Sunday, November 9, 2008
நந்தி - Water Color
அநேகமா எல்லா சிவன் கோவில்களிலும், சிவனைப் பார்க்கறோமோ இல்லையோ, நந்தியைக் பார்க்காமல் இருக்க முடியாது. சிவனைப் பார்க்கறதுக்கே இவர் கிட்ட பர்மிஷன் வாங்கி தான் பார்க்கணும் என்று நம் முன்னோர்கள் சொல்வார்கள்.
பொதுவாக, யாராவது குறுக்கே வந்தால், 'நந்தி மாதிரி ஏன் வழி மறிக்கிறாய்' என்று நையாண்டியும் செய்வார்கள்.
ஆத்திகமோ, நாத்திகமோ ... பார்த்தவுடன் பிடித்து வரைந்த படங்களுள் இந்த நந்தி தேவனும் ஒன்று, வருடம் 1992. அப்பதான் ப்ரஷ் பிசிறில்லாமல் என் கைக்குப் பழகிய நேரம். அதனால், பென்சில் அவுட்லைன் போடாமல், ப்ரஷ் கொண்டு வரைந்த சிம்பிளான ஓவியம்.
Subscribe to:
Post Comments (Atom)
16 comments:
//சிம்பிளான ஓவியம்//
ஆமாம், எளிமையான ஓவியம் பிசிறின்றி அருமையாக. எளியவருக்கு இறைவனைக் காண வழிவிடும் நந்திக்கான மரியாதையாக.
வாழ்த்துக்கள்.
[படத்துடன் நீங்கள் தந்திருக்கும் விளக்கத்தையும் ரசித்தேன்]
படம் நல்லா இருக்கு.
ஆனா....... ( இது தான் வேலியிலே போற ஓணானை.....ன்னு உங்களை நினைக்க வைக்கிறேனோ?)
சைடு போஸில் முகத்தோட மேடு கொஞ்சம் வளைஞ்சுருக்கணுமோ?
(வாயை வச்சுக்கிட்டுச் சும்மா இருக்க முடியலையேப்பா)
அழகான படம்
ராமலஷ்மி மேடம்,
பாராட்டுக்கு நன்றிகள்.
//ஆமாம், எளிமையான ஓவியம் பிசிறின்றி அருமையாக. எளியவருக்கு இறைவனைக் காண வழிவிடும் நந்திக்கான மரியாதையாக.//
வாவ், Great Thought !!!!
டீச்சர்,
//சைடு போஸில் முகத்தோட மேடு கொஞ்சம் வளைஞ்சுருக்கணுமோ?//
ஒரிஜினல் படம் இப்ப இல்லியே சரிபார்க்க !! ஒரு வேளை மைசூர் நந்தியா இருக்கும்னு நினைக்கிறேன்.
//(வாயை வச்சுக்கிட்டுச் சும்மா இருக்க முடியலையேப்பா)//
:))
வருகைக்கும், வாழ்த்துக்கும் நன்றிங்க திகழ்மிளிர்.
நந்தியாரை வணங்கிக்கறேன்.
பிரதோஷ நாளை நினைவு படுத்திட்டீங்க.
நல்லா இருக்கு. முதல்ல வரைஞ்ச ஓவியமா.
அதுக்குப் பிரமாதம்மவே வந்திருக்கு. நந்தியின் கம்பீரம் தெரிகிறது. வாழ்த்துகள் சதங்கா.
அன்பின் சதங்கா,
1992 லேயே திறமை பளிச்சிட்டிருக்கிறது. பலே பலே !
நல்வாழ்த்துகள்
நந்தி அருமை
நான் பார்த்த நந்தி சாமி படங்களில்,
நீங்க வரைந்த நந்தி சாமி தான்
சிரிச்சிக்கிட்டு இருக்காரு..:)
மெல்லிய புன்னகை..அழகான ஓவியம்!
நல்ல எளிமையான அழகான படம்.
ராமலக்ஷ்மி மேடம் - நந்தி எனக்குத் தெரிந்து ஒரே ஒரு எளியவருக்குத்தான் வழிவிட்டிருக்கிறது. :-)
துளசி டீச்சர்கூட நானும் சேர்ந்துக்கிறேன் - முகத்த பாத்தா கொஞ்சம் பசுமாடு மாதிரி இல்ல? :-)
வல்லிம்மா,
//பிரதோஷ நாளை நினைவு படுத்திட்டீங்க.//
நீங்க சொன்னவுடன் தான் தெரிந்தது ப்ரதோஷம் என்று. இது ஒரு கோ-இன்ஸிடென்ட் என்று தான் சொல்லணும். சில நாட்கள் முன்னாடியே ஸ்கேன் பண்ணினாலும், கரெக்டா ப்ரோதஷம் அன்னிக்கு பதிஞ்சது சந்தோசமா இருக்கு.
//நல்லா இருக்கு. முதல்ல வரைஞ்ச ஓவியமா.//
ஆமா, டைரக்டா ப்ரஷ் கொண்டு வரைந்த முதல் படம். பாராட்டுக்கு நன்றி.
சீனா ஐயா,
//1992 லேயே திறமை பளிச்சிட்டிருக்கிறது. பலே பலே !//
கற்றது கைமண்ணளவே. அது இன்னும் தொடர்கிறது. வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி.
விநோதினி,
//நான் பார்த்த நந்தி சாமி படங்களில்,
நீங்க வரைந்த நந்தி சாமி தான்
சிரிச்சிக்கிட்டு இருக்காரு..:)
மெல்லிய புன்னகை..அழகான ஓவியம்!//
ரொம்ப சந்தோஷம். அழகாகப் பாராட்டியதற்கு அன்பு கலந்த நன்றிகள்.
நாகு,
//நல்ல எளிமையான அழகான படம்.//
நன்றி.
//ராமலக்ஷ்மி மேடம் - நந்தி எனக்குத் தெரிந்து ஒரே ஒரு எளியவருக்குத்தான் வழிவிட்டிருக்கிறது. :-)//
டீடெய்ல்ஸ் ப்ளீஸ் ...
//துளசி டீச்சர்கூட நானும் சேர்ந்துக்கிறேன் - முகத்த பாத்தா கொஞ்சம் பசுமாடு மாதிரி இல்ல? :-)//
வாருமையா ரிச்மண்ட் நகைச்சுவை மன்னரே !!! ஏன், தனியா எதும் சொல்ல மாட்டியளா, யாராவது துணைக்கு சேர்த்துக்குவீங்களா :))
நந்தி நல்லாருக்கு. வரையும் போது யாரும் குறுக்கே வரலையே? ப்ரஷ் கொண்டு ப்ரீஹண்ட் பெயிண்டிங் என்பதால் அருமையாயிருக்கு.
//(வாயை வச்சுக்கிட்டுச் சும்மா இருக்க முடியலையேப்பா//
ஹாஹ்..ஹா...! குற்றம் கண்டுபிடித்தே பேர் வாங்கும் வரிசையில் துள்சியையும் சேத்துக்கலாம்!
என்னாலும் வாயை வச்சுக்கிட்டு சும்மா இருக்க முடியலையே!!!!!!
//நானானி said...
நந்தி நல்லாருக்கு. வரையும் போது யாரும் குறுக்கே வரலையே? ப்ரஷ் கொண்டு ப்ரீஹண்ட் பெயிண்டிங் என்பதால் அருமையாயிருக்கு.//
ம்.ஹிம். யாரும் குறுக்கே வரவில்லை. எல்லாருக்கும் தெரியும் இவன் டென்ஷன் பார்ட்டி என்று, வரஞ்சு முடிச்சாச்சு என்று கூவினால் கூட, கொஞ்ச நேரம் கழிச்சு தான் வந்து பார்ப்பாங்க :)))
//(வாயை வச்சுக்கிட்டுச் சும்மா இருக்க முடியலையேப்பா//
ஹாஹ்..ஹா...! குற்றம் கண்டுபிடித்தே பேர் வாங்கும் வரிசையில் துள்சியையும் சேத்துக்கலாம்!
என்னாலும் வாயை வச்சுக்கிட்டு சும்மா இருக்க முடியலையே!!!!!!
//
ஹாஹா. வழக்கமான உங்கள் நகைப்புத் திறன்.
Post a Comment