Monday, March 10, 2008

திரு. சாம் வால்டன் - Pen and Ink



இந்த U.S. மண்ண மிதிச்சு, கடந்த மூன்று வருடங்களில், சிறு பெறு நகரங்கள் சிலவற்றில் வசித்து இப்ப ஒரு சிற்றூரில் வசித்து வருகிறேன். அனைத்து இடங்களிலும் முதலில் shopping செய்யணும் என்றால், அங்கிருக்கும் நண்பர்களிடம், "இங்க பக்கத்துல எங்க வால்-மார்ட் இருக்கு ?" என்று தான் ஆரம்பிக்கும்.

வால்-மார்ட்டின் தந்தை திரு. சாம் வால்டன் அவர்களின் படம் ஒரு புக்மார்க்கில் கிடைத்தது. மிக அற்புதமாக அந்த ஓவியர் வரைந்திருந்தார். நாமும் இதனை வரைய வேண்டும் என்று பார்த்த மாத்திரத்திலேயே முடிவு செய்தேன்.

இந்த மாதிரி கோட்டு ஓவியங்கள் பார்க்கறதுக்கு எளிதாய் இருந்தாலும், வரையும் போது விரல் ஒடியும் அளவுக்கு கடினமான ஒன்று. தேவையானது "பொறுமையோ பொறுமை" மட்டுமே !!! கொஞ்சம் அப்படி, இப்படி விலகினாலும் படம் அதோ கதி தான். மற்ற வர்ண ஓவியங்களில் தவறுகளைச் சரி செய்ய ஏகப்பட்ட வாய்ப்புக்கள் அதிகம், ஆனால் கோட்டோவியங்களில் அப்படி இல்லை. இந்த‌ மாதிரி ப‌ட‌ங்க‌ளை எடுத்து வ‌ரைவ‌து ஒரு Challenging-ஆ, அதே நேரம் Intersting-ஆகவும் இருக்கும்.

இந்தப் பதிவையும் பாருங்க :

http://sithiram-pesuthadi.blogspot.com/2008/03/donald-daisy-ducks-water-color-work.html

7 comments:

KABEER ANBAN said...

அற்புதமா இருக்கு வால்டன் - portrait.
பட்டாம்பூச்சி தொடருக்கு ஜெயராஜ் குமுதத்தில் வரைந்த 'சில்லோட்' வகையை சேர்ந்தது. ஒளி-நிழல் விளையாட்டை மிக பிரமாதமாக வெளிப்படுத்தும் டெக்னிக் இது.
தொடருங்கள்.

மூன்று வாரமா இணைய இணைப்பு இல்லாததால் எந்த வலைப்பக்கத்தையும் பார்க்கவோ படிக்கவோ இல்லை. இனி அடிக்கடி வருவேன் :))

சதங்கா (Sathanga) said...

கபீரன்பன்,

வருகைக்கு நன்றி. உங்களைப் போல் ஓவியர்கள் பாராட்டுவது ரொம்ப சந்தோசமாக இருக்கிறது.

ஜெ.... வின் படங்கள் பார்த்து வியக்காத நாளில்லை. ஒரு attraction இருக்கும் அவர் என்ன வரைந்தாலும். குறிப்பா அவர் போடுகிற shades அற்புதமா இருக்கும். நீங்கள் குறிப்பிட்ட 'பட்டாம்பூச்சி' தொடர் பார்த்ததில்லை.

//இனி அடிக்கடி வருவேன் :))//

அடிக்கடி வாங்க.

ராமலக்ஷ்மி said...

தங்கள் பொறுமைக்கு தாங்களே அளித்த பரிசு இந்த அருமையான ஓவியத்தைப் படைத்த ஆத்ம திருப்தி. சரிதானா சதங்கா?

ராமலக்ஷ்மி said...

'ஜெ'-யின் ரசிகை. எனது பள்ளி, கல்லூரிக் காலங்களில் வார இதழ்களில் தொடர்களுக்கு அவர் வரைந்த படங்கள் இன்னும் கண்ணுள்ளே..!

சதங்கா (Sathanga) said...

ராம‌ல‌ஷ்மி மேட‌ம்,

// தங்கள் பொறுமைக்கு தாங்களே அளித்த பரிசு இந்த அருமையான ஓவியத்தைப் படைத்த ஆத்ம திருப்தி. சரிதானா சதங்கா? //

ஆம். ஒவ்வொரு ப‌ட‌ம் நிறைவுறும் போது ஒரு திருப்தி கிடைக்கும் பாருங்க, அது உண்மையிலேயே சூப்ப‌ர். அதை ச‌ரியாக‌ க‌ண்டு சொல்லி அச‌த்திட்டிங்க‌.

//'ஜெ'-யின் ரசிகை. எனது பள்ளி, கல்லூரிக் காலங்களில் வார இதழ்களில் தொடர்களுக்கு அவர் வரைந்த படங்கள் இன்னும் கண்ணுள்ளே..! //

ஆம் நானும் அவ‌ருடைய‌ கோடிக்க‌ண‌க்கான‌ ர‌சிக‌ர்க‌ளுள் ஒருவ‌ன். நிறைய‌ வ‌ரைந்தும் இருக்கிறேன். கால‌ ஓட்ட‌த்தில், ப‌ல‌ ஊர் மாற்றத்தில் எதுவும் கைவ‌ச‌ம் இல்லை. ஊருக்குப் போகும்போது ப‌ழைய‌ புத்த‌க‌ங்க‌ளை ஒரு அலசு அலசணும் :))

ந‌ம்ம‌ வாத்தியார் சுப்பையா அவ‌ர்க‌ள் 'ஜெ' அவ‌ர்க‌ளின் நெருங்கிய‌ ந‌ண்ப‌ர் என‌ ப‌திவெல்லாம் போட்டிருந்தார், 'ஜெ'யின் கைப‌ட‌ வரைந்த‌ ப‌ட‌ங்க‌ளுட‌ன். வெகு அற்புத‌ம் அது. பார்த்திருப்பீர்க‌ள் என‌ நினைக்கிறேன்.

வல்லிசிம்ஹன் said...

இவர்தான் வால் மார்ட் காரரா. அடடா.

நேர பார்க்கிற மாதிரி இருக்கும்மா. வாழ்த்துகள் சதங்கா.

சதங்கா (Sathanga) said...

வல்லிம்மா,

//இவர்தான் வால் மார்ட் காரரா. அடடா.

நேர பார்க்கிற மாதிரி இருக்கும்மா. வாழ்த்துகள் சதங்கா.//

சாட்சாத் அவரே. உங்கள் வாழ்த்துக்கள் கண்டு மிக்க மகிழ்ச்சி.