Showing posts with label Water Color. Show all posts
Showing posts with label Water Color. Show all posts

Sunday, February 15, 2009

காளான்கள் - Water color



வழக்கம் போல கைநிறைய புத்தகங்கள் எடுத்து வந்தேன் நூலகத்தில் இருந்து. நல்ல படமா இருக்கணும், வரையறதுக்கும் எளிதா இருக்கணும் என்ற கோணத்திலேயே, எதை வரையலாம் என அத்தனை புத்தகங்களையும் (படம்) பார்த்தேன். இந்த காளான்கள் சட்டென மனதை எட்டிப் பிடித்தன. நினைத்த மாதிரி எளிமையாவும் இருக்க, வரைய அமர்ந்தேன்.

6"x2" கட்டம் கட்டி ஒரு பென்சில் ஸ்கெட்ச். கட்டங்கள் அகற்றி முதலில் ஒரு மெல்லிய செபியா வாஷ் (Brown கலர்). அது காய்ந்தவுடன், அதை விட கொஞ்சம் அடர்த்தியான வாஷ். மூன்றாவது ஆங்காங்கே இருக்கும் மிக அடர்த்தியான Brown மற்றும் Black கலவை. நினைத்த அளவு ஈஸியா இல்லை. இரண்டு மணி நேரங்கள் ஒரே சிந்தனை என கட்டிப் போட்டது காளான்கள் :))

Sunday, January 18, 2009

The Thinker - Water color



அகெஸ்டே ராடின் அவர்களின் உலகப் புகழ்பெற்ற இந்தச் சிலையைப் பார்க்கும் போதெல்லாம், நாமும் என்னத்த சாத்தித்துவிட்டோம் என்று சிந்தனை ஊற்றெடுக்கும். கற்றது கைமண்ணளவே, இன்னும் மேலே போ என்பது போல நம்மையும் சிந்திக்க வைக்கும் இச் சிலையை வரைந்தது 92ல்.

One Color, different tones முயற்சி செய்ததும் சற்று வித்தியாசமாக இருந்தது. நீரின் அளவை வர்ணத்தில் எவ்வளவு சேர்த்தால், லைட் கலரில் இருந்து டார்க் கலர் கிடைக்கிறது என கற்றுக் கொள்ளவும் முடிந்தது.

Free hand drawing மாதிரி, Free brush drawing என்று சொல்லலாம் இப்படத்தை :))

Sunday, December 28, 2008

சந்தை - Water Color

என்பத்து ஒன்பதில் வரைந்த படம். அப்பொழுது வந்த காலண்டர் எல்லாமே அற்புதமாய், ஏதாவது ஒரு விதத்தில் நம் அனைவரையும் ஈர்ப்பதாகவே இருக்கும். அப்படி ஒரு காலண்டரில், இந்தப் படம் பார்க்கும் போதே, அதன் வண்ணக்கலவையில் மனம் கரைய, ப்ரஷ் பிடித்தேன்.

ரொம்ப அற்புதமா வந்திருக்கு என்றெல்லாம் சொல்லவில்லை. இன்னும் நல்லா ஃபினிஷிங் செய்திருக்கலாம். நிறைய தண்ணி போட்டா, பேப்பர் ஆட ஆரம்பிக்குமே என்று டச்சப் செய்யத் தோன்றவில்லை :))



படத்தைப் பார்த்து, அப்படியே ஒரு வரி, எப்படி இருக்குனு சொல்லிட்டுப் போங்க :))

Sunday, November 9, 2008

நந்தி - Water Color



அநேகமா எல்லா சிவன் கோவில்களிலும், சிவனைப் பார்க்கறோமோ இல்லையோ, நந்தியைக் பார்க்காமல் இருக்க முடியாது. சிவனைப் பார்க்கறதுக்கே இவர் கிட்ட பர்மிஷன் வாங்கி தான் பார்க்கணும் என்று நம் முன்னோர்கள் சொல்வார்கள்.

பொதுவாக, யாராவது குறுக்கே வந்தால், 'நந்தி மாதிரி ஏன் வழி மறிக்கிறாய்' என்று நையாண்டியும் செய்வார்கள்.

ஆத்திகமோ, நாத்திகமோ ... பார்த்தவுடன் பிடித்து வரைந்த படங்களுள் இந்த நந்தி தேவனும் ஒன்று, வருடம் 1992. அப்பதான் ப்ரஷ் பிசிறில்லாமல் என் கைக்குப் பழகிய நேரம். அதனால், பென்சில் அவுட்லைன் போடாமல், ப்ரஷ் கொண்டு வரைந்த சிம்பிளான ஓவியம்.

Sunday, November 2, 2008

அமலா என்றால் அழகு - water color solo

தொன்னூறுகளில், அநேக தமிழ் நெஞ்சங்களைக் கவர்ந்த சிறப்பான நடிகையாகத் திகழ்ந்தவர் அமலா. ஏதோ ஒரு அழகு அவரை மற்ற நடிகைகளிடம் இருந்து வேறுபடுத்தியது. ஐரிஷ் ஜீனாகக் கூட இருக்கலாம் :) அவரது கொஞ்சு தமிழும் மேலும் அழகு சேர்த்தது.

ஒரு புத்தகத்தில் பார்த்து இந்தப் படம் அப்போது வரைந்தேன். பென்சில் அவுட்லைன் போட்டு, ஒரே வர்ணம், வேறு வேறு ஷேட்கள், அவ்வளவு தான். கொஞ்சம் சிரத்தை எடுத்து ஸ்மட்ஜ் செய்திருக்கலாம். அப்போது முடியவில்லை. இப்போது தொட்டால் கிழியும் நிலையில் இருக்கிறது பேப்பர். அதனால் விட்டுவிட்டேன்.

படத்தைப் பார்த்து உங்கள் கருத்துக்களை மறவாமல் தெரிவியுங்கள்.

Thursday, March 20, 2008

கழுகு - நிழலோவியம் - Water Color


ஏதாவது ஒரு படம், பார்க்கறதுக்கு அழகா இருக்கணும், வரையறதுக்கும் எளிதா இருக்கணும் என்று யோசித்து இந்தப் படத்தை வரைய அமர்ந்தேன்.

மூன்றே வண்ணங்களில், அரை மணி நேரத்தில் வரைந்த படம்.

மாலைச் சூரியனின் ஆரஞ்சு வானத்தில் கூட்டை நோக்கி விரையும் கழுகு, நம்ம வீட்டுச் சுவற்றை இப்போது அலங்கரிக்கிறது :)

Sunday, March 9, 2008

Donald & Daisy ducks - Water Color - Work shop

ஃப்ளாஷ்பேக் சிந்தனைகள் எப்படி கவிதைகளாய், கட்டுரைகளாய் வெளிப்படுகிறதோ, அதே போல் வரைதலிலும் சில ப்ளாஷ்பேக் படங்கள் இருப்பதை, இந்த முறை நூலகத்திற்குச் சென்றபோது உணர முடிந்தது.

குட்டீஸ்க்கு புத்தகங்கள் எடுக்கும்போது இவையும் கண்ணில் பட்டன. பள்ளி பருவத்தில் நிறைய வரைந்த படங்களுள் Micky Mouse, Donal Duck வகையும் ஒன்று. ஆனால் காலப்போக்கில், அவை நினைவில் இருந்து அகன்று விட்டன. அப்போது Daisy Duck இருந்ததில்லை.

பழைய ஆர்வம் திரும்பப் பெற்று, டோனல்டும், டெய்ஸியும் சந்தோசமாய் நடைபோடுவதை வரைந்திருக்கிறேன்.

முந்தைய பதிவுகளில் இருந்து சற்று மாறுபட்டு, இந்தப் பதிவில், படம் ஆரம்பம் முதல் முடிவு வரை ஏனைய படங்களுடன் விளக்கியிருக்கிறேன். உங்களுக்குப் பயனுடையதாய் இருக்கலாம் என்ற நினைப்பில் =;) வரைய ஆர்வம் உள்ளவர்கள் மேலும் வாசியுங்கள். இதுவரை வரைந்ததே இல்லை என்றாலும், முயற்சி செய்து பார்க்க அழைக்கிறேன்.

ஒரு ரூலர், பென்சில், ரப்பர் (Eraser), நீர் வர்ணப் பெட்டி, மிகச் சிறிய பெட்டி போதும் (சுமார் 12 வண்ணங்கள்). Round ப்ரஷ்கள் 0, 1 & 4. பேலட் (குழிகள் பல கொண்டு, வெவ்வேறு வர்ணங்கள் கலக்க ஏதுவான ஒன்று). சிறு குடுவையில் நீர். Tissue paper அல்லது பழைய துணி. இவையெல்லாம் பக்கத்தில் எடுத்துக் கொண்டு, ஒரு ஆறு மணி நேரத்தையும் ஒதுக்கிக் கொண்டு ஆரம்பியுங்கள். Wish you all the best !

இந்தப் படம் 7-1/2 க்கு 10 inches. முதலில், அசல் படத்தில் அளவுகள் இட்டுக் கொண்டு, பின் வரைய வேண்டிய தாளிலும். குறுக்கு நெடுக்காக ஒரு inch இடைவெளி விட்டு, குறித்து, கோடு போட்டுக் கொள்ள வேண்டும். மேலேயும், இடப்புறத்திலும் எண்கள் போட்டுக் கொள்ளவும். படத்தைப் பெரிது பண்ணி பார்த்தால் கட்டங்களும், எண்களும் நன்றாகத் தெரியும்.



இன்ச் அளவுகளில் கோடுகள், எண்கள் போட்டு பாதி நிலையில் வரைந்த படம்.

அசலில் எந்தக் கட்டத்தில் என்னென்ன இருக்கிறதோ, அப்படியே நகலில் மென்மையாக வரையுங்கள். தவறு நேர்ந்தால், திருத்தி வரையும் போது கை கொடுக்கும். இங்கே இருந்து ஆரம்பிக்கணும் என்று இல்லை. எந்தக் கட்டதிலும் ஆரம்பித்து, பொறுமையாக கட்டங்களை நிரப்பினால், படம் நன்றாக வரும்.



உருவங்கள் முற்றிலும் வரைந்த நிலையில் படம்.


வரைதல் நிறைவுற்ற பின், அதை ஒரு முறை சரி பார்த்துக் கொள்ளுங்கள். எல்லாம் நிறைவாய் இருக்க, தேவையில்லாத கோடுகளை அழித்து விடுங்கள். அப்படிச் செய்யும் போது, படமும் சில இடங்களில் அழிபடும். அதன் மேல் மீண்டும் வரைந்து கொள்ளுங்கள்.



தேவயற்ற கோடுகள் நீக்கி, வர்ணத்திற்குத் தயாராய் இருக்கும் படம்.

வர்ணத்தில் எப்போதுமே மெல்லிய (Light colors first) வண்ணத்தில் இருந்து ஆரம்பியுங்கள். இந்தப் படத்தில் மஞ்சள். மஞ்சளை பேலட்டில் பிதுக்கிக் கொண்டு, சிறிது நீர் விட்டு நன்றாக கலக்கி, ப்ரஷ்ஷில் வர்ணம் ஒரு stiff-ஆக இருக்கும் வரை பேலட்டில் வழித்து, வர்ணம் பூசவும்.

பின் அடுத்த மெல்லிய வர்ணம் என்று தொடருங்கள். வர்ணம் பூச நிறைய இடமிருப்பின் பெரிய எண் கொண்ட ப்ரஷ் பயண்படுத்துங்கள். இடம் குறையக் குறைய ப்ரஷ்களின் எண்ணையும் குறைத்துக் கொள்ளுங்கள்.



கறுப்பு வர்ணத்திற்கு (Finishing Touch) தயாராய் இருக்கும் படம்.


அவுட்லைனிற்கு Round ப்ரஷ் 0 எடுத்து, எந்த அளவு பொறுமை கையாள முடியுமோ அந்த அளவிற்கு நேரம் எடுத்து அவுட்லைன் போடுங்கள். ஏனெனில் Finish touch அல்லவா ! இந்தப் படத்தையும், இதற்கு முந்தைய படத்தையும் ஒப்பிட்டுப் பாருங்கள்.



வர்ணம் நிறைவு பெற்ற படம்

சில மணி நேரங்கள் விடுங்கள், படம் நன்றாகக் காயட்டும். பிறகு மேலும் தெரியும் பென்சில் கோடுகளை அழியுங்கள். படத்தைக் கணிணியில் ஏற்றி, சிற்சிறிய பிழை திருத்தி, Contrasting-ஆ ஒரு background-ம் போட்டால் அவ்வளவு தான்.

Sunday, February 17, 2008

Scarlet Tanager - Water Color



இந்த அமெரிக்கப் பாடும் பறவை ஸ்கார்லெட் டானெகர், பார்த்த மாத்திரத்திலேயே அனைவரையும் கவரக் கூடியது. குறிப்பாக அதன் சிவப்பு நிற மேனியும், கரு வாலும், இறக்கைகளும்.

சுமாரா வரைஞ்சிருக்கேன். படத்தைக் க்ளிக்கி பெரிதாய் பார்த்தால், படம் இன்னும் கொஞ்சம் நல்லா இருக்கும். பார்த்துப் பிடிச்சிருந்தா சொல்லுங்கள்.

Tuesday, January 1, 2008

Dora and Boots - Water Color



மற்றுமொரு கார்ட்டூன் சித்திரம் 'Dora and Boots'. Dora என்றால் பெண் குழந்தைகளுக்கு ரொம்பப் பிரியம். என் மகளும் சேர்த்து. அவளுக்காக Water Color-ல் வரைந்தது. படம் எப்படி இருக்கிறது என்று உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

வலையுலகக் குழந்தைகளுக்கும்,
வந்து வாசிக்கும் பெரியவர்களுக்கும்,
வாலிப இளையர்களுக்கும்,

வசதியாய் தமிழால் நம்மை இணைக்கும் தமிழ்மணக் குழுவினருக்கும்,

மற்றும் உங்கள் சுற்றம், நட்பு, அனைவருக்கும் 'சித்திரம் பேசுதடி' யில் இருந்து மனங்கணிந்த 2008ம் ஆண்டு புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் !

Saturday, December 15, 2007

ஸ்பன்ஞ்பாப் ஸ்கொயர் பேண்ட்ஸ் - Water color

குட்டிப் பசங்களுக்கு இந்த ஸ்பன்ஞ்பாப் என்றால் கொள்ளைப் பிரியம். எங்க வீட்டில இருக்க குட்டீஸும் சேர்த்துத் தான். பெரியவனுக்காக வரைந்து (22" x 28") அவன் ரூமில் மாட்டியிருக்கும் படம். இப்படத்தை இப்போ உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். நல்லாயிருந்தா ஒரு வார்த்தை பின்னூட்டிட்டுப் போங்க :)

Tuesday, November 13, 2007

சார்லி சாப்ளின் - Water Color

இளங்கலைக் கல்லூரி முடித்து சென்னையில் சில மாதங்கள் இருந்தபோது ஒரு poster கடையில் இந்தப் படத்தைப் பார்த்தேன். பார்த்தவுடன் மனதை கொள்ளை கொண்ட படம். சார்லியின் expression வெகு அற்புதமாக உள்ள படம். அப்படியே வரைய முயற்சி செய்து வரைந்த படம்.

Violin - Water Color

இந்தியாவில் பள்ளிப் பருவத்தில் Dyanora TV விளம்பரத்தில் வந்த படம். படத்தைப் பார்க்கும்போதே சட்டென ஒரு ஈர்ப்பு ஆட்கொண்டது. அந்த உந்துதலில் வரைந்த படம். முக்கியமா இந்தப் படம் பிடிக்கக் காரணம் இந்த lighting effect தான்