பல ஆண்டுகளாக வாட்டர் கலர் பயன்படுத்தி, அக்ரிலிக்கும் பயன்படுத்தி வந்திருக்கிறேன். ஆனால் இந்த ஆயில் பெயிண்டிங் மட்டும் பயன்படுத்தியதில்லை. ஒவ்வொரு முறையும் யோசித்து, அப்படியே விட்டுவிடுவேன்.
சமீபத்தில் (அலுவலக நிமித்தம்) ஒரு வகுப்பில், "நீங்கள் உங்கள் ஊக்கத்தை பன்மடங்கு பெருக்கி, தள்ளிப் போட்டு வந்த ஒரு காரியத்தை முடிப்பதாய் உறுதி எடுத்துக் கொள்ளுங்கள். ஐந்து வாரங்கள் கழித்து அதை நிறைவேற்றிய விதத்தைப் பகிர்ந்து கொள்ளுங்கள்" என்றனர். நமக்குத் தான் எல்லாத்துக்கும் ஒரு காரணம் வேண்டுமே :) இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி உறுதி எடுத்துக் கொண்டேன்.
அலைந்து திரிந்து ஆயில் பெயிண்டிங்க் தேவையானவை எல்லாம் வாங்கி, அதன் நுணுக்கங்களை இணையத்தின் வழி கற்று, இந்த "கேலா லிலி" வரைய அமர்ந்தேன். இரண்டு நாட்கள், சுமார் ஐந்து ஐந்து மணி நேரம் எடுத்தது படத்தை முடிக்க. ஆனால் வண்ணம் காய்வதற்கு ஐந்தாறு நாட்கள் ஆனது.
ஓரளவுக்கு 'லிலி' நினைத்ததை விட நன்றாக வந்திருந்தது. படத்தை வகுப்பறையில் காண்பித்தபோது, ஒரே ஆரவாரம் தான் (அந்த அளவிற்கு படம் இல்லை என்பது உண்மை ;)). ஆனால் மனம் மிக திருப்தியானது அன்று.
படத்தைப் பெரிது செய்து பார்த்து, உங்கள் கருத்துக்களையும் பகிர்ந்து கொள்ளுங்கள்.
Friday, April 18, 2008
Subscribe to:
Post Comments (Atom)
6 comments:
அருமை.
இன்னும் கொஞ்சம் brightஆ இருந்திருந்தா இன்னும் தூக்கியிருக்கும்.
சர்வேசன்,
வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி. உண்மையைச் சொல்ல வேண்டும் என்றால், எனக்கும் இந்தப் படத்தில் நிறைய குறைவது போலவே தோன்றுகிறது.
என்ன முதன் முதல் படம் என்பதால், நினைத்ததை விட நன்றாக வந்திருந்தது. அதான் சந்தோசமே !
இந்த சுய தம்பட்டம், மற்றவர்களை ஊக்குவிக்கவே ;))
படம் அருமையா இருக்கு. கொஞ்சம் மஞ்சள் கூடுதலா இருக்கணும்.
இந்தச் செடி நம்ம வீட்டுலே இருக்குங்க.
வாங்க டீச்சர்,
அடுத்த படத்தில் improve செய்துக்கறேன். உங்கள் கருத்துக்கு நன்றி.
//இந்தச் செடி நம்ம வீட்டுலே இருக்குங்க.//
நீங்கள் தான் நல்ல ரசிகை ஆச்சே. மிக்க மகிழ்ச்சி.
அற்புதம்.
//என்ன முதன் முதல் படம் என்பதால், நினைத்ததை விட நன்றாக வந்திருந்தது. அதான் சந்தோசமே ! //
முதல் படம், முதல் கவிதை, முதல் கதை எல்லாமே பரவசம்தான்.
ராமலஷ்மி மேடம்,
//முதல் படம், முதல் கவிதை, முதல் கதை எல்லாமே பரவசம்தான். //
பின்னே ! உண்மையிலேயே அது ஒரு பரவசம் தான். அந்த டென்சன், பரபரப்பு, நானம் (எல்லாரும் என்ன சொல்லுவாங்களோனு) எல்லாம் கலந்து செய்த கலவை அல்லவா. நீங்கள் ஒரு நல்ல ரசிகை என உங்கள் பின்னூட்டம் தெரிவிக்கிறது :)))
Post a Comment