Saturday, January 3, 2009
வீடு - Pencil Sketch
தொன்னூற்றி நாலில், தமிழக வீடுகள் என்று குமுதத்தில் வந்த படம் என்று நினைக்கிறேன். முழுக்க பென்சில் தான். 2b பெசில் கொண்டு, அதைப் பார்த்து வரைந்த படம். ஷேட் வேண்டும் என்கிற இடத்தில், திக்கா போட்டு, பிறகு பேப்பர் வைத்து ஸ்மட்ஜ் செய்தேன். இப்பத் தானே பல எண்களில் பென்சிலும் கிடைக்கிறது :))
கிராமத்தில் எங்க வீடும் இதே போன்று தான் இருக்கும். நீண்டு அகன்ற தூண்கள் (எல்லாம் பர்மா தேக்கு), இறங்கிய தாழ்வாரம். முற்றத்தில் விழும் சூரிய வெளிச்சம் ... இப்படி எல்லாம் இப்படத்தில் இருக்க, அதுவே வரையவும் தூண்டியது.
அப்படியே எப்படி இருக்குனு ஒருவரி சொல்லிட்டுப் போங்க :))
Subscribe to:
Post Comments (Atom)
10 comments:
பர்மா தேக்கு பத்தி சொல்லவா வேணும் - சூப்பர் படம் - பென்சில் நல்லாவே வரைஞ்சிருக்கு - அந்த வாளி அருமை. நல்வாழ்த்துகள்
மெல்லிய திரைக்குப் பின்னால் வீட்டைப் பார்ப்பதுபோலத் தோன்றுகிறது.
வாளி பளிச்சிடுகிறது. நன்றாகவே வரைந்திருக்கிறீர்கள்.
வாழ்த்துகள்.
அட்டகாசமா இருக்கு. கொஞ்சம் Brigthness சேர்த்தா இன்னும் அருமையா இருக்கும்.
வீட்டுத் தாழ்வாரம், பக்கெட் எல்லாம் அருமை. நிழலா ஒரு பொண்ணு புடவையில் நிற்பதுப்போல் தெரிவது பிரமையா?
அருமை. அந்தத் தூண்கள் அப்படியே நான் பிறந்து வளர்ந்த வீட்டின் உள் திண்ணையினை நினைவூட்டுகின்றன. தூணில் ஸ்டைலாக சாய்ந்து நிற்கும் உருவமும் அருமை. [என் திண்ணை பதிவில் இப்படி ஒரு புகைப்படமே இருக்கிறது, என் தந்தை தூணில் சாய்ந்து நிற்கிற மாதிரி.]
வாளி படத்துக்கு கூடுதல் ப்ள்ஸ் பாயின்ட்!
பொக்கிஷமாகப் போற்றி வைத்திருக்கும் படங்கள் ஒவ்வொன்றாக வலையேறவும் என் வாழ்த்துக்கள் சதங்கா!
cheena (சீனா) said...
// பர்மா தேக்கு பத்தி சொல்லவா வேணும் - //
நம்ம தாத்தாக்களின் தாத்தக்கள், கலைநயத்துடன் கட்டி, என் வரை வளர்த்த வீடுகள் ... நம்ம ஊர் பக்கம் எல்லோருக்கும் (மத்திய தர வர்கத்தினர்) மனதில் ஓடும் கேள்வி ... இந்த ஜெனரேஷன் எல்லாம் வெளியூர் வெளிநாடுகளில் வாழ, நாளை என்பது கேள்விக்குறியாக, பெரும் பூதமாக, பெரிய வீடுகளின் பராமரிப்பும் சேர்ந்து மிறட்டுகிறது.
//சூப்பர் படம் - பென்சில் நல்லாவே வரைஞ்சிருக்கு - அந்த வாளி அருமை. நல்வாழ்த்துகள்//
ஆமால்ல, பென்சில் நல்லா வரஞ்சிருக்கு :)) வாழ்த்துக்களுக்கு நன்றிகள்.
வல்லிசிம்ஹன் said...
// மெல்லிய திரைக்குப் பின்னால் வீட்டைப் பார்ப்பதுபோலத் தோன்றுகிறது.//
ஆஹா கவிதை போல் சொல்லிவிட்டீர்கள்.
// வாளி பளிச்சிடுகிறது. நன்றாகவே வரைந்திருக்கிறீர்கள்.
வாழ்த்துகள்.//
மிக்க நன்றிம்மா.
ILA said...
// அட்டகாசமா இருக்கு. கொஞ்சம் Brigthness சேர்த்தா இன்னும் அருமையா இருக்கும்.//
தாழ்ந்த தாழ்வாரத்தின் கீழ் உள்ள அடர்த்தி, அதில் அங்கங்க விழும் சூரிய வெளிச்சம் தான் அழகு என்று நினைத்தேன். எப்படி brightness சேர்க்கரதுனு தெரியலையே !!!
துளசி கோபால் said...
// வீட்டுத் தாழ்வாரம், பக்கெட் எல்லாம் அருமை. //
பாராட்டுக்கு நன்றி டீச்சர்.
//நிழலா ஒரு பொண்ணு புடவையில் நிற்பதுப்போல் தெரிவது பிரமையா?//
தூணில் சாய்ந்து நிற்பது ஒரு குட்டிப் பையன். அவனுக்கும் பின்னால் சொல்கிறீர்களா ??
ராமலக்ஷ்மி said...
// அருமை. அந்தத் தூண்கள் அப்படியே நான் பிறந்து வளர்ந்த வீட்டின் உள் திண்ணையினை நினைவூட்டுகின்றன. தூணில் ஸ்டைலாக சாய்ந்து நிற்கும் உருவமும் அருமை. [என் திண்ணை பதிவில் இப்படி ஒரு புகைப்படமே இருக்கிறது, என் தந்தை தூணில் சாய்ந்து நிற்கிற மாதிரி.]//
பாராட்டுக்கு நன்றிகள் பல. ஆம் நினைவிருக்கிறது அப்படம், உங்கள் தந்தை மற்றும் வீடு.
// வாளி படத்துக்கு கூடுதல் ப்ள்ஸ் பாயின்ட்!//
வாளி கலக்கிருச்சே :))) நிறைய பேர் சொல்லிட்டீங்களே !!!!
// பொக்கிஷமாகப் போற்றி வைத்திருக்கும் படங்கள் ஒவ்வொன்றாக வலையேறவும் என் வாழ்த்துக்கள் சதங்கா!//
ஆம். அப்பொழுது வரைய முடிந்த அளவிற்கு, இப்பொழுது ஸ்கேன் பண்ணி, எடிட் செய்து வலையேத்த நேரம் தேட வேண்டியிருக்கிறது :)))
கண்டிப்பா ஒன்னொன்னா வரும். உங்க ஊக்கத்திற்கு நன்றிகள்.
Post a Comment