Friday, November 23, 2007
அணில் - Pen and Ink
அணில் தாவும் போதோ அல்லது அமைதியாய் ஏதாவது தேடிக் கொண்டிருக்கும் போதோ - ஏதேனும் சத்தம் கேட்டால், வாலை புஸ்ஸென்று வைத்துக் கொண்டு, கண்களையும் உருட்டி அங்குமிங்கும் பார்த்து கொள்ளும். அந்தக் காட்சி பார்ப்பதற்கு ரொம்ப அழகாய் இருக்கும். ஒரு புத்தகத்தில் அப்படி இருந்த காட்சியைப் பார்த்து வரைந்தது.
Subscribe to:
Post Comments (Atom)
13 comments:
சதங்கா ..!
எனக்கு ஒரு மாமா இருக்கிறார் நன்றாக வரைவார். ஆனால் அவர் ஒன்றைப்பார்த்தத்தான் வரைவார். அற்புதமான ஓவியன். உங்களது தளம் பார்த்தேன்.
நீங்களும் பார்த்துத்தான் வரைகிறீர்கள். எனது மாமா புகைப்படம் எடுத்தும் பின்னர் அதைப்பார்த்து வரைவார்.
நவீன ஓவியம் அப்படியல்ல. அவரவர் உணர்வு.
ஒவ்வொரு நிறத்தேர்வும் உணர்வை பிரதிபலிப்பன. ஒரு சின்னக் கோடும் உணர்வை சுமந்திருக்கும்.
நளாயினி,
வருகைக்கு மிக்க நன்றி.
//நீங்களும் பார்த்துத்தான் வரைகிறீர்கள். எனது மாமா புகைப்படம் எடுத்தும் பின்னர் அதைப்பார்த்து வரைவார்//
என்ன இப்படி easy-யாக சொல்லிவிட்டீர்கள் :( என்னைப் பொருத்தவரை பார்த்து வரைவது ஒரு கடினமான செயல்.
உ.ம். ஒரு portrait வரைவதாய் இருந்தால் - நீளம், அகலம், வண்ணம், முகபாவங்கள், நெற்றிச் சுருக்கம், கைவிரல்கள், மேல்சட்டை மடிப்புக்கள், இப்படி இன்னும் பல. இதில் ஒன்று தவறினால் கூட அவலட்சணமாகிவிடும்.
//நவீன ஓவியம் அப்படியல்ல. அவரவர் உணர்வு. //
100% accepted. ஆனால் எவ்வளவு நேரம் மக்கள் இதுக்கு செலவிட்டு, ஓவியர் என்ன சொல்ல வருகிறார் என்று பார்ப்பார்கள். அதுவும் இந்த அவசர உலகில் :)
ரொம்ப நன்றி, டெல்பின் மேடம்.
ஓவியங்கள் அருமை.. வாழ்த்துக்கள்
அணில் அருமை அருமை. ஓவியம் சிறந்த முறையில் வரையப் பட்டிருக்கிறது.
really nice drawing sathanga,,keep it up..
நன்றி கிருத்திகா.
நன்றி சீனா ஐயா.
வருகைக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி எர்னஸ்டோ.
அணில் ரொம்ப அருமையாக வந்துருக்கு!
எனக்கும் அணில் ரொம்ப பிடிக்கும்...இங்கே இருக்குற அணில்கள் அளவில் ரொம்ப பெரிசா இருக்குங்க (அணில்கள்தானே இவை?)
தஞ்சாவூரான்,
//அணில் ரொம்ப அருமையாக வந்துருக்கு!//
வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி.
//எனக்கும் அணில் ரொம்ப பிடிக்கும்...இங்கே இருக்குற அணில்கள் அளவில் ரொம்ப பெரிசா இருக்குங்க (அணில்கள்தானே இவை?)//
என்ன இப்படிக் கேட்டுப்புட்டீங்க. அணிலே தான், 'நார்த் அமெரிக்கன் க்ரே ஸ்குரெல்' என்கிறார்கள். சுட்டியில் சில அணில் படங்கள் அருமையாய் உள்ளது. பாருங்கள்.
//என்ன இப்படிக் கேட்டுப்புட்டீங்க. அணிலே தான், 'நார்த் அமெரிக்கன் க்ரே ஸ்குரெல்' என்கிறார்கள். சுட்டியில் சில அணில் படங்கள் அருமையாய் உள்ளது. பாருங்கள்.//
அவசரத்தில் பின்னூட்டியதால், பொருள் மாறிவிட்டது :)
நான் உங்க படத்தை சந்தேகப்படவில்லை. அமெரிக்காவில் அணில் என்று நான் நினைக்கும் (நீங்கள் லின்க் கொடுத்த ஸ்குரில்) பிராணி அளவில் பெரிதாகவும், முதுகில் கோடுகள் இல்லாததாகவும் உள்ளது. சிப்மன்க் என்பது அணில் என்று நினைக்கிறேன். தவறாகவும் இருக்கலாம்!
"என்ன இப்படி easy-யாக சொல்லிவிட்டீர்கள் :( என்னைப் பொருத்தவரை பார்த்து வரைவது ஒரு கடினமான செயல்."
நானும் அதைத்தான் சொல்ல வந்தேன். ஆனாலும் புகைப்படக்கருவிகள் இனி அதற்கு உதவியாக இருக்கிறது. இங்கு உள்ள ஓவியக் கல்லுரி ஒன்றிற்கு செல்ல வாய்ப்பு கிடைத்தது. அங்கே ஓவியம் வரைகிறபோது ஆக்களை நிக்க வைத்து அதை பார்த்தும் கீறுகிறார்கள்.புகைப்படமாக எடுத்தம் வரைகிறார்கள். கீழே உள்ள லிங்கை கிளிக்செய்தால் புரியும். அத்தகையவற்றை ஆக்களை நிக்கசெய்து வரைகிறார்கள்.(சிலைகளாகவும் செய்கிறார்கள்.)
http://www.hat.net/album/europe/italy/006_florence_rape_of_sabine_woman.jpg
//நவீன ஓவியம் அப்படியல்ல. அவரவர் உணர்வு. //
100% accepted. ஆனால் எவ்வளவு நேரம் மக்கள் இதுக்கு செலவிட்டு, ஓவியர் என்ன சொல்ல வருகிறார் என்று பார்ப்பார்கள். அதுவும் இந்த அவசர உலகில் :)
நவீன ஓவியங்கள் பார்ப்பவர் மனதில் பெரியதொரு அலையையே ஏற்படுத்தி மறைகிறது. அதுவே காலப்போக்கில் நின்று ரசித்துணரவைக்கும். நம்மவரிடத்தில் அதன் தாக்கம் இன்னும் பெரிதாக எழவில்லை. காலப்போக்கில் வரலாம்.
Post a Comment