
பொதுவா புகைப்படங்கள் பார்த்து வரைந்து பழக்கம் இல்லை. ரொம்ப நாள் முயற்சி செய்யணும் என்ற எண்ணம் காற்றில் கரைந்த வண்ணம் இருந்தது. கரைய விட்டிருவோமா என்ன ?! குசேலனுக்கு அப்புறம், எங்க வீட்டு குட்டி தேவதையின் படம். சக்கிசீஸஸில் எடுத்தது. வரைபடம் போலவே இருந்த (இப்ப புரிஞ்சிருக்குமே சூட்சுமம் :))) அந்தப் படம் என்னை வெகுவாக ஈர்த்தது.
வழக்கம் போல கட்டம் கட்டி (5" x 4") 2b பென்சில் அவுட்லைன். பிறகு கட்டமெல்லாம் அகற்றி, சார்கோலில் தலைமுடி. அப்புறம் 2b பென்சிலில் ஷேட்ஸ். பேப்பர் கொண்டு ஷேட்ஸ் நல்லா ப்லென்ட் பண்ண, ஓரளவுக்கு எங்க வீட்டு குட்டி தேவதை போல (90% என்று சொல்லலாம்) வந்தது படம். எல்லாம் ஒரு மூன்று மணிநேரங்கள் ஆனது.
படத்தை முடித்து, அவங்க கிட்ட ஆவலா காட்டினா, அவங்களுக்கு அந்த அளவிற்கு நிறைவு இல்லை :((
