Thursday, November 29, 2007
Grey Wolf - Pen and Ink
பொதுவா, இந்த மாதிரி மிருகங்களை வரையும் போது, நம்மைப் பார்ப்பது போல வரைவது சற்றுக் கடினம். அதனால இந்தப் படத்தைப் பார்க்கும்போது அது பிடித்திருந்ததால் வரைய ஆரம்பித்தேன். பின்னர் தான் தெரிந்தது, தோலின் மடிப்பு / சுருக்கத்துக்கேற்ப சிறு வரிகள் கடுமையாக இருந்ததையும். அப்படியே வரைந்திருக்கிறேன். நீங்கள் தான் சொல்ல வேண்டும் படம் எப்படி இருக்கிறது என்று.
Subscribe to:
Post Comments (Atom)
8 comments:
நன்றாக இருக்கிரது சாமி!
வால் மட்டும் சற்று அளவிற்கு அதிகமானதாக உள்ளது!
நன்றாக இருக்கிறது. நான் இதுவரை இப்படி வரைய முயற்சிக்கவில்லை. நீங்கள் சொன்னா பின்னர் தான் தெரிகிறது மடிப்பு வரிகள் கடுமையாக இருப்பதை.
சதங்கா,
உங்க படத்துல எல்லாம் ஒரே பென்சில் இல்லைன்னா பிரஸ் உபயோகப்படுத்தினா மாதிரி இருக்கு. பென்சில்னா 6B வரைக்கும் கிடைக்குது. Pencil shadingக்கு அதுதான் ஆதாரம், பிரஷ்னாலும் பல அளவுகள்ல கிடைக்குது. ஒரு வேகத்துல சொல்லிட்டேன், உங்களுக்கு தெரிஞ்சிருக்கும். மக்களுக்கும் தெரியட்டுமேன்னுதான்..
படம் நல்லா இருக்கு!
//வால் மட்டும் சற்று அளவிற்கு அதிகமானதாக உள்ளது!//
உங்கள் மாணவர்களாகிய எங்களைப் போல்-னு சொல்றீங்களா ;)
பேனாவில் வரைந்ததால், வாலை சிறிது குறைக்கமுடியவில்லை. உங்கள் கருத்துக்களுக்கு நன்றி வாத்தியார் ஐயா.
நன்றி நளாயினி மேடம்.
இளா,
கொஞ்சம் இல்லை ரொம்பவே வேகமா சொல்லீட்டீங்க ;) Title-லேயே சொல்லியிருக்கேனே இவை பேனாவில் வரைந்தவை என்று. கோடுகளிலேயே shades கொண்டுவரும் உத்தி பேனாவில் சிறந்தது. அப்படிப் பட்ட படங்கள் சிலவற்றைத் தான் பதிந்திருக்கிறேன்.
//உங்களுக்கு தெரிஞ்சிருக்கும். மக்களுக்கும் தெரியட்டுமேன்னுதான்..//
இப்பல்லாம் மக்கள் நிறைய தெரிஞ்சி வச்சிருக்காங்க என்பது என் எண்ணம். நாம திரும்பவும் சொல்லனுமா ?
மிக்க நன்றி குட்டிப்பிசாசு.
Post a Comment