Sunday, March 2, 2008
கலைவாணி - Pen and Ink
1953ம் ஆண்டு ஆனந்த விகடன் "தீபாவளி மலர்" புத்தகத்தில் வெளிவந்த படம். பதின்மூன்று ஆண்டுகள் முன்னர் இப்புத்தகத்தை பார்க்க நேர்ந்தது. இந்தப் படம் பார்த்தவுடன், வரைய வேண்டும் என்று மனம் ஆசை கொண்டது.
இரண்டு அல்லது மூன்று மணி நேரம் ஆகி இருக்கும் படம் வரைந்து முடிப்பதற்கு. படத்தை க்ளிக்கி பெரிதாகப் பார்க்கவும்.
Subscribe to:
Post Comments (Atom)
5 comments:
தெய்வமே!!
அருமையாக வந்துள்ளது ஓவியம்.. உங்களிடம் நிறைய கற்றுக்கொள்ள வேடியிருக்கிரது எனக்கு..
பேனாவில் அழிக்காமல் வரைத்த திறமை அற்புதம்..
கற்றுத் தருகிற அளவிற்கு எனக்கு தகுதி இருக்கிறதா எனத் தெரியவில்லை கோகுலன். காரணம், நான் ஓவியம் முறையாகப் பயின்றதில்லை. தந்தை வழி வந்த பரிசு. உங்கள் ஆர்வத்திற்கு வாழ்த்துக்கள். சந்தேகங்கள் கேளுங்கள், தெரிந்திருந்தால், கண்டிப்பாக உதவுகிறேன்.
உங்கள் பாராட்டுக்கு மிக்க நன்றி.
வலைச் சரம் வழியே வந்தேன். கோகுலன் அனுப்பி வைத்தார்.
கலைவாணியின் பூரண அருள் உங்களுக்கு எப்படி வாய்த்தது என புரிந்து போயிற்று எனக்கு இந்த ஒரு படத்திலேயே!
ராமலஷ்மி மேடம்,
//வலைச் சரம் வழியே வந்தேன். கோகுலன் அனுப்பி வைத்தார்.//
ஆமாம் நானும் பார்த்தேன். ஒரு நாள் அவர் வந்து ஏகப்பட்ட பாராட்டுக்கள் கமெண்ட் போட்டு திக்குமுக்கு ஆடவைத்து விட்டார். இப்ப நீங்கள் :)))
//கலைவாணியின் பூரண அருள் உங்களுக்கு எப்படி வாய்த்தது என புரிந்து போயிற்று எனக்கு இந்த ஒரு படத்திலேயே! //
மனம் ஒரு கனம் ஆடி நிலை திரும்பியிருக்கிறது :) ரொம்ப சந்தோசமா இருக்கு உங்க பின்னூட்டம் படிக்க. இதுவரை எதுவும் பண்ணவில்லை, நிறைய தெரிந்து கொள்ள வேண்டியிருக்கிறது என்று தாழ்மையுடன் சொல்லிக் கொள்கிறேன்.
//இதுவரை எதுவும் பண்ணவில்லை, நிறைய தெரிந்து கொள்ள வேண்டியிருக்கிறது//
இந்த தேடல் இருந்தாலே போதும், தானே தேடி வரும் பலன்கள்.
சித்திரமும் கைப் பழக்கம் செந்தமிழும் நாப் பழக்கம். (வலையில் செந்தமிழும் கைப் பழக்கம் ஆகி வருவது வேறு விஷயம்:)."சித்திரம் பேசுதடி" நிறையப் பேச என் வாழ்த்துக்கள் சதங்கா!
Post a Comment