Showing posts with label Pen and Ink. Show all posts
Showing posts with label Pen and Ink. Show all posts

Friday, January 29, 2010

யானை - Pen Sketch



"கஜமுகனைக் காணுகையில் என்ன ஒரு கம்பீரம். அகண்ட முறமெனக் காதும், மாமலை எனப் பெருத்த உடலும், கற்தூண்களெனக் கால்களில் வீரு கொண்ட நடையும் ... சிறியவர் முதல் பெரியவர் வரை சட்டென எவரையும் கவர்ந்திடுமே".
நேற்றுக் கிடைத்த சிறு இடைவெளியில் வரைந்த இரண்டாவது படம். 10x8 வரைதாளில் அரை மணிநேரத்தில் பேனா கொண்டு அவுட்லைன் போட்டு, பின்னர் ஷேட்ஸ். அவ்ளோதான் :)

சிம்பான்ஸி - Pen sketch



"என்னைக் கொஞ்சம் நிம்மதியாத் தூங்க விடுங்களேன். மனிதனா மாறி உங்களைப் போல அல்லல் பட நான் ரெடி இல்ல, ரெடி இல்ல, ரெடி இல்ல ..."

ரொம்ப நாள் ஆச்சே என நேற்று வரைய அமர்ந்தேன். வழக்கம் போல நூலக புத்தகங்கள் இரைந்து கிடக்க, நமக்கு வசதியாய் இருக்கும் இரண்டு படங்களைத் தேர்வு செய்து கொண்டேன். முதலில் 'நம்மவர்'. அசத்தலாகப் படுத்திருக்கும் அந்தச் சாயலே படத்தை வரையத் தூண்டியது.

10x4 வரைதாளில் அரை மணிநேரத்தில் பேனாவில் சிம்பன்ஸியின் ஆனந்த சயனம் :)

Sunday, January 4, 2009

கவாஸ்கர், ரவி சாஸ்த்ரி, கபில் தேவ் இவர்களுடன் K.J.யேசுதாஸ்

இந்த முறை இந்தியா சென்று திரும்புகையில் நிறைய புத்தகங்கள் எடுத்து வரணும் என்று நினைத்தேன். அது முடியவில்லை. புகைப்படங்கள் கூட எடுத்துவரமுடியவில்லை.

அப்பொழுது எனது ஷெல்ஃப் தோண்டுகையில், அதில் அந்த காலகட்டத்தில் வரைந்த படங்கள் சில ஒட்டி வைத்திருந்தேன். செல் அரித்து, அது கூட ஒரு கலை நயம் போல் காட்சி தந்தது. அப்படியே டிஜிட்டலில் க்ளிக்கிக் கொண்டேன்.

என்பது, தொன்னூறுகளின் கிரிக்கெட் நாயகர்கள் கவாஸ்கர், ரவி சாஸ்த்ரி, கபில் தேவ் மற்றும் பின்னணிப் பாடகர் கே.ஜே.யேசுதாஸ் அவர்கள். அந்தப் படம் இங்கே உங்கள் பார்வைக்கு. படத்தைக் க்ளிக்கி பெரிதாக்கி பாருங்கள்.

Sunday, October 12, 2008

கலைவாணி - Single line drawing

தொன்னூற்றி இரண்டுகளில் சென்னையில் வசித்த போது இந்தப் படத்தின் நகல் கிடைத்தது. அப்போது பொறுமையாக வரைய முடியவில்லை.

நெற்றி திலகத்தில் ஆரம்பித்து, முகம், தலை, வலது தோள், கைகள், இசைக் கருவி, இடது கைகள், கால், தாமரை, வலது கால், மீண்டும் தாமரை என்று வந்து அழகாக ஒரே கோட்டில் முடியும் படம். இப்படத்தை முதலில் வரைந்த ஓவியரின் திறமையை எண்ணினால் இன்றும் வியப்பே மிஞ்சுகிறது !!!

இப்போது கிடைத்த சில மணித்துளிகளில் அந்தப் படத்தைப் பார்த்து வரைந்தேன். வழக்கம் போல, படத்தைப் பற்றின உங்கள் கருத்துக்களை மறவாமல் தெரிவியுங்கள்.

Saturday, April 5, 2008

கார்மேகக் கண்ணா - பேனா எண்ணம், கணினி வண்ணம்


(மறவாமல் படத்தைப் பெரிதுபடுத்திப் பாருங்கள்)

பதினோரு ஆண்டுகள் முன்னர் (1997ல்) பேனா கொண்டு வரைந்த படம். ஓவியர் ம.செ. அவர்கள் மிக அற்புதமாக கிருஷ்ணரை வரைந்திருந்தார். படத்தில் ஒரு வசீகரம் இருப்பதை உணர்ந்து, நாமும் வரையலாம் என்று அதைப் பார்த்து வரைந்தேன்.

வண்ணம் தீட்டாத அந்தப் படத்தை, தற்போது கணினி உதவியுடன் சுமாராக வண்ணம் தீட்டியிருக்கிறேன்.

படம் எப்படி இருக்கிறதென்று வழக்கம்போல உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

Monday, March 10, 2008

திரு. சாம் வால்டன் - Pen and Ink



இந்த U.S. மண்ண மிதிச்சு, கடந்த மூன்று வருடங்களில், சிறு பெறு நகரங்கள் சிலவற்றில் வசித்து இப்ப ஒரு சிற்றூரில் வசித்து வருகிறேன். அனைத்து இடங்களிலும் முதலில் shopping செய்யணும் என்றால், அங்கிருக்கும் நண்பர்களிடம், "இங்க பக்கத்துல எங்க வால்-மார்ட் இருக்கு ?" என்று தான் ஆரம்பிக்கும்.

வால்-மார்ட்டின் தந்தை திரு. சாம் வால்டன் அவர்களின் படம் ஒரு புக்மார்க்கில் கிடைத்தது. மிக அற்புதமாக அந்த ஓவியர் வரைந்திருந்தார். நாமும் இதனை வரைய வேண்டும் என்று பார்த்த மாத்திரத்திலேயே முடிவு செய்தேன்.

இந்த மாதிரி கோட்டு ஓவியங்கள் பார்க்கறதுக்கு எளிதாய் இருந்தாலும், வரையும் போது விரல் ஒடியும் அளவுக்கு கடினமான ஒன்று. தேவையானது "பொறுமையோ பொறுமை" மட்டுமே !!! கொஞ்சம் அப்படி, இப்படி விலகினாலும் படம் அதோ கதி தான். மற்ற வர்ண ஓவியங்களில் தவறுகளைச் சரி செய்ய ஏகப்பட்ட வாய்ப்புக்கள் அதிகம், ஆனால் கோட்டோவியங்களில் அப்படி இல்லை. இந்த‌ மாதிரி ப‌ட‌ங்க‌ளை எடுத்து வ‌ரைவ‌து ஒரு Challenging-ஆ, அதே நேரம் Intersting-ஆகவும் இருக்கும்.

இந்தப் பதிவையும் பாருங்க :

http://sithiram-pesuthadi.blogspot.com/2008/03/donald-daisy-ducks-water-color-work.html

Sunday, March 2, 2008

கலைவாணி - Pen and Ink



1953ம் ஆண்டு ஆனந்த விகடன் "தீபாவளி மலர்" புத்தகத்தில் வெளிவந்த படம். பதின்மூன்று ஆண்டுகள் முன்னர் இப்புத்தகத்தை பார்க்க நேர்ந்தது. இந்தப் படம் பார்த்தவுடன், வரைய வேண்டும் என்று மனம் ஆசை கொண்டது.

இரண்டு அல்லது மூன்று மணி நேரம் ஆகி இருக்கும் படம் வரைந்து முடிப்பதற்கு. படத்தை க்ளிக்கி பெரிதாகப் பார்க்கவும்.

Monday, February 25, 2008

ஆனந்த தாண்டவம்



தில்லை நடராஜரின் இந்தத் தாண்டவம் மிகப் பிரசித்த பெற்ற ஒன்று என்று நான் சொல்லத் தேவையில்லை. அதைப் பார்க்கும் போதெல்லாம் நமக்கும் எழுந்து ஆடலாம் என்று ஒரு உந்துதல் இருந்து கொண்டே இருக்கும். எனக்கு அதை வரைய வேண்டும் என்ற ஆசையில் ஒரு பழைய புத்தகத்தைப் பார்த்து, சுமாரா ஒரு பதினைந்து ஆண்டுகள் முன் வரைந்தது.

படத்தை க்ளிக்கி பெரிதாக்கிப் பாருங்கள்.

Sunday, January 6, 2008

தத்தித் தாவுது முயல் - Pen and Ink



குட்டீஸ்க்கு பிடித்தமான வீட்டு விலங்குகளில் முயல் குட்டிகளுக்கு முக்கிய இடம் உண்டு. அவற்றைப் பார்க்கும்போது, தொட்டுப் பார்க்கத் தோன்றும். தூக்கிப் பார்க்கத் தோன்றும். சிறு வயதில் எங்கள் வீட்டில் முயல்கள் நிறைய வளர்த்தோம்.

சிறு குட்டிகளை எடுத்து தோள் பட்டைகளில் வைத்துக் கொள்வதில் ஒரு ஆனந்தம். துரு துருவென்று துள்ளிக் குதிக்கும் அவை, நம் மனதில் ஒரு ரம்மியத்தை ஏற்படுத்துவது நிச்சயம்.

இதுவும் ஒரு புத்தகத்தில் பார்த்து வரைந்தது. படம் பிடித்திருந்தால் பின்னூட்டத்தில் சொல்லுங்கள்.

Thursday, November 29, 2007

Grey Wolf - Pen and Ink



பொதுவா, இந்த மாதிரி மிருகங்களை வரையும் போது, நம்மைப் பார்ப்பது போல வரைவது சற்றுக் கடினம். அதனால இந்தப் படத்தைப் பார்க்கும்போது அது பிடித்திருந்ததால் வரைய ஆரம்பித்தேன். பின்னர் தான் தெரிந்தது, தோலின் மடிப்பு / சுருக்கத்துக்கேற்ப சிறு வரிகள் கடுமையாக இருந்ததையும். அப்படியே வரைந்திருக்கிறேன். நீங்கள் தான் சொல்ல வேண்டும் படம் எப்படி இருக்கிறது என்று.

Friday, November 23, 2007

அணில் - Pen and Ink



அணில் தாவும் போதோ அல்லது அமைதியாய் ஏதாவது தேடிக் கொண்டிருக்கும் போதோ - ஏதேனும் சத்தம் கேட்டால், வாலை புஸ்ஸென்று வைத்துக் கொண்டு, கண்களையும் உருட்டி அங்குமிங்கும் பார்த்து கொள்ளும். அந்தக் காட்சி பார்ப்பதற்கு ரொம்ப அழகாய் இருக்கும். ஒரு புத்தகத்தில் அப்படி இருந்த காட்சியைப் பார்த்து வரைந்தது.

Monday, November 19, 2007

மர வீடு - Pen and Ink

இங்கு Richmond, Virginia வந்த புதிதில், இரண்டு ஆண்டுகள் முன்னர் வரைந்த படம். வழக்கம் போல நூலகத்தில் இருந்து எடுத்து வந்த புத்தகத்தில், பார்த்தவுடனேயே வரையத் தூண்டிய படம். கோட்டோவியம் தான், இருந்தாலும் அந்த shades தான் வரைவதற்கு inspiration-ஆக இருந்தது.