Saturday, April 5, 2008
கார்மேகக் கண்ணா - பேனா எண்ணம், கணினி வண்ணம்
(மறவாமல் படத்தைப் பெரிதுபடுத்திப் பாருங்கள்)
பதினோரு ஆண்டுகள் முன்னர் (1997ல்) பேனா கொண்டு வரைந்த படம். ஓவியர் ம.செ. அவர்கள் மிக அற்புதமாக கிருஷ்ணரை வரைந்திருந்தார். படத்தில் ஒரு வசீகரம் இருப்பதை உணர்ந்து, நாமும் வரையலாம் என்று அதைப் பார்த்து வரைந்தேன்.
வண்ணம் தீட்டாத அந்தப் படத்தை, தற்போது கணினி உதவியுடன் சுமாராக வண்ணம் தீட்டியிருக்கிறேன்.
படம் எப்படி இருக்கிறதென்று வழக்கம்போல உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
Subscribe to:
Post Comments (Atom)
22 comments:
மிக அழகாக வரைந்திருக்கிறீர்கள். அருமை! அருமை!! பாராட்டுக்கள்!!! வாழ்த்துக்கள்!!! எல்லாம் உங்களுக்கு. சிறந்த ஓவியர்தான் நீங்கள்.
அன்புடன்,
அத்திவெட்டி ஜோதிபாரதி.
ஜோதிபாரதி,
//மிக அழகாக வரைந்திருக்கிறீர்கள். அருமை! அருமை!! பாராட்டுக்கள்!!! வாழ்த்துக்கள்!!! எல்லாம் உங்களுக்கு. சிறந்த ஓவியர்தான் நீங்கள்.//
வருகைக்கும், வாழ்த்துக்கும் மிக்க நன்றி. நீங்க ரொம்பப் புகழ்கிறீர்கள். அந்த அளவிற்கு வர இன்னும் நிறைய உழைக்க வேண்டும்.
நன்றாக வரைந்திருக்கிறீர்கள். இது ஒரு கலை, எல்லோராலும் செய்து விட முடியாது. முடிந்தால் உங்களுக்கு தெரிந்த 4 இளையவர்களுக்காவது சொல்லித்தாருங்கள். மனமார்ந்த வாழ்த்துக்கள். கலை பரப்பப்படவும் அரங்கேற்றப் பட வேண்டும் என்பார்கள்.
நல்லா இருக்கு.. சுமாரா வண்ணம் தீட்டவில்லை, நல்லாவே செஞ்சிருக்கீங்க!
காரூரன்,
//மனமார்ந்த வாழ்த்துக்கள். //
வருகைக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றிகள் பல.
//கலை பரப்பப்படவும் அரங்கேற்றப் பட வேண்டும் என்பார்கள்.//
இது போல் ஒரு எண்ணம் இருந்து கொண்டுதானிருக்கிறது. விரைவில் இணையித்திலேயே பால பாடத்தை ஆரம்பிக்கலாம் என இருக்கிறேன். அதற்கு என்னை தயார் படுத்திக் கொள்ள கால அவகாசம் தேவைப்படுகிறது.
சேதுக்கரசி,
// நல்லா இருக்கு.. சுமாரா வண்ணம் தீட்டவில்லை, நல்லாவே செஞ்சிருக்கீங்க! //
பாராட்டுக்கு மிக்க நன்றி. அரசியார் சொன்னா சரியாத் தான் இருக்கும் :)
என்னோட + உண்டு!
வாங்க ஜீவா,
உங்க +க்கு =:)
அட்டகாசம்..
இது உங்களுக்கு சுமாரா...
ரொம்பவே தன்னடக்கம்...
கோகுலன்,
உங்களின் ஊக்கமான பின்னூட்டங்கள் திகைக்க வைக்கின்றன.
உங்கள் அட்டகாசத்திற்கு நன்றிகள் பல.
கொண்டல் வண்ணனின் திருமேனி திகழ் ஒளியை மனத்தில் உள்வாங்கி அழகாக வரைந்திருக்கிறீர்கள்..
ம.செ.யின் ஓவியங்களில் அவரின் தந்தையாரின் பாதிப்பு மிகுந்து தெரியும். நீங்கள் கொண்டைய ராஜூவின் கடவுள் ஓவியங்களைப் பார்த்திருக்கிறீர்கள்..சிவகாசி காலண்டர்கள்--கொ.ராஜூவின் சித்திரங்கள்--தூக்கலான வண்ணக் கலக்கல்கள் என்று இருந்த காலம் ஒன்று உண்டு.
ஓவியக் கலை உள்ளார்ந்த உணர்வுகளைத் தூண்டும் சக்தி படைத்தது..அந்தக் கலையில் தேறித் திகழ வாழ்த்துக்கள்..பாராட்டுகள்..
ஜீவி,
தாமதமான பதிலுக்கு மன்னிக்கவும்.
//கொண்டல் வண்ணனின் திருமேனி திகழ் ஒளியை மனத்தில் உள்வாங்கி அழகாக வரைந்திருக்கிறீர்கள்..//
எத்தனை முறை படித்தாலும் சந்தோசத்தை தரும் இந்த வரிகள். மிக்க நன்றி.
கொ.ராஜுவுடைய படங்களைப்
பார்த்திருக்கிறேன், ஆனால் பல ஆண்டுகள் ஆனதால் நினைவில் இருந்து கொஞ்சம் விலகியிருக்கிறது. எங்க ஊரில், எதிர்த்த வீட்டுக்காரர்கள், ப்ரிண்டிங்க் தொழிலில் இருந்தார்கள். அவர்களுக்கு வாழ்த்து அட்டைகள் வரைந்து தருவதாக அவர்கள் கூறுவார்கள். கொ. ராஜுவை நினைவு படுத்தியமைக்கு நன்றி ஜீவி.
//ஓவியக் கலை உள்ளார்ந்த உணர்வுகளைத் தூண்டும் சக்தி படைத்தது..அந்தக் கலையில் தேறித் திகழ வாழ்த்துக்கள்..பாராட்டுகள்..//
ரொம்ப சந்தோசம். உங்களின் ஊக்கமும் ஒரு சக்தியே.
கண்ணன் அழகா நிக்கிறாரே.
ஆனாக் குழலை மடில சொருகி இருக்காரோ.
கண்ணழகுக் கண்ணனைக் காட்டியதற்கு நன்றி சதங்கா.
இனிமை,அருமை.
வல்லிம்மா,
//ஆனாக் குழலை மடில சொருகி இருக்காரோ.//
ஆமா. எப்படி கரெக்டா கண்டுபிடிச்சீங்க ? :))
வாழ்த்துக்களுக்கு நன்றி.
பேனா எண்ணம் ஆனால் கணினியின் வண்ணமா? கார்மேகக் கண்ணனை அப்படியே கண் முன் கொண்டு நிறுத்தியிருக்கிறீர்கள் சதங்கா.
புல்லாங்குழலினை மடியில் சொருகியிருந்தாலும் மெலிதாகக் கசியும் அந்தக் குழலிசை மாயக் கண்ணனின் விளையாட்டோ, வல்லிம்மா?
சித்திரங்களைப் பேச வைக்க முடிகிற உங்கள் கற்பனை விரிந்தால் கட்டாயம் புகைப் படங்களையும் ஓவியமாக்க முடியும். ஏன் அந்த முயற்சியில் ஈடுபடவில்லை சதங்கா?
சித்திரம், நளபாகம், கட்டுரை, கதை, அழகிய உவமானங்களுடன் கவிதை எல்லாம் வருகிற உங்களுக்கு கவிதை படைக்க முடியாதா என்ன காமிராவால்?
ராமலஷ்மி மேடம்,
//கார்மேகக் கண்ணனை அப்படியே கண் முன் கொண்டு நிறுத்தியிருக்கிறீர்கள் சதங்கா.
//
வழக்கம் போல் ஊக்கமான பின்னூட்டத்திற்கு நன்றிகள் பல.
//ஏன் அந்த முயற்சியில் ஈடுபடவில்லை சதங்கா?//
ஏன் இல்லை. அதிலும் இறங்கியிருக்கிறேன். கல்லூரி காலங்களில் எனது நண்பர்கள் சிலர் காமிரா பைத்தியமாய் இருக்க, நானும் அவர்களோடு சேர்ந்து சுற்றியது உண்டு, படங்கள் எடுத்ததும் உண்டு. பெருமையா சொல்லிக் கொள்ளும் விசயம் அதில் ஒருவர் P.C.Sriram உதவியாளராக இருந்து சமீபத்தில் ஒரு படத்தில் ஒளிப்பதிவாளராகவும் ஆகியிருக்கிறார். அவர்கள் படும் சிரத்தை, ஒரு ஸ்டில்லுக்கு ப்ல ஃப்லிம் ரோல்கள், மற்றும் எக்ஸ்பென்சிவ் உப பொருட்கள், அதெல்லாம் பார்த்து கொஞ்சம் ஜகா வாங்கிக் கொண்டேன்.
//சித்திரம், நளபாகம், கட்டுரை, கதை, அழகிய உவமானங்களுடன் கவிதை எல்லாம் வருகிற உங்களுக்கு கவிதை படைக்க முடியாதா என்ன காமிராவால்?//
டெக்னிக்கல் சமாச்சாரம் எல்லாம் தெரியாது, ஆனாலும் இன்ட்ரெஸ்ட் இல்லாமலில்லை. அவ்வப்போது படங்களும் எடுக்கிறேன்.
ஆஹா தூங்கிக்கிட்டு இருக்க சிங்கத்த எழுப்பிட்டீங்களே :))) இதுக்கு ஒரு ப்லாக் ஆரம்பிச்சிருவோம்.
//ஆஹா தூங்கிக்கிட்டு இருக்க சிங்கத்த எழுப்பிட்டீங்களே :)))//
ஆக,ஒரு சிங்கம் சிலிர்த்து எழுகிறது!
//இதுக்கு ஒரு ப்லாக் ஆரம்பிச்சிருவோம்//
பலே பலே, இத இதத்தான் நான் எதிர்பார்த்தேன். வாழ்த்துக்கள்:)!
//ஆக,ஒரு சிங்கம் சிலிர்த்து எழுகிறது!//
இப்படி உசுப்பேத்தி உசுப்பேத்தியே ஒடம்பு ரணகளமா ஆயிடுச்சுப்பா :))) (கைப்புள்ள வடிவேலு மாதிரி வாசிங்க)
படம் அழகாக இருக்கிறது.
பாராட்டுக்கள் !
ஆஹா அந்தக் கண்ணனே வந்து சொன்னது போல் இருக்கிறது.
//படம் அழகாக இருக்கிறது.
பாராட்டுக்கள் !//
பாராட்டுக்களுக்கு நன்றிங்க.
ரொம்ப நல்லா இருக்குங்க...அத்தனை படங்களும் அருமை.
அன்புடன் அருணா
Post a Comment