Friday, January 29, 2010

யானை - Pen Sketch



"கஜமுகனைக் காணுகையில் என்ன ஒரு கம்பீரம். அகண்ட முறமெனக் காதும், மாமலை எனப் பெருத்த உடலும், கற்தூண்களெனக் கால்களில் வீரு கொண்ட நடையும் ... சிறியவர் முதல் பெரியவர் வரை சட்டென எவரையும் கவர்ந்திடுமே".
நேற்றுக் கிடைத்த சிறு இடைவெளியில் வரைந்த இரண்டாவது படம். 10x8 வரைதாளில் அரை மணிநேரத்தில் பேனா கொண்டு அவுட்லைன் போட்டு, பின்னர் ஷேட்ஸ். அவ்ளோதான் :)

12 comments:

துளசி கோபால் said...

படம் அருமை. ஆனால்..... இது ஆஃப்ரிகன் வகையாச்சே.

நம்ம வகைன்னா முகத்தில் இன்னும் கொஞ்சம் லக்ஷ்ணம் இருக்கும். கண்ணே குறுகுறுன்னு இருப்பதும், முகத்தில் ஒரு புன்முறுவலும் இருப்பதுமா எனக்கு ஒரு தோணல்.

ராமலக்ஷ்மி said...

அரைமணியில்...?

பிரமிக்க வைக்கிறீர்கள்!

கஜமுகன் கம்பீரம்!

வாழ்த்துக்கள் சதங்கா!

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

துளசி அக்கா மிக அவதானமாகக் கவனித்துள்ளார்.
நம் ஆசிய வகையில் அச்சுறுத்தும்
தன்மை குறைவு.
வரைதல் அருமை.

அன்புடன் அருணா said...

ஆஹா .....கலக்கல்ஸ்!

காரணம் ஆயிரம்™ said...

மிக அருமை...

உயிரோட்டமுள்ள ஓவியங்களை வெறும் பால்பாயிண்ட் பேனாவால் (தானே?) வரைவது சுவாரஸியம் தான்..

அன்புடன்,
கார்த்திகேயன்
http://kaaranam1000.blogspot.com

சதங்கா (Sathanga) said...

துளசி கோபால் said...

//படம் அருமை. ஆனால்..... இது ஆஃப்ரிகன் வகையாச்சே.//

அதே ! அதே !!

//நம்ம வகைன்னா முகத்தில் இன்னும் கொஞ்சம் லக்ஷ்ணம் இருக்கும். கண்ணே குறுகுறுன்னு இருப்பதும், முகத்தில் ஒரு புன்முறுவலும் இருப்பதுமா எனக்கு ஒரு தோணல்.//

மிகச் சரி. நம்ம ஊர் யானைகளின் புன்முறுவலைக் கண்முன் நிறுத்திவிட்டீர்கள் உங்கள் வரிகளில்.

சதங்கா (Sathanga) said...

ராமலக்ஷ்மி said...

//அரைமணியில்...?
பிரமிக்க வைக்கிறீர்கள்!//
கஜமுகன் கம்பீரம்!
வாழ்த்துக்கள் சதங்கா!
//

பிரமிக்க வைக்கும் வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி :)

சதங்கா (Sathanga) said...

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

//துளசி அக்கா மிக அவதானமாகக் கவனித்துள்ளார்.
நம் ஆசிய வகையில் அச்சுறுத்தும்
தன்மை குறைவு.
வரைதல் அருமை.//

நீண்ட நாள் வருகைக்குப் பின்னும், கருத்துக்களுக்கும் மிக்க நன்றி.

சதங்கா (Sathanga) said...

அன்புடன் அருணா said...

//ஆஹா .....கலக்கல்ஸ்!//

உங்கள் ரசனைக்கு நன்றிகள் பல.

cheena (சீனா) said...

அருமையான ஆனை
இருப்பினும் ஆப்ரிக்கன் ஆனைதானே

துளசி சொன்னது மனசில நிக்கட்டும்

நல்வாழ்த்துகள் சதங்கா

Priya said...

மிகவும் நன்றாக வந்து இருக்கிறது.வாழ்த்துக்கள்!

சமுத்ரா said...

அருமை