தொன்னூறுகளில், அநேக தமிழ் நெஞ்சங்களைக் கவர்ந்த சிறப்பான நடிகையாகத் திகழ்ந்தவர் அமலா. ஏதோ ஒரு அழகு அவரை மற்ற நடிகைகளிடம் இருந்து வேறுபடுத்தியது. ஐரிஷ் ஜீனாகக் கூட இருக்கலாம் :) அவரது கொஞ்சு தமிழும் மேலும் அழகு சேர்த்தது.
ஒரு புத்தகத்தில் பார்த்து இந்தப் படம் அப்போது வரைந்தேன். பென்சில் அவுட்லைன் போட்டு, ஒரே வர்ணம், வேறு வேறு ஷேட்கள், அவ்வளவு தான். கொஞ்சம் சிரத்தை எடுத்து ஸ்மட்ஜ் செய்திருக்கலாம். அப்போது முடியவில்லை. இப்போது தொட்டால் கிழியும் நிலையில் இருக்கிறது பேப்பர். அதனால் விட்டுவிட்டேன்.
படத்தைப் பார்த்து உங்கள் கருத்துக்களை மறவாமல் தெரிவியுங்கள்.
Subscribe to:
Post Comments (Atom)
24 comments:
படம் நேர அமலாவைப் பார்க்கிற மாதிரி இருக்கு.
அவங்களுக்கு ஏதோ ஒரு வசீகரம் உண்டு.
அது அந்தப் பார்வைதான் என்று நினைக்கிறேன்.
நல்லா இருக்கும்மா.
சதங்கா,
அமலா படம் நன்கு வரையப் பட்டிருக்கிறது. அக்கால கட்டத்தில் ஒரே வண்ணத்தில் வரையப் பட்டிருக்கிறது. நன்று நன்று
நல்வாழ்த்துகள்
வல்லிம்மா,
//படம் நேர அமலாவைப் பார்க்கிற மாதிரி இருக்கு.//
ஹையோ, இதைப் படித்தவுடன் மனம் ஜிவ்வென்று காற்றில் பறக்கிறது.
//அது அந்தப் பார்வைதான் என்று நினைக்கிறேன்.
நல்லா இருக்கும்மா.//
ஆமா அதே தான். பாராட்டுக்கு மிக்க நன்றி.
சீனா ஐயா,
//அமலா படம் நன்கு வரையப் பட்டிருக்கிறது/
பாராட்டுக்கு நன்றிகள் பல.
பேசும் கண்களைப் பேசும் சித்திரம்.
அமலா என்றால் அழகு
சதங்கா என்றால் சளைக்காத
முயற்சி முயற்சி முயற்சி!
அழகான படம் சதங்கா..வாழ்த்துகள்
rose is a rose is a rose
ஆனாலும் அழகாகவே வரைந்திருக்கிறீர்கள் சதங்கா.
நன்றிகள்.
பழைய அமலா வெறியன் :)
அமலா படம் வரைஞ்சேனிங்களே. எங்கேங்க?
கருத்து தெரிவிக்கறதெல்லாம் இருக்கட்டும். அது எப்படி அகில அகிலாண்ட உலக அமலா ரசிகர் மன்றத் தலைவனான என்னைக் கேட்காம நீங்க எங்காளைப் பத்திப் பதிவு போடப் போச்சு? நாகார்ஜூனே என்னைக் கேக்காம எதுவும் செய்ய மாட்டாரு. தெரியுமா? :-)
சரி சரி மொத தடவயா இருக்கறதால பொழச்சுப் போங்க. இனிமே சூதானமா இருந்துக்கங்க.
நந்து f/o நிலாவே மன்னிப்பு கேட்டுக்கிட்டு வெறியனா இருந்து “பழைய” வெறியனா மாறிட்டாரு. தெரிஞ்சுக்கோங்க.
பி.கு:- (மை.ம.கா.ரா. நாகேஷ் ஸ்டைலில்) பரவால்லாம, சுமாரா, நல்லாவே இருக்கு!
ராமலஷ்மி மேடம்,
//பேசும் கண்களைப் பேசும் சித்திரம்.
அமலா என்றால் அழகு
சதங்கா என்றால் சளைக்காத
முயற்சி முயற்சி முயற்சி!//
ஆஹா, இன்னும் மேலே மேலே பறக்கிறது மனம். (கீழே விழுந்துடாம இருக்கணும் என்ற பயத்துடன்)
பாச மலர்,
//அழகான படம் சதங்கா..வாழ்த்துகள்//
மிக்க நன்றிங்க.
//அமலா படம் வரைஞ்சேனிங்களே. எங்கேங்க?//
உரிமையோடு கேட்பதற்கு ஒரு பெயரோடு வந்திருக்கலாமே ?!! :) பரவாயில்லை. உங்க கணினியை ரீ-பூட் செய்து பாருங்கள், ஒரு வேளை படம் தெரியலாம் ;)
நிலாவின் அப்பா நந்துவோட வருகைக்கு நன்றி. பாராட்டுக்கும் நன்றிகள்.
//பழைய அமலா வெறியன் :)//
ஹா.ஹா. க.பி. இதை சொல்றதுக்கும் தைரியம் வேணும் :)))
சுந்தர்,
//கருத்து தெரிவிக்கறதெல்லாம் இருக்கட்டும். அது எப்படி அகில அகிலாண்ட உலக அமலா ரசிகர் மன்றத் தலைவனான என்னைக் கேட்காம நீங்க எங்காளைப் பத்திப் பதிவு போடப் போச்சு? நாகார்ஜூனே என்னைக் கேக்காம எதுவும் செய்ய மாட்டாரு. தெரியுமா? :-)//
அடடா தெரியாம போச்சே ... மன்னிக்கணும் :))
//நந்து f/o நிலாவே மன்னிப்பு கேட்டுக்கிட்டு வெறியனா இருந்து “பழைய” வெறியனா மாறிட்டாரு. தெரிஞ்சுக்கோங்க.//
ஆமா. நான் கூட தங்கமணிக்கு பயந்து தான் அப்படி போட்டிருப்பாருனு நெனச்சேன். இப்ப தான் புரியுது :)))
//பி.கு:- (மை.ம.கா.ரா. நாகேஷ் ஸ்டைலில்) பரவால்லாம, சுமாரா, நல்லாவே இருக்கு!//
ரொம்ப சந்தோசம். நன்றிகள் பல.
படம் பரவாயில்லை. முன் நெற்றி....
நானும் அமலா ரசிகன்...
மெல்ல திறந்தது கதவு அமலா எக்ஸலண்ட்...
எனக்கு 'சத்யா' அமலாதான் பிடிக்கும்.
அதுக்கு முன்னாடியும் புடிக்கல, பின்னாடியும் பிடிக்கல. ;)
உங்க படம் நல்லாருக்கு. ஆனா, 'அமலா' மாதிரி 100% தெரியல.
தமிழ்பறவை,
//படம் பரவாயில்லை. முன் நெற்றி....//
கருத்துக்கு நன்றிங்க.
//நானும் அமலா ரசிகன்...//
அட்றா சக்க ... சுந்தர் கோச்சுக்கப் போறாரு. அவர் கிட்ட ஒரு வார்த்தை சொல்லிடுங்க :))
//மெல்ல திறந்தது கதவு அமலா எக்ஸலண்ட்...//
மறக்க முடியாதில்ல !!!
சர்வேசன்,
//எனக்கு 'சத்யா' அமலாதான் பிடிக்கும்.
அதுக்கு முன்னாடியும் புடிக்கல, பின்னாடியும் பிடிக்கல. ;)//
ஹிம். வித்தியாசமான ரசிகர் தான் நீங்கள் :) !
//உங்க படம் நல்லாருக்கு. ஆனா, 'அமலா' மாதிரி 100% தெரியல.//
ஒரு 99% வச்சிக்கலாமா ? ;) மனம் திறந்த கருத்துக்கு நன்றிங்க.
//எனக்கு 'சத்யா' அமலாதான் பிடிக்கும். //
//நானும் அமலா ரசிகன்...
மெல்ல திறந்தது கதவு அமலா எக்ஸலண்ட்...//
அடப்பாவிகளா! மனுசனை நிம்மதியா இருக்க விடமாட்டாய்ங்க போலருக்கே! :((
அய்யா சாமிகளா - கொஞ்சம் அடக்கி வாசிங்கப்பா. எனக்கு காதுல புகையா வருது!
சத்யா அமலாவை விட எனக்கு மைதிலி என்னை காதலி காலத்து அறிமுக அமலாவை அப்படி பிடிக்கும்.
சும்மா குண்டு குண்டுன்னு கொழுக் மொழுக்ன்னு அல்வால செஞ்ச சிலை மாதிரி.....
ம்ஹூம்....
(வற்றாத இருப்பு வைத்திருக்கும் சுந்தர்ஜி மன்னிப்பாராக)
யோவ் நந்து
//சத்யா அமலாவை விட எனக்கு மைதிலி என்னை காதலி காலத்து அறிமுக அமலாவை அப்படி பிடிக்கும்.
//
டி.ஆர். அமலாகூட நடிச்சதையே என் இதயம் தாங்கிருச்சு. அதுக்கு இது எவ்வளவோ பரவால்லை! (வேற என்னத்தை பண்றது! இப்படி எதையாவது சொல்லி மனச தேத்திக்கவேண்டியதுதான்!)
நல்லாருங்க!
என் மகள் ஒரு அமலா ரசிகை! அதுவும் அக்னி நட்சத்திரம் அமலா ரொம்பப் பிடிக்கும். பரவாயில்லை அமலா மாதிரியே இருக்கு.
//நானானி said...
என் மகள் ஒரு அமலா ரசிகை! அதுவும் அக்னி நட்சத்திரம் அமலா ரொம்பப் பிடிக்கும். //
பசங்களுக்கு தான் அமலா பிடிக்கும் என நினைத்தேன். பாருங்க நந்துவும், சுந்தரும் என்னமா உரிமை கொண்டாடறாங்க என்று :)))
Adpudhama irukku.Amalavai neril paarpathu polave irukku.
Amala Rasigan
Post a Comment