Tuesday, January 6, 2009

சாக்பீஸ் ச்செய்ன் - Chalkpiece carving



எல்லோரும் பத்தாவது படிக்கும்போது கொஞ்சம் சீரியஸா ஆகிடுவாங்க. கல்வியின் அடுத்த கட்டத்தை நிர்ணயிக்கும் வகுப்பு அல்லவா ?!!! ஆனால், நானும் என் நண்பன் ஒருவனும் (வழக்கம் போல கடைசி பெஞ்ச் :)) ரொம்ப தீவிரமா சாக்பீஸ் கார்விங்கில் இறங்கி விடுவோம். கார்கள் தான் எங்க ஃபேவரிட். குட்டிக் குட்டியா அழகா வெண் கார்கள், ரெடி ஆக ஆக, மற்ற நண்பர்களுக்கு சப்ளை ஆகும். நம்ம கையில் எதுவும் நிற்காது.

வந்த உடனேயே, "யாராவது போய் ஆபீஸ் ரூமில் இருந்து சாக்பீஸ் வாங்கிட்டு வாங்க" என்பது சில ஆசிரியர்களின் வழக்கம் எங்கள் பள்ளியில். உங்கள் பள்ளியிலும் இருக்கலாம் !!! யாராவது முன் பெஞ்சில் இருந்து எழுந்தா கூட, "நீங்க உட்காருங்க, இந்தாப்பா கடைசி பெஞ்சு, யாராவது போங்க" என்று சொல்லுவார்கள்.

ஒரு சாக்பீஸ் வைத்துக் கொண்டு மற்றவற்றை ஆசிரியரிடம் நீட்டுவோம். முதலில் டெஸ்கில் வரைய பயன்படுத்திய சாக்பீஸ், திடீரென்று ஒருநாள் காராக மாறியது. ஜாமெட்ரி பாக்ஸ் தான் ஆஸ்தான டூல் பாக்ஸ். முதலில் ஷேப் மட்டுமே செய்த கார்கள், நாளடைவில் ஜன்னல் எல்லாம் குடைந்து நன்றாக வர ஆரம்பித்தது. வேறு எதுவும் உருவ‌ங்க‌ள் செய்த‌மாதிரி ஞாப‌க‌ம் இல்லை.

அந்த‌ விடுமுறை நாளில், ஊருக்குச் செல்கையில் ஒரு பாக்ஸ் சாக்பீஸ் வாங்கி சென்றேன். பிள்ளையார், க‌ணிணி, ம‌ண்ட‌ப‌ம், ஷோஃபா, டேபில், ஸ்டூல், செயின் இப்ப‌டி நிறைய‌ தோன்றிய‌தை எல்லாம் செய்ய‌ முடிந்த‌து.

இந்த முறை இந்தியா சென்ற போது, அவற்றை எல்லாம் எடுத்து வரலாம் எனப் பார்த்தால், அவ்வளவு டெலிகேட்டா இருந்தது. அதனால் ஊரில் பத்திரமாக வைத்து விட்டு, இங்கு வந்து புதிதாய் செய்யலாம் என எண்ணினேன்.

இங்க 'சைட்வாக் சாக்' என்று கொஞ்ச பெரிய சைஸில் சாக்பீஸ் கிடைத்தது. சில சிற்பங்கள் செதுக்க, எதிர்பார்த்த அளவிற்கு, சுமாராகவே வந்தன அவை.

அவற்றிலிருந்து "சாக்பீஸ் ச்செய்ன்" உங்கள் பார்வைக்கு. முன்னெல்லாம் ஒரே நாளில் செய்ய முடிந்தது. இப்பொழுது சம்சாரி ஆகி, குடும்பமும் பெரிதாக :))) நேரம் அதிகம் கிடைப்பதில்லை. அதனால் இதை சுமார் இரண்டு மணி நேரங்கள் ஒரு நாளைக்கு எடுத்து, மூன்று நாட்கள் ஆனது நிறைவு செய்ய.

22 comments:

Jayakanthan - ஜெயகாந்தன் said...

Looks good. Wonder how big the original Chalk was!

நாகு (Nagu) said...

கலக்குங்க...

கதை, கவிதை,ஓவியம், சிற்பம்(சமையல் இன்னும் நான் நம்பவில்லை) என்று எங்கியோ போயிட்டு இருக்கீங்க...

நல்லா இருக்கு. நாங்க பள்ளிக்கூடத்துல சாக்பீஸ் திருடி விக்கறதோட சரி.

துளசி கோபால் said...

காஞ்சிவரதரின் கல்மண்டபச் சங்கிலி நினைவு வந்துருச்சு.

எப்படித்தான் செஞ்சாங்களோன்னு இருக்கும். இப்பவும் உங்க சங்கிலி அதேதான் .....எப்படித்தான் செஞ்சீங்களோ!!!!!

அருமையா இருக்கு.

ஓய்வு நேரத்தில் இப்படி வெவ்வேற செஞ்சு வையுங்க. நான் வந்து கலெக்ட் பண்ணிக்கறேன். நம்ம கொலுவுக்கு ஆச்சு:-))))

cheena (சீனா) said...

அன்பின் சதங்கா

அருமையான கைத்தொழில் - நாகுவின் மறு மொழியின் முதல் பத்தியை அப்படியே மறு மறுமொழிகிறேன். திறமை - உழைப்பு - ஆர்வம் - நேரம் - தங்க்ஸின் ஒத்துழைப்பு இத்தனையும் ஒருங்கே கைவரப்பெற்ற சதங்கா - மேன்மேலும் சிறப்புகள் பெற நல்வாழ்த்துகள்

நாதஸ் said...

Very Nice !!!

சதங்கா (Sathanga) said...

Jayakanthan - ஜெயகாந்தன் said...

// Looks good. //

Thanks ஜெய்.

//Wonder how big the original Chalk was!//

உயரம் நம்ம ஊரு சாக்பீஸ் அளவு தான். ஒன்னரை அல்லது இரண்டு மடங்கு பருமன் அதிகம் இருக்கலாம்.

சதங்கா (Sathanga) said...

நாகு (Nagu) said...

//கதை, கவிதை,ஓவியம், சிற்பம்(சமையல் இன்னும் நான் நம்பவில்லை) என்று எங்கியோ போயிட்டு இருக்கீங்க...//

ஹோம் மினிஸ்டர் கன்ட்ரோல் தான் சமையல் ப்லாக். பினாமியா, என் பேர யூஸ் பண்ணிக்கிறாங்க :)))))

// நல்லா இருக்கு. நாங்க பள்ளிக்கூடத்துல சாக்பீஸ் திருடி விக்கறதோட சரி.//

அப்பவே பிஸினஸ்ல இறங்கிட்டீங்க ... ம்ம்ம்ம் :)))

ராமலக்ஷ்மி said...

"சித்திரம் பேசுதடி"யில்
சிற்பங்களும் பேசுதடி!

சகலகலாவல்லவர் நம் சதங்கா என்றால் அது மிகையே இல்லைதானே நண்பர்களே?

உங்கள் அசாத்திய பொறுமைக்கும் ஒரு சல்யூட்.

முகவை மைந்தன் said...

நல்ல பொழுதுபோக்கு. சிற்பமும், படமும் சிறப்பு. வாழ்த்துகள்.

நானானி said...

சிற்பமும் கூட கைப் பழக்கம் போல.
ஆர்வமிருந்தால்....'எத்தைத்தின்னால்பித்தம் தீரும்' என்பது போல, எத்தைச் செய்தால் ஆர்வம் தீரும் என்று உங்களைச் சொல்லலாம்..சதங்கா!
உங்கள் ஆர்வம் தொடரட்டும். எங்களுக்கும் ஐடியாக்கள் கிடைக்கும்.
செய்தவிதம் டெமோ காட்டியிருக்கலாம்.
எங்கள் மாடி ப்ளாட்டிலிருக்கும் வேலைக்குப் போகும் பெண் ஒருவர் தற்போது ஓய்வு நேரத்தில் தஞ்சாவூர் பெயிட்டிங் செய்து கொண்டிருக்கிறார்.
என் ஆர்வம் தெரிந்து அவ்வப்போது கொண்டு வந்து காட்டுவார். அதன் நுணுக்கமான வேலைப்பாடுகள் கண்டு அசந்துவிட்டேன். இப்போது அதை வலையுலகப் பார்வைக்குத்தரலாம்(உங்களுக்கும்தான்)என்ற எண்ணம் தோன்றியிருக்கிறது.

நானானி said...

கல்லிலே செதுக்கிய கற்சங்கிலி பாத்திருக்கேன். சாக்பீஸ் சங்கிலி இப்பத்தான் பார்க்கிறேன்.

உயிரோடை said...

வாவ் நல்லா இருக்கு...

சதங்கா (Sathanga) said...

துளசி கோபால் said...

// காஞ்சிவரதரின் கல்மண்டபச் சங்கிலி நினைவு வந்துருச்சு.//

இது பார்த்ததில்லையே !!! தஞ்சை பெரிய கோவிலில் இது போல் பார்த்த நினைவு.

// எப்படித்தான் செஞ்சாங்களோன்னு இருக்கும். இப்பவும் உங்க சங்கிலி அதேதான் .....எப்படித்தான் செஞ்சீங்களோ!!!!!

அருமையா இருக்கு.//

ஒன்னும் பெரிய விசயமில்லை டீச்சர். நேரம் + பொறுமை அவ்வளவு தான்.

// ஓய்வு நேரத்தில் இப்படி வெவ்வேற செஞ்சு வையுங்க. நான் வந்து கலெக்ட் பண்ணிக்கறேன். நம்ம கொலுவுக்கு ஆச்சு:-))))//

சீனா ஐயாவும் கைத்தொழில் என்று சொல்லிட்டார், நம்மளும் நாகு மாதிரி பிஸினஸில் இறங்கலாம் போல !!! :))) உங்களுக்கு இல்லாததா, வாங்க வாங்க.

சதங்கா (Sathanga) said...

cheena (சீனா) said...

//திறமை - உழைப்பு - ஆர்வம் - நேரம் - தங்க்ஸின் ஒத்துழைப்பு இத்தனையும் ஒருங்கே கைவரப்பெற்ற சதங்கா - மேன்மேலும் சிறப்புகள் பெற நல்வாழ்த்துகள்//

முக்கியமா, தங்க்ஸின் ஒத்துழைப்பை போல்ட் ஆக்கிட்டேன் :))) வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி.

சதங்கா (Sathanga) said...

nathas said...

// Very Nice !!!//

வாங்க ஒளிச் சித்திரர் !!! பாராட்டுக்கு மிக்க நன்றி.

சதங்கா (Sathanga) said...

ராமலக்ஷ்மி said...

// "சித்திரம் பேசுதடி"யில்
சிற்பங்களும் பேசுதடி!//

வார்த்தை வித்தகரின் மொழி விளையாட்டு ரசிக்க வைக்கிறது.

// சகலகலாவல்லவர் நம் சதங்கா என்றால் அது மிகையே இல்லைதானே நண்பர்களே?//

ம்.ஹிம். கற்றது கை மண்ணளவே. இது தன்னடக்கம் அல்ல, உண்மை !!! :))))

// உங்கள் அசாத்திய பொறுமைக்கும் ஒரு சல்யூட்.//

மிக்க நன்றி.

சதங்கா (Sathanga) said...

முகவை மைந்தன் said...

// நல்ல பொழுதுபோக்கு. சிற்பமும், படமும் சிறப்பு. வாழ்த்துகள்.//

முன்னர் பொழுது போக்காக இருந்தது. இப்ப எங்கே பொழுது கிடைக்கிறது !!! :)) கிடைக்கிற சந்தர்ப்பத்தில் செய்கிறேன். வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி.

சதங்கா (Sathanga) said...

நானானி said...

// சிற்பமும் கூட கைப் பழக்கம் போல.//

ஆமாம். அழகா சொல்லிட்டீங்க.
//ஆர்வமிருந்தால்....'எத்தைத்தின்னால்பித்தம் தீரும்' என்பது போல, எத்தைச் செய்தால் ஆர்வம் தீரும் என்று உங்களைச் சொல்லலாம்..சதங்கா!
உங்கள் ஆர்வம் தொடரட்டும். //

இந்த பீஸ் செய்து கிடைத்த திருப்தியை பன்மடங்கு செய்யும் வரிகள். மிக்க மகிழ்ச்சி.

//எங்களுக்கும் ஐடியாக்கள் கிடைக்கும்.
செய்தவிதம் டெமோ காட்டியிருக்கலாம்.//

நல்ல ஐடியா. அடுத்த சிற்பங்கள் டெமோ தர முயற்சிக்கிறேன். படங்களாகவோ, வரிகளாகவோ !!!

// எங்கள் மாடி ப்ளாட்டிலிருக்கும் வேலைக்குப் போகும் பெண் ஒருவர் தற்போது ஓய்வு நேரத்தில் தஞ்சாவூர் பெயிட்டிங் செய்து கொண்டிருக்கிறார்.
என் ஆர்வம் தெரிந்து அவ்வப்போது கொண்டு வந்து காட்டுவார். அதன் நுணுக்கமான வேலைப்பாடுகள் கண்டு அசந்துவிட்டேன். இப்போது அதை வலையுலகப் பார்வைக்குத்தரலாம்(உங்களுக்கும்தான்)என்ற எண்ணம் தோன்றியிருக்கிறது.//

ரொம்ப நாள் கத்துக்கணும் என்று நினைத்தவற்றுள் தஞ்சை ஓவியமும் ஒன்று. உங்கள் ஆர்வத்திற்கும், உங்க நெய்பரின் ஆர்வத்திற்கும் வாழ்த்துக்கள். எப்ப பதிவு போடப் போறீங்க ???

நானானி said...

கூடிய சீக்கிரம். என் கேமரா கொஞ்சம் செல்லம் கொஞ்சிக்கொண்ட்டிருக்கிறது. அதை தட்டி கொட்டி வழிக்குக் கொண்டுவரணும்.

கபீரன்பன் said...

ரொம்ப நல்லா இருக்கு சதங்கா.

அது மேலே தண்ணி விழாம பாத்துக்குங்க !:)) பிள்ளைகள் இருக்கிற வீட்டுல எதிர்பாராதது எதுவும் நடக்கும். என் பையனாயிருந்தால் சாக்பீஸை தின்றே தீர்த்திருப்பான் :)))

சதங்கா (Sathanga) said...

நானானி said...

// கூடிய சீக்கிரம். என் கேமரா கொஞ்சம் செல்லம் கொஞ்சிக்கொண்ட்டிருக்கிறது. //

விடாதீங்க. ரெண்டு போடு போடுங்க. :))

படங்களைப் பார்க்க வெய்ட்டீஸ்ஸ்ஸ். நீங்களும் அவங்க கிட்ட இருந்து கத்துக்கங்க. எங்களுக்கும் சொல்லிக் கொடுங்க !!!

சதங்கா (Sathanga) said...

கபீரன்பன் said...

// ரொம்ப நல்லா இருக்கு சதங்கா.//

மிக்க நன்றி கபீர்.

// அது மேலே தண்ணி விழாம பாத்துக்குங்க !:)) பிள்ளைகள் இருக்கிற வீட்டுல எதிர்பாராதது எதுவும் நடக்கும். என் பையனாயிருந்தால் சாக்பீஸை தின்றே தீர்த்திருப்பான் :)))//

ஹா.ஹா. எங்க வீட்டு குட்டீஸ் கொஞ்சம் வளர்ந்துவிட்டார்கள். அதனால் சாப்பிட மாட்டர்கள். இருந்தாலும், பத்திரமாக வைக்க, ஏதாவது ஃப்ரேம் மாதிரி, அல்லது கண்ணாடி குடுவை, இது போல ஏதாவது யோசித்துக் கொண்டிருக்கிறேன். அடுத்த முறை ஆர்ட் ஷாப் செல்லும் போது அலசணும். தகவலுக்கு நன்றிங்க.