வலையுலக அன்பர்கள் அனைவருக்கும் வணக்கம் !
சித்திரக்கலை மீது எனக்கு பால்ய பருவத்தில் இருந்தே ஆர்வம் உண்டு. எனது அப்பா நன்றாக வரையக்கூடியவர். அதனாலேயே ஆர்வம் எனக்கும் வந்திருக்கலாம் ;-)
என் அப்பா, அவ்வப்போது வரையற எல்லாத்தையும் ஒரு இடமா சேர்த்துவை, பின்னாளில் உதவும் என்பார். அது இந்த வலையுலகமா அமைந்ததில் பெருமை கொள்கிறேன். முக்கியமா உங்களுடன் பகிர்ந்து, உங்கள் கருத்துக்களை அறியவும் ஆவலாய் உள்ளேன்.
நிறைய வரைந்திருந்தாலும், என்னிடம் இருக்கும் flashback படங்கள் சிலவே. அவற்றை scan செய்து அவ்வப்போது பதிவிடுகிறேன். சிலவற்றின் தரம் சிறிது குறைவாய் இருக்கும். பொருத்துக் கொள்ள வேண்டுகிறேன்.
மற்றும் எனது நண்பர்கள் வரைந்த படங்கள், என்னைக் கவர்ந்த ஓவியர்களின் படங்கள், எல்லாம் இங்கு பதியலாம் என்றிருக்கிறேன்.
சில படங்கள் :
கவியரசர் கண்ணதாசன் - Pencil Sketch
Charlie Chaplin - Water Color
Violin - Water Color
Expression - Pencil
வழக்கம்போல வந்து உங்கள் ஆதரவைத் தொடர்ந்து தருமாறு கேட்டுக் கொள்கிறேன் !!!
Tuesday, November 13, 2007
Subscribe to:
Post Comments (Atom)
4 comments:
வித்தியாசமான சிந்தனை, முயற்சி...தொடருங்கள்..வாழ்த்துகள்
பாச மலர்,
வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் மிக்க நன்றி.
ஓவியனென்னும் உன்னதகலை உங்களுக்கு வருமா!
நீங்கள் கொடுத்துவைத்தவர்.
நான் ரசிப்பேன். பாரிசில் ஓவியத்துக்குக் குறைவில்லை.
யோகன்,
//ஓவியனென்னும் உன்னதகலை உங்களுக்கு வருமா!
நீங்கள் கொடுத்துவைத்தவர்.//
எல்லாம் உங்கள் ஆசீர்வாதம்.
//நான் ரசிப்பேன். பாரிசில் ஓவியத்துக்குக் குறைவில்லை.//
ரசிப்பதே கலை தானே யோகன். ஆஹா பாரிசிஸ், கலைகளின் கோட்டை அல்லவா. வாழ்வில் ஒருமுறையாவது பாரிஸ் பார்ர்க்க வேண்டும் என்று எண்ணியிருக்கிறேன். இன்னும் அதற்கு காலம் வரவில்லை.
Post a Comment