தொன்னூற்றி இரண்டுகளில் சென்னையில் வசித்த போது இந்தப் படத்தின் நகல் கிடைத்தது. அப்போது பொறுமையாக வரைய முடியவில்லை.
நெற்றி திலகத்தில் ஆரம்பித்து, முகம், தலை, வலது தோள், கைகள், இசைக் கருவி, இடது கைகள், கால், தாமரை, வலது கால், மீண்டும் தாமரை என்று வந்து அழகாக ஒரே கோட்டில் முடியும் படம். இப்படத்தை முதலில் வரைந்த ஓவியரின் திறமையை எண்ணினால் இன்றும் வியப்பே மிஞ்சுகிறது !!!
இப்போது கிடைத்த சில மணித்துளிகளில் அந்தப் படத்தைப் பார்த்து வரைந்தேன். வழக்கம் போல, படத்தைப் பற்றின உங்கள் கருத்துக்களை மறவாமல் தெரிவியுங்கள்.
Subscribe to:
Post Comments (Atom)
31 comments:
நல்லா இருக்கு. ஆனால் வாணியின் வலதுபக்கக் கன்னம் இல்லாததுக் கொஞ்சம் கண்ணில் 'சட்'னு படுதே.
Excellent job Sathanga!!! Keep up the good work.
மிக்க சிரத்தை கொண்டு செய்திருக்கும் இந்த சிங்கிள் லைன் வரைப்படத்தை பார்க்கையில்,உங்களின் பொறுமை வந்து,என் கண்முன்னே பொறாமை கொள்ளச்செய்கிறது :)
நல்லா இருக்கு.. துளசி சொன்னமாதிரி முதலில் கண்ணில் பட்டுறுது.. பின்னால் லைட்டிங்க் படாத கன்னம்ன்னு நினைச்சுக்கிடலாம்..
பாராட்டுக்கள்
http://sivasinnapodi1955.blogspot.com/
அற்புதமாக வந்திருக்கிறது சதங்கா, பாராட்டுக்கள். வலது பக்க கன்னம் காணாதது சிங்கிள் லைன் ட்ராயிங் எனும் கண்ணோட்டத்தில் பார்க்கையில் காணாது போய்விடுவதாகவே தோன்றுகிறது.
நகலைப் பார்த்து வரைந்த நீங்கள் இதே போல அசலாகவும் வேறு சித்திரங்கள் முயற்சி செய்து பார்க்கலாமே!
துளசி டீச்சர்,
பாராட்டுக்கு மிக்க நன்றி.
//ஆனால் வாணியின் வலதுபக்கக் கன்னம் இல்லாததுக் கொஞ்சம் கண்ணில் 'சட்'னு படுதே.//
மாத்தமுடியுற அளவிற்கு திறமை இருக்கணுமே என்று யோசிக்கும்போது, "அடுத்த படத்தில சரி செஞ்சுக்கறேனு" சொல்லி இப்பத் தப்பிச்சுக்கறேன் :))
ஸ்ரீலதா,
//Excellent job Sathanga!!! Keep up the good work.//
மிக்க நன்றி. எல்லாம் உங்களின் பாராட்டுக்களின் பலன் தான்.
ஆயில்யன்,
//உங்களின் பொறுமை வந்து,என் கண்முன்னே பொறாமை கொள்ளச்செய்கிறது :)//
பார்த்து வரைந்ததைத் தவிர ஒன்றும் செய்துவிடவில்லைங்க. நானும், இதை முதன்முதலில் வரைந்த ஓவியரை எண்ணி பொறாமை கொள்கின்றேன்னு சொல்லிக்கறேன் :))
முத்துலெட்சுமி-கயல்விழி,
//லைட்டிங்க் படாத கன்னம்ன்னு நினைச்சுக்கிடலாம்..//
ஹை, துளசி டீச்சரின் கேள்விக்கு பதில் கிடைச்சிடுச்சு. இதுக்கும், பாராட்டுக்கும் மிக்க நன்றிங்க.
சிவா,
//பாராட்டுக்கள்//
வருகைக்கும், பாராட்டுக்கும் மிக்க நன்றி.
ராமலஷ்மி மேடம்,
//சிங்கிள் லைன் ட்ராயிங் எனும் கண்ணோட்டத்தில் பார்க்கையில் காணாது போய்விடுவதாகவே தோன்றுகிறது.//
ஆமா, அதுவும் போக கொஞ்சம் வித்தியாசமாகவும் இருப்பதாகப் படுகிறது.
//
நகலைப் பார்த்து வரைந்த நீங்கள் இதே போல அசலாகவும் வேறு சித்திரங்கள் முயற்சி செய்து பார்க்கலாமே!//
ஆஹா, கொடுத்திட்டாங்கய்யா பொறுப்பு, கொடுத்திட்டாங்க !!! எனக்கும் ஆசை தான், முயற்சித்தேன் முடியவில்லை. மீண்டும் முயற்சிக்க வைக்கும் உங்கள் வரிகளுக்கு, கண்டிப்பா ஒரு படம் வரைந்து பதிகிறேன்.
நகலானா கூட கஷ்டமானது. நல்ல முயற்சி! இன்னும் நல்லா வர வாய்ப்பிருக்கு.
அப்புறமா... ஹிஹி இங்கே பாருங்க. உங்க ப்ளாகை பாக்கும் முன்னாடி ஆரம்பிச்ச ப்ளாக்!
http://chitirampesuthati.blogspot.com/
இன்னிக்குதான் வல்லி அக்கா பதிவுல உங்க மடலை பாத்துட்டு என்னடா இதுன்னு யோசிச்சேன்.
சதங்கா
கோட்டோவியம் அருமை - ஆனால் ஏதோ வெறுமை தெரிகிறது. வலது கன்னம். பொறுமை வேண்டும் வரைவதற்கு
நல்வாழ்த்துகள்
ரொம்ப நல்லாஅ வந்திருக்கு சதங்கா.
வரைவது கஷ்டம், அதுவும் கையெடுக்காமல் ஒரே லைன் டிராயிங் என்பதால், நீங்கள் மாற்றம் செய்வது எளிதல்ல.
இன்னோரு சரஸ்வதி நீங்களே போடுங்கள். வாடியிருக்கும் கன்னப்பக்கம் செழிக்கட்டும்:)
ஒரு கோட்டிலமர் வாணி
உருவாக்குபவள் நமை பேணி.
வருவாள் தினமுமென் மதியில்
தருவாள் நிலவன்ன அருளே
சுப்பு ரத்தினம்.
தஞ்சை.
http://movieraghas.blogspot.com
// வாணியின் வலதுபக்கக் கன்னம் இல்லாததுக் கொஞ்சம் கண்ணில் 'சட்'னு படுதே.//
"தங்கத்திலே ஒரு குறையிருந்தாலும் அது தரத்தினில் குறைந்திடுமோ ? "
கண்ணதாசனின் கவிதை கண்முன் வருகிறது.
கன்னம் இல்லையென இல்லை .. அது பார்ப்போர்
கற்பனை வளத்திற்கோர் எல்லை.
இது போன்ற சித்திரங்கள் suggestive art forms
வகையில் அமையும்.
மீனாட்சி பாட்டி.
தஞ்சை.
திவா,
//நகலானா கூட கஷ்டமானது. நல்ல முயற்சி! இன்னும் நல்லா வர வாய்ப்பிருக்கு.//
வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி.
//அப்புறமா... ஹிஹி இங்கே பாருங்க. உங்க ப்ளாகை பாக்கும் முன்னாடி ஆரம்பிச்ச ப்ளாக்!
http://chitirampesuthati.blogspot.com/
இன்னிக்குதான் வல்லி அக்கா பதிவுல உங்க மடலை பாத்துட்டு என்னடா இதுன்னு யோசிச்சேன்.//
கொஞ்சம் ஸ்பெல்லிங் டிஃபரன்ட்டா இருக்கு :), வந்து பார்க்கிறேன்.
சீனா ஐயா,
//கோட்டோவியம் அருமை - ஆனால் ஏதோ வெறுமை தெரிகிறது. வலது கன்னம். பொறுமை வேண்டும் வரைவதற்கு//
பாராட்டுக்கும், கருத்துக்கு மிக்க நன்றி. ஒரு வித்தியாச முயற்சி, அடுத்த படங்களில் சரி செய்ய பார்க்கிறேன்.
வாழ்த்துகள் சதங்கா!
ஓவியம் அழகு. உங்கள் , அசலுக்குக் காத்திருக்கிறோம் :D :P.
வாழ்த்துகள்!
சுப்பு ரத்தினம் ஐயா,
//ஒரு கோட்டிலமர் வாணி
உருவாக்குபவள் நமை பேணி.
வருவாள் தினமுமென் மதியில்
தருவாள் நிலவன்ன அருளே //
வருகைக்கும், அருமையான இனிமையான பாடலுக்கும் மிக்க நன்றி.
மீனாட்சி பாட்டி,
//கன்னம் இல்லையென இல்லை .. அது பார்ப்போர்
கற்பனை வளத்திற்கோர் எல்லை.
//
அழகுக் கவிதை வரிகளில், அற்புதமான பாராட்டுக்கு மிக்க நன்றி.
புதுவண்டு,
//ஓவியம் அழகு. உங்கள் , அசலுக்குக் காத்திருக்கிறோம் :D :P.//
வாழ்த்துக்களுக்கும், எதிர் பார்த்தலுக்கும் மிக்க நன்றி. படம் போட்டு, செய்தி அனுப்புகிறேன் :)))
சிம்ப்ளி சூப்பர்ப். ரொம்பவே பிடிச்சிருக்கு. சிரத்தைக்கும் சித்திரத்துக்கும் வாழ்த்துகள் சதங்கா.
வரைந்து பார்க்கவேண்டுமென்ற ஆர்வம் கூடுகிறது சதங்கா.
கணினியில் இவ்வளவு துல்லியமாக வரைய முடிகிறதா என்ன?
மதுமிதா,
வருகைக்கும், ரசித்துப் பாராட்டியதற்கும் மிக்க நன்றி.
//கணினியில் இவ்வளவு துல்லியமாக வரைய முடிகிறதா என்ன?//
கொஞ்ச நேரத்துக்கு என்னை ஃப்ரீஸ் ஆக்கிட்டீங்க :))) நோட்டில் வரைந்து, ஸ்கேன் செய்து போட்டிருக்கிறேன். ஸ்பைரல் கூட இருக்கு பாருங்க.
just superb!!!
anbudan aruNaa
ஒரு கோட்டில் கலைமகளையே அடக்கிய உங்கள் திறமை, பொறுமை நகலானாலும் வியக்கவைக்கிறது.
அசல்...கொஞ்சம் சிரமம்தான். முயற்சிக்கலாமே!!
//அன்புடன் அருணா said...
just superb!!!//
பாராட்டுக்கு நன்றி அருணா.
//நானானி said...
ஒரு கோட்டில் கலைமகளையே அடக்கிய உங்கள் திறமை, பொறுமை நகலானாலும் வியக்கவைக்கிறது.
அசல்...கொஞ்சம் சிரமம்தான். முயற்சிக்கலாமே!!//
பாராட்டுக்கு நன்றி நானானிம்மா.
அசல்... முயற்சிக்கிறேன், நேரம் தான் கூடி வரணும் :))) அப்படி செய்கையில் அவசியம் தெரிவிக்கிறேன்.
ஒரு புள்ளியில் துவங்கி மற்றொரு புள்ளியில் முடிந்திருக்கிறது.......
பாராட்டுகள் சொல்லி முற்று புள்ளியிட விரும்ப வில்லை....
என் சந்தோஷத்திற்கு
Post a Comment