Monday, January 12, 2009
வெண் இதய அன்னங்கள் - Chalkpiece carving
வித்தியாசமா ஏதாவது செய்யனும் என்று யோசித்ததில், எப்போதோ எங்கோ பார்த்த இரு பளிங்கு அன்னங்கள் நினைவிற்கு வந்தன. இரண்டும் ஒன்றை ஒன்று பார்த்துக் கொண்டிருப்பது போல இருக்கும். அதன் நீண்டு வளைந்த கழுத்துக்கள் அப்படியே இதய வடிவில் ... இது தான் நம்ம சப்ஜெக்ட் இந்த சாக்பீஸ் கார்விங்கிற்கு.
எளிதாக எண்ணத்தில் தோன்றினாலும், செதுக்கிட்டே வரும்போது கழுத்து உடைந்துவிடும். இரண்டு மூன்று முறை தோற்று, பின்னர் பிறந்தன அன்னங்கள். இன்னும் டீடெய்ல் சேர்க்கலாம், உடைந்துவிடுமோ என பயம் :((
சென்ற பதிவில், செய்முறை விளக்கம் தந்தால் நன்றாக இருக்குமே என்றார் நானானிம்மா. இந்தப் பீஸும் முன்னரே செய்து விட்டதால், ஸ்டேஜ் பை ஸ்டேஜ் படம் எடுக்க முடியவில்லை.
இப்ப சிறு விளக்கம் பார்க்கலாம்: முதலில் சாக்பீஸை செவ்வகமாக செதுக்கிக் கொள்ளனும்.
இருபுறமும் சரி பாதி அளவிற்கு செதுக்கி .... செதுக்கி .... ம்.ஹிம். எழுத்தில் கொண்டு வரமுடியல ... அடுத்த கார்விங்கிற்கு படங்கள் நிச்சயம் :)))
Subscribe to:
Post Comments (Atom)
10 comments:
நல்லா இருக்கு...
சாக்கட்டி பிராண்டறதோட நிறுத்திக்கங்க... அடுத்தது பாய் பிராண்ட ஆரம்பிச்சி செய்முறை விளக்கம் குடுத்தா பதிவுலகம் தாங்காது :-)
சதங்கா
நன்று நன்று - வெண் இதய அன்னங்கள் அருமை - நல்ல்வாழ்த்துகள்
கடும் உழைப்பினிற்கும் பொறுமைக்கும் பாராட்டுகள்
அருமையா இருக்கு சதங்கா. உங்க கையில் எத்தனை கலைகள் இருக்கு. எல்லாம் பதியுங்கள். ஆவலுடன்
Looks good.. If you could make the picture in black background (using a black paper) and in close-up shot, it would look much better.
அசுரத்தனமான பொறுமை தேவை......ம்ம்ம் சாதித்திருக்கிறீர்கள்.
அன்புடன் அருணா
நல்லா இருக்குங்க..........
ஒரு வரி த்தனேங்க எழுத சொன்னிங்க.. அதுதான்
உதயமான எண்ணத்தில்
பொறுமையான கைவண்ணத்தில்
அருமையாகப் பிறந்தது
இரு அன்னங்கள் சேர்ந்த
இதய வடிவம்
எம் அனைவரின்
இதயங்களையும்
கொள்ளை கொள்ள!
வாழ்த்துக்கள் சதங்கா!
காதலின் தத்துவம்
முதலில் முயற்சி..
மூன்றிலோ நான்கிலோ வெற்றி..
மேலும் சிறப்பாக்கலாம் என்று நினைத்தால் உடைந்து விடுமோ என்ற பயம். அண்ணா... எங்கயோ போய்ட்டீங்க.
நல்லா இருக்கு. க்ராஃப்ட் கடைகளில் கண் விக்கும். குட்டியா ரெண்டு வாங்கி ஒட்டிவச்சுட்டா சூப்பர்!
கருத்திட்ட அனைவருக்கும் கனிவான நன்றி !!!
Post a Comment