளுங்கள். ஐந்து வாரங்கள் கழித்து அதை நிறைவேற்றிய விதத்தைப் பகிர்ந்து கொள்ளுங்கள்" என்றனர். நமக்குத் தான் எல்லாத்துக்கும் ஒரு காரணம் வேண்டுமே :) இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி உறுதி எடுத்துக் கொண்டேன்.
அலைந்து திரிந்து ஆயில் பெயிண்டிங்க் தேவையானவை எல்லாம் வாங்கி, அதன் நுணுக்கங்களை இணையத்தின் வழி கற்று, இந்த "கேலா லிலி" வரைய அமர்ந்தேன். இரண்டு நாட்கள், சுமார் ஐந்து ஐந்து மணி நேரம் எடுத்தது படத்தை முடிக்க. ஆனால் வண்ணம் காய்வதற்கு ஐந்தாறு நாட்கள் ஆனது.
ஓரளவுக்கு 'லிலி' நினைத்ததை விட நன்றாக வந்திருந்தது. படத்தை வகுப்பறையில் காண்பித்தபோது, ஒரே ஆரவாரம் தான் (அந்த அளவிற்கு படம் இல்லை என்பது உண்மை ;)). ஆனால் மனம் மிக திருப்தியானது அன்று.

படத்தைப் பெரிது செய்து பார்த்து, உங்கள் கருத்துக்களையும் பகிர்ந்து கொள்ளுங்கள்.