இந்த முறை இந்தியா சென்று திரும்புகையில் நிறைய புத்தகங்கள் எடுத்து வரணும் என்று நினைத்தேன். அது முடியவில்லை. புகைப்படங்கள் கூட எடுத்துவரமுடியவில்லை.
அப்பொழுது எனது ஷெல்ஃப் தோண்டுகையில், அதில் அந்த காலகட்டத்தில் வரைந்த படங்கள் சில ஒட்டி வைத்திருந்தேன். செல் அரித்து, அது கூட ஒரு கலை நயம் போல் காட்சி தந்தது. அப்படியே டிஜிட்டலில் க்ளிக்கிக் கொண்டேன்.
என்பது, தொன்னூறுகளின் கிரிக்கெட் நாயகர்கள் கவாஸ்கர், ரவி சாஸ்த்ரி, கபில் தேவ் மற்றும் பின்னணிப் பாடகர் கே.ஜே.யேசுதாஸ் அவர்கள். அந்தப் படம் இங்கே உங்கள் பார்வைக்கு. படத்தைக் க்ளிக்கி பெரிதாக்கி பாருங்கள்.
Subscribe to:
Post Comments (Atom)
4 comments:
இவர்கள் ஆடிய காலக் கட்டத்தில்தான் கிரிக்கெட்டை விழுந்து விழுந்து பார்த்தேன்:)! [இப்போ இண்ட்ரெஸ்ட் போய் விட்டது:)] உலகக் கோப்பையைக் கைப்பற்றி நாட்டுக்குப் பெருமை சேர்த்த மேட்ச் இன்னும் நினைவில் இருக்கிறது. கவாஸ்கர் 10000 ரன் பூர்த்தி செய்த மாட்சும் பார்த்திருக்கேனாக்கும்:)!
கபில் சற்று மெலிவாகத் தெரிகிறாரே?
கேஜே-யும் அருமை. படம் செல்லரித்ததுப் போனது சோகம்தான். டிஜிட்டலில் க்ளிக்கியது நல்ல வேலை. நல்ல வேளை.
வாழ்த்துக்கள் சதங்கா!
Blogger ராமலக்ஷ்மி said...
// இவர்கள் ஆடிய காலக் கட்டத்தில்தான் கிரிக்கெட்டை விழுந்து விழுந்து பார்த்தேன்:)!
[இப்போ இண்ட்ரெஸ்ட் போய் விட்டது:)] //
அப்படியே ரிப்பீட்டிக்கறேன் :))
//கபில் சற்று மெலிவாகத் தெரிகிறாரே?//
சைடில் வளைந்து மட்டை சுற்றுவதால் அப்படித் தெரியலாம் என நினைக்கிறேன்.
//கேஜே-யும் அருமை. படம் செல்லரித்ததுப் போனது சோகம்தான். டிஜிட்டலில் க்ளிக்கியது நல்ல வேலை. நல்ல வேளை.
வாழ்த்துக்கள் சதங்கா!//
மிக்க நன்றி.
இவர்களை கடக்காமல் / இவர்களிலேயே தங்காமல் அந்நாளைய கிரிக்கெட் மற்றும் இசை ரசிகர்கள் யாரும் இருக்கமாட்டார்கள்
தல.. இந்த இந்தப் படத்தை வார்ப்புருவில் உபயோகப் படுத்திக் கொள்ளவா...
Post a Comment