Sunday, December 28, 2008

சந்தை - Water Color

என்பத்து ஒன்பதில் வரைந்த படம். அப்பொழுது வந்த காலண்டர் எல்லாமே அற்புதமாய், ஏதாவது ஒரு விதத்தில் நம் அனைவரையும் ஈர்ப்பதாகவே இருக்கும். அப்படி ஒரு காலண்டரில், இந்தப் படம் பார்க்கும் போதே, அதன் வண்ணக்கலவையில் மனம் கரைய, ப்ரஷ் பிடித்தேன்.

ரொம்ப அற்புதமா வந்திருக்கு என்றெல்லாம் சொல்லவில்லை. இன்னும் நல்லா ஃபினிஷிங் செய்திருக்கலாம். நிறைய தண்ணி போட்டா, பேப்பர் ஆட ஆரம்பிக்குமே என்று டச்சப் செய்யத் தோன்றவில்லை :))



படத்தைப் பார்த்து, அப்படியே ஒரு வரி, எப்படி இருக்குனு சொல்லிட்டுப் போங்க :))

22 comments:

பிரேம்ஜி said...

சிறப்பான படம்.நீங்கள் சொன்னபடி ஃபினிஷிங் முடித்திருந்தால் மிக சிறப்பாக இருந்திருக்கும்.

cheena (சீனா) said...

அன்பின் சதங்கா

நல்லாவே இருக்கு - கண் பார்க்க - கை வரைய - அற்புதம்

இயல்பாய் கிராமச் சூழ்நிலை

குடைகள் - அமர்ந்திருக்கும் தோற்றம் - நிற்கும் அழகு - லேசாக இயற்கையாக மாராப்பு விலகி இருப்பது - இன்னும் பலப்பல கிராமியச் சூழலை அப்படியே கண் முன்னே நிறுத்துகிறது

நல்வாழ்த்துகள்

கபீரன்பன் said...

கண்டனூர் கோட்டையூர் வாரச் சந்தை நினைவுக்கு வருது.:)) வீடுகளுக்கு ஓடு வேய்ந்த மாதிரி காட்டியிருந்தால் இன்னும் கிராமம் களை கட்டியிருக்கும்

SUREஷ்(பழனியிலிருந்து) said...

பதினாறு வயதினிலே.........

SUREஷ்(பழனியிலிருந்து) said...

இதுக்கு பேரும் சந்தைதானே.......

SurveySan said...

very nice.

ராமலக்ஷ்மி said...

சிந்தையைக் கவரும் ‘சந்தை’.
மிக இயல்பாக அருமையா வந்திருக்கிறது படம். வாழ்த்துக்கள் சதங்கா!

சதங்கா (Sathanga) said...

பிரேம்ஜி, சீனா ஐயா, கபீரன்பன், சுரேஷ், சர்வேசன், ராமலஷ்மி மேடம்,

அனைவரின் வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி.

கபீர் >> கண்டனூர், கோட்டையூர் என்று சொல்லி ஊர்ப்பக்கம் ஞாபகத்தை இழுத்துச் சென்றுவிட்டீர்கள். ஆனா இது கேரளா சந்தை மாதிரி படுகிறதோ ??

ச.பிரேம்குமார் said...

மிக அழகாக இருக்கிறது படம். வாழ்த்துக்கள்.

இப்போதும் வரைவதுண்டா?

நட்புடன் ஜமால் said...

நல்லயிருக்கு ...

இன்னும் தொடருகிறதா ...

உயிரோடை said...

//நிறைய தண்ணி போட்டா, பேப்பர் ஆட ஆரம்பிக்குமே //

பேப்ப‌ருமா? :)

நீங்க‌ க‌விதை ம‌ட்டும் தான் ந‌ல்லா எழுதுவீங்க‌ன்னு நினைச்சேன் :)

சதங்கா (Sathanga) said...

பிரேம்குமார் said...

//இப்போதும் வரைவதுண்டா?//

அதிரை ஜமால் said...

// இன்னும் தொடருகிறதா ...//

உங்களின் பாராட்டுக்கு நன்றி. சிறு வயதில் வரைந்த அளவிற்கு இல்லை. ஆனாலும் அப்பப்ப வரைவது உண்டு. கடந்த சில மாதங்களில் வரைந்த இரண்டு படங்கள் உங்கள் பார்வைக்கு:

கலைவாணி
குசேலன்

சதங்கா (Sathanga) said...

மின்னல் said...

// //நிறைய தண்ணி போட்டா, பேப்பர் ஆட ஆரம்பிக்குமே //

பேப்ப‌ருமா? :)//

ஆமா, வயசான பேப்பர் வேற :)))

// நீங்க‌ க‌விதை ம‌ட்டும் தான் ந‌ல்லா எழுதுவீங்க‌ன்னு நினைச்சேன் :)//

அப்படி எல்லாம் எதுவும் இல்லைங்க... எல்லாவற்றிலும் கொஞ்சம் கால் வைத்துக் கொள்வது, அவ்வளவு தான் :))

நானானி said...

கிராமீய சந்தையை கண் முன் காண முடிகிறது. அமைதியான சந்தை!!!

துளசி கோபால் said...

படம் அருமையா இருக்கு.

புது வருசத்துக்கான இனிய வாழ்த்து(க்)கள்

சந்தனமுல்லை said...

படம் அருமை..நல்ல சூழல்..கிராமத்து மணம்..கமழ்கிறது!!

சதங்கா (Sathanga) said...

நானானிம்மா, துளசி டீச்சர், சந்தனமுல்லை,

அனைவரின் பாராட்டுக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி.

எல்லோருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் !!!

sury siva said...

இந்த ஒரு
இதமான சுகமும் சூழ்னிலையும்
இனி வருமோ என
எண்ணி எண்ணி
ஏங்க வைக்கிறது.

சுப்பு ரத்தினம்.
http://vazhvuneri.blogspot.com

M.Rishan Shareef said...

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் !
அருமையான ஓவியம் நண்பரே...!

சதங்கா (Sathanga) said...

sury said...

// இந்த ஒரு
இதமான சுகமும் சூழ்னிலையும்
இனி வருமோ என
எண்ணி எண்ணி //

எனக்கு வண்ணங்கள் பிடித்தது என்றேன், நீங்கள் இந்த சூழ்நிலையில் அமைந்த வாழ்வை ரசித்திருக்கிறீர்கள். அற்புதம்.

சதங்கா (Sathanga) said...

எம்.ரிஷான் ஷெரீப் said...

// இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் !
அருமையான ஓவியம் நண்பரே...!//

புத்தாண்டு வாழ்த்துக்கள் வலைச்சர நட்சத்திரமே !! பாராட்டுக்கும் மிக்க நன்றி.

Anonymous said...

எனக்கு பிடிச்சிருக்கு ரொம்ப